search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதார் இணைத்த வங்கி கணக்கு எண் தெரிவிக்க வேண்டும்
    X

    ஆதார் இணைத்த வங்கி கணக்கு எண் தெரிவிக்க வேண்டும்

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, குமரி மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி நாகர்கோவில் மண்டல அலுவலகம் சார்பில் வங்கி சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம், நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநகர மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி கள் வழங்கி பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கி களின் வாயிலாக பல்வேறு தரப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியானது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட வங்கிகளின் மூலமாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசால் வழஙங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வங்கி களின் வாயிலாக என்னென்ன கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் முதல் கலை ஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல் பாட்டு வருகிறது. இதற்கான உதவி தொகை வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும். தற்போது விண்ணப்ப வினியோகம் வீடு, வீடாக நடக்கிறது. விண்ணப்ப பதிவு முகாம் 24-ந் தேதி தொடங்குகிறது.

    அந்தந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம், இடம் நாள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்ப பதிவு நடக்கும். இந்த விண்ணப்ப பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதார் இணைத்த வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பதிவு எளிதாக இருக்கும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வங்கிகள் மக்கள் சேவையில் சிறந்து விளங்கு கின்றன. கடன் உதவிகளை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் ரூ.2.08 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப் பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள், கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் (சென்னை) சந்தீப்தா குமார் நாயக், நாகர்கோவில் மண்டல அலுவலர் பழனி சாமி, மாவட்ட தொழில் மைய அலுவலர் பெர்பெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×