search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
    • கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை ஆய்வு செய்த அவர், கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டம் எப்படி நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார். அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார்.

    ஆய்வு முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 10ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திக்கும் போது வலியுறுத்துவேன். பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கண்டிப்பாக தேவையான ஒன்று. இது தொடர்பாகவும் பேசி ராஜகோபுரம் கட்ட ஏற்பாடு செய்வேன்.

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான யானை இல்லாததால் வாடகைக்கு யானை அமர்த்தி திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் அமர்ந்து இளைப்பாருவதற்கு வசதியாக திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போல சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சேதம் அடைந்த தேர்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்ப தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×