என் மலர்
கன்னியாகுமரி
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
- பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கோழி போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது.
மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாகவே இருந்தது. காலை 10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரமாக மழை கொட்டியது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.46 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 12, பெருஞ்சாணி 7.2, சிற்றாறு 1-6.4, மாம்பழத்துறையாறு 8.4, பூதப்பாண்டி 6.2, சுருளோடு 12.6, கன்னிமார் 8.4, பாலமோர் 13.4, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.6, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 4.1, கோழி போர்விளை 4.2, முள்ளங்கினா விளை 18, திற்பரப்பு 10.9, நாகர்கோவில் 5.4.
- கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளன.
- முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 2023-24-ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 2-ந்தேதி அன்றும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி அன்றும் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடை பெற உள்ளன.
பேச்சு போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலா கவும் தெரிவிக்கப்படும்.
கல்லூரி போட்டியில் வெற்றிபெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாண வர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
- ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் மட்டுமின்றி ரேஷன் அரிசியும் கடத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊரம்பு பகுதி வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக அங்கு கடை அமைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி கடத்தப் படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்டத் தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது. ஆகவே இந்த கடத்தல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
- தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம், நாகர்கோவிலுக்கு அடுத்து, குமரியின் 2-வது பெரிய வர்த்தக நகரமாக விளங்கு கிறது. இங்கு பல்வேறு காரணங்களால் கடுமை யான போக்குவரத்து நெருக் கடி உள்ளது. பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
மேலும் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலைகளில் தொடர்ந்து கேபிள் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் பைப்பு களுக்காக தோண்டப்படும் பள்ளங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையோர நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காந்தி மைதானத்தை சுற்றியுள்ள நடைபாதைகளில், பெருங் கடை வியாபாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே நடைபாதை களில் இருக்கும் பூக்கடைகள் மற்றும் நடைபாதை கடை களை அப்புறப்படுத்து வதோடு, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
- கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார்.
- கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று அவர் பார்வையிட்டார்.
திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விவேகானந்தர் மண்டபம் சென்று பார்வையிட்டார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, நீலகண்ட விநாயகர், மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலயன், திருவேங்கட விண்ணகர பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் தரிசனம் செய்தார். குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரெத்தின வேல் பாண்டியன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் கவர்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார். அங்கு அவரை கேந்திர துணைத்தலைவர் அனுமந்த ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் ஆகியோர் வரவேற்றனர். கேந்திராவில் உள்ள பாரதமாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். அதன் பிறகு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து விமானத்தில் அவர் சென்னை செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- தாய் மீதும் தனது மாமா ஷாம்லு மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
- தாய் தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் லீமாராணி (வயது 42). இவருக்கு சாம்லன் (25) என்ற மகனும் ஷாம்லி (23) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிராங்கோ என்பவருக்கும் ஷாம்லிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஷாம்லி கண வருடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த வாரம் ஊருக்கு வந்த ஷாம்லி தனது பெற்றோர் வீட்டுக்கு வர வில்லையாம். மேலும் தாயுடன் பேசவும் இல்லை.
இதனால் மன வேதனை அடைந்த லீமாராணி, தனது அண்ணன் ஷாம்லுவுடன் மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டிற்கு வர மாட்டேன் என்று ஷாம்லி கூறிவிட்டாராம். இதனால் லீமாராணி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக ஷாம்லி, தாய் மீதும் தனது மாமா ஷாம்லு மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது லீமாராணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து திருவட்டார் சென்று வருவதாக கூறிச் சென்ற அவர், விஷம் குடித்த நிலையில் சாலை யில் மயங்கி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்த வர்கள் லீமாராணியை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரி சோதித்து விட்டு, லீமா ராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தங்கை மேரி மெற்றில்டா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தினார். லீமாராணி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து கல்லூரிக் அனுப்பி வைத்தார்.
தான் இறந்தபிறகு தனது வீட்டை மகள் ஷாம்லிக்கு கொடுப்பதாக லீமாராணி கூறி இருந்ததாக கூறப்படுகிறது. சொத்து விவகா ரத்தில் மகள் போலீசில் புகார் கொடுத்ததால், தாய் தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்று ஆடி 2-வது செவ்வாய்
- சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்
கன்னியாகுமரி :
அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வை யாரம்மன் கோவில், பெரு மாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில்கள் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 2-வது செவ்வாயையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவி லில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழி பட்டார்கள். கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழி பாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவரூப தரிசன மும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷ பூஜையும், உஷ தீபாராதனை யும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாரா தனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜை நடக்கிறது.
பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந் தந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
- அரண்மனைக்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும்.
- பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்
தக்கலை:
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.
இந்த அரண்மனைக்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். அதன்படி, நேற்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இன்று காலை ஏராளமானோர் வாகனங்களில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தபோதிலும் அரண்மனை நுழைவு வாயில் திறக்கப்படவில்லை.
இதுபற்றி விசாரித்த போது, அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால்தான் இன்று காலை அரண்மனை கதவு திறக்கப்படவில்லை.
இதனால் பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
- கண்களை கருப்பு துணியால் மூடி பங்கேற்றனர்
- நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது
நாகர்கோவில் :
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இரு சமுதாயத்தினர் இடையே யான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது என்பதற்கு கண்டனம் தெரிவித்தோம், அங்கு பெண்கள் நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-சிறுபான்மை யினர் மக்கள் மீது அநீதியை திணிப்பது தான் மோடியின் ஆட்சியாக இருந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வருகிறது.
குறிப்பாக பெண் கல்வி, மகளிர் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் நடந்து வருகிறது. மணிப்பூரில் நடந்து வரும் இரு சமூகத்தினர் இடையேயான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணப் படுத்தப்பட்டு வருகிறார்கள். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை பாரதிய ஜனதா செய்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டன் கூட பா.ஜ.க.வை வெறுக்கி றார்கள் என்பதுதான் உண்மை. அமைதி பூங்கா வாக இருக்கும் தமிழகத்தை கவர்னரை வைத்து கலவர பூமியாக மாற்ற பா.ஜ.க. நினைக்கிறது. மணிப்பூர் விவகாரத்திற்கு பா.ஜ.க. வுக்கு தக்க பாடத்தை வருகிற தேர்தலில் நாட்டு மக்கள் கொடுப்பார்கள்.
பா.ஜ.க. ஆட்சி நடத்திய பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், பசலியான், மாநகர செயலாளர் ஆனந்த், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, மதியழகன், பிராங்கிளின், செல்வம் லிவிங்ஸ்டன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜனஸ் மைக்கேல், மேரி ஜெனட் விஜிலா, ஜெசிந்தா, கரோலின், மாநகர மகளிர் அமைப்பாளர் அம்மு ஆன்றோ, அழகிய பாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் தங்களது கண்களை கருப்பு துணியால் மூடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது.
- குமரியில் இன்று 400 இடங்களில் தொடங்கியது
- விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து அதிகாரிகள் வாங்கினார்கள்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது. இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடைபெற உள்ள 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று 24-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட 400 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
நாகர்கோவில் மாநகர பகுதிகளிலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.
முகாமில் இருந்த அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். விண்ணப்பம் முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களு டன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர்.
விண்ணப்ப பதிவு முகாம்களில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விண்ணப்ப முகாம்களை பூர்த்தி செய்து வந்திருந்த பொதுமக்கள் சிலர் வங்கி புத்தகத்துடன் ஆதார் கார்டு இணைக்காத வங்கி கணக்கை கொண்டு வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து அதை பரிசோதித்து அதிகாரிகள் அதை சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் அதை சரி செய்து பொதுமக்கள் கொண்டு வந்தனர்.
அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு முகாமிலும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.
ஒரு சில இடங்களில் பெண்கள் அதிகமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விண்ணப்ப படிவங்களை வழங்க வந்த பொதுமக்களிடம் ஊழியர்கள் விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து வாங்கினார்கள். இன்று தொடங்கிய முகாம் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.
இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 384 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் அந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- சிறப்பு பாடல், நடனம், கவிதை மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது
- ஆசிரியர்களும் கருப்பு வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டனர்
கன்னியாகுமரி :
கருங்கல் பாலூரில் இயங்கிவரும் பெஸ்ட் மே ல்நிலைப்பள்ளியில் வெள்ளை உள்ளம் கொண்ட மழலையர்களால் நீதி நேர்மையை வெளிப்படுத்தும் நிறமான கருப்பு வெள்ளை நிற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னி லை வகித்தனர்.
இந்நிகழ்வில் மழலையர் பிரிவின் மாணவர்கள், கருப்பு வெள்ளை வண்ண ஆடைகளை அணிந்து வந்து கலந்துகொண்டனர். மேலும் நோக்கவுரை, சிறப்பு பாடல், நடனம், கவிதை மற்றும் மழலையர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழா மேடையானது பலவிதமான கலைப்பொருட்களால் அழகுபடுத்தப்பட்டு கண்ணை கவரும் விதமாக இருந்தது. இவை அனைத்தும் கருப்பு வெள்ளை நிற கருப்பொருட்களை விளக்கும் வண்ணமாக இருந்தது.இந்நிகழ்வானது மழலை யர்கள் கருப்பு வெள்ளை தொடர்பான பொருட்க ளையும், சாலை விதிகளின் முக்கியத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. மேலும் ஆசிரியர்களும் கருப்பு வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேற்பார்வையில் மழலையர் பிரிவு ஆசிரியர்கள், மழலை யர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பதவியேற்பு விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்பு
- பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உறுப்பினராக இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்குச்சாலையைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ் இடைகோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார் தோவாளை சண்முகா நகரை சேர்ந்த சுந்தரி கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா இன்று நடந்தது. சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபா ராமகிருஷ்ணன், ராஜேஷ், சுந்தரி, ஜோதி ஷ்குமார்,துளசிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
இதை தொடர்ந்து அறங்கா வலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார்.நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பசலியான், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், ,திமுகஅணி அமைப்பாளர் அகஸ்தீசன், இ. என்.சங்கர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்று கொண்ட பிரபாராம கிருஷ்ணன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார்.






