என் மலர்
கன்னியாகுமரி
- தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
- கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த உத்தரவின்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அறிவுரையின் பேரில் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி மரம் வெட்டும் தொழில், விவசாய தொழிலில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துப்படுகிறார்களா? என்று எனது மண கண்ட பிரபு) தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தக்கலை, திருவட்டார், ஆற்றூர் மற்றும் அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடி மைகளாக பணிக்கு அமர்த்து வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற எண்ணிலும் புகார் தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
- மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.
கன்னியாகுமரி:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.
அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.
இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரபரப்பு தகவல்கள்
- 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).
இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
- காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா சார்பில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சிலாங்குன்று மலைப் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணி களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி விலையில்லா வீட்டு மனைப்பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் உலக வன நாள் தினமான மார்ச் 21-ந்தேதியன்று பேச்சிப்பாறை ஊராட்சி, சிலாங்குன்று பகுதியில் இதுநாள் வரை மின்வசதி இன்றி வசிக்கும் 4 காணி மலைவாழ் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகள் உட்பட 9 குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள் தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறை வேற்றி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாடு அரசானது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அவர்கள் தங்குவதற்கான வீடுகள் வழங்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் 2 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துரையாடினார்.
முன்னதாக, பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெருவிழா 6-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும்.
- 15-ந்தேதி சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.
விழாவின் முதல்நாளான வருகிற 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனைக்கு நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.
விழாவின் 15-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் மரிய டேவிட் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 7 மணிக்கு இரையுமன்துறை பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றனி தலைமை தாங்கி மலையாள திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குத்தந்தை மகிமைநாதன், பங்கு இறைமக்கள், பங்குபேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ் பங்குபேரவை உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
- வேலம்மாள் பாட்டி உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் புத்தேரி அருகே கீழகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 92). இவர் தமிழக அரசு கொரோனா ஊரடங்கின்போது வழங்கிய ரூ.2000 பணம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கியபோது தனது பொக்கை வாய் சிரிப்பால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதன் மூலமாக வேலம்மாள் பாட்டி பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரை சந்தித்து தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இருப்பினும் பாட்டி அங்கு செல்லாமல் கீழக்கலுங்கடி பகுதியில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக வேலம்மாள் பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது உடலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
- விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
- 6-ந்தேதி அன்னையின் தேர்பவனி திருவிழா கொடியிறக்கம் நடக்கிறது.
மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கல்லறை மந்திரிப்பு, 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவின் முதல்நாளான இன்று காலை திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். செட்டிச்சார்விளை அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு மறைமாவட்ட செயலாளர் கிளாட்ஸ்டன் ஜெபமாலை, சிறப்பு புகழ்மாலையை நிறைவேற்றுகிறார். வட்டம் அருட்பணியாளர் சகாயதாசு மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி காலை 7 மணிக்கு குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட முதல்வர் ஆன்றணி சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், திருவிழா கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இறைஞர் மன்ற ஆண்டு விழா, இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மறவன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆன்றணி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத், பங்குதந்தை, பங்கு அருட்பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
- கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
- மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.
நாசர்கோவில் :
நாசர்கோவில் ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. பத்மனாப்புரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாஸ்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி முதல்வர் சகாயசெல்வி வாழ்த்துரை வழங்கினார். கிறிஸ்துதாஸ் வில்லியம்ஸ், மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
சகாய செல்வராஜன், ரத்ததான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரசன் கேப்ரீனா மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து முகாமை வழிநடத்தினர். இதில் மாவட்ட ரத்ததான கழக தலைவர் நாஞ்சில் ராஜ், கல்லூரி தாளாளர் மேரி ஹில்டா, உதவி முதல்வர்கள் லீமா ரோஸ், சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர். ஹோலிகிராஸ் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெபிஜா மின்னி, பேராசிரியை கிரேசிலின் லிடியா மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.
- மேயர் மகேஷிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்
- வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிட மிருந்து மேயர் மகேஷ் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று அவர் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
அப்போது வடசேரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், மேயர் மகேசை சந்தித்து பேசினார்கள். காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வடசேரியில் தொடர்ந்து மார்க்கெட் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கனகமூலம் சந்தை யில் 123 கடைகள், கடந்த 17 மாதங்களாக காலியாக இருந்து வருகிறது. பலமுறை ஏலத்துக்கு வைத்தும் அவை ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரி பகுதியில் புதிதாக ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். புதிதாக ரூ. 55 கோடியில் பஸ் நிலையம் அமைக்கும் போது அந்த பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. அந்த கட்டிடத்தில் காய்கறி சந்தையை அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெரியவந்தது. பஸ் நிலையத்தை யொட்டி காய்கறி மார்க்கெட் இருந்தால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு அண்ணா பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை மேற் கொண்டுள்ளோம்.
ஏற்கனவே கனகமூலம் சந்தையில் உள்ள கடைகள் குறுகிய அளவில் உள்ளது. இனிவரும் காலங்களில் கடையின் அளவை அதிகரித்து கட்ட நட வடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர்
- மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆலயத்தில் முப்பந்தல் ஸ்ரீ ஆலமுடு அம்மன் கோவில் ஒன்றா கும். இங்கு ஆடி மாத கொடையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் பால்குட ஊர்வலமும், பூக்குழி திருவிழாவும் நடந்தது.
ஆரல்வாய்மொழி வடக்கூர் குட்டி குளத்தான் கரை இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர். ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்பு ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜை, நள்ளிரவு பக்தர்கள் பரவசத்தோடு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு ஊட்டுப்படைப்பு, அன்னப்படைப்பு நடந்தது. மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கொடை விழா ஏற்பாடுகளை ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் டாக்டர் அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
- கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை ஆய்வு செய்த அவர், கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டம் எப்படி நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார். அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார்.
ஆய்வு முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 10ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திக்கும் போது வலியுறுத்துவேன். பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கண்டிப்பாக தேவையான ஒன்று. இது தொடர்பாகவும் பேசி ராஜகோபுரம் கட்ட ஏற்பாடு செய்வேன்.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான யானை இல்லாததால் வாடகைக்கு யானை அமர்த்தி திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் அமர்ந்து இளைப்பாருவதற்கு வசதியாக திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போல சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சேதம் அடைந்த தேர்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்ப தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






