என் மலர்
கன்னியாகுமரி
- இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை
- சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர்.
கன்னியாகுமரி :
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை இதனால் சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர். கடல் சகஜநிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆரல்வாய்மொழியில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றது
- மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள உற்சாக பயணம்
நாகர்கோவில் :
மதுரையில் இன்று அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண் டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து தொண் டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரைக்கு சென்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஏற்பாட்டில் நிர்வாகிகள் வாகனங்களில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டனர்.
இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத் துக்குட்பட்ட அகஸ்தீஸ் வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். நாகர்கோவில் பகுதியில் இருந்து முன்னாள் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், வடக்கு மாநகர செயலாளர் ஸ்ரீலிஜா ஏற்பாட் டில் ஏராளமான நிர்வாகிகள் வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
குமரி மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஆரல்வாய்மொழி யில் இருந்து ஒன்று சேர இன்று காலை மதுரைக்கு சென்றனர்.
வாகனங்கள் அனைத் தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. குமரி மாவட் டத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிர்வாகிகள் பலரும் சீருடையுடன் கையில் கட்சி கொடியுடன் புறப்பட்டு சென்றனர். இன்று காலையில் மட்டுமே 500-க் கும் மேற்பட்ட வாக னங்களில் நிர்வாகிகள், பொதுமக்கள் சென்றனர்.
ஏற்கனவே நேற்று இரவும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் சென்று இருந்தனர். குமரி மாவட் டத்தில் இருந்து மதுரைக்கு சென்ற நிர்வாகிகளுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதி களையும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- இஸ்ரோ விஞ்ஞானி ராஜன் பேச்சு
நாகர்கோவில் :
சுங்கான்கடை, வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது.
இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இந்தியா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, வடிவமைப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தலைசிறந்ததொரு அறிவு மையமாக இருந்து வருகிறது. இந்தியா உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை கொண்டு உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தி யர்களே, தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருக்கின்ற னர். நீங்கள் எந்தப் பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்த துறையினை தேர்வு செய்யுங்கள். பெற்ற பட்டமே போதும் என்றில்லாமல் உங்களது விருப்பத்துறையில் இன்றளவும் உள்ள அறிவை வளர்க்க வேண்டும்.
படித்து முடித்து விட்டோம் என்றில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் காலச் சூழலுக்கு ஏற்ப, தினம் தினம் புதிய மாற்றங்களை கொண்டு வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விழிப்புடன் இருந்து என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு அறிவை பெருக்கும் வகையில் நேரத்தை செலவிடுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள் நீங்களும் விஞ்ஞானி களாகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்பு கல்லூரியின் தலைவர் முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட் உறுதிமொழியை படிக்க அனைத்து பட்டம் பெற்ற மாணவர்களும் எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் டயானா, டீன் அலெக்ஸ் ராஜா பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் பிரியா, டிவின், டெல்பின், நந்தபிரியா, சுனிதாகுமாரி, ராஜா கிங்ஸ்டன் ஆகியோர் விரிவுரையாளர்களுடன் இணைந்து செய்து இருந்தனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பணிகள் தடுத்து நிறுத்தம்
- மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன்.
கன்னியாகுமரி :
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கைளை தனியார் நிறுவனம் தொடங்கியது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து உடனடியாக இப்பகுதியில் உள்ள மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதன்பேரில் உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.
அப்போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, கருங்கல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வினோ மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- தாமரை பூ ரூ.15-க்கு விற்பனை
- மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.
கன்னியாகுமரி :
கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டா டப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகையை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வீடுகள் முன்பு அத்த பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் பண்டிகையை வரவேற்பார்கள். ஓணம் பண்டிகை இன்று தொடங்கி யதையடுத்து குமரி மாவட் டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் ஏராளமா னோர் குவிந்திருந்தனர். மேலும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் ஏரா ளமானோர் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு இன்று வந்திருந்தனர். இதனால் காலையிலேயே தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்க ளும் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் வியாபாரம் களை கட்டி இருந்தது.
கேரள வியாபாரிகள் கலர் பூக்களை விரும்பி வாங்கி சென்றனர். கேந்தி, அரளி, வாடாமல்லி, கொழுந்து, மரிக்கொழுந்து, பட்டன் ரோஸ், தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தை விட பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி பூ கிலோ ரூ.500-க்கும் மல்லிகை ரூ. 700-க்கும் விற்கப்பட்டது. தோ வாளை அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.150, கோழிப்பூ ரூ.60,
மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.70, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.700, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.
தாமரை பூவின் விலை கணிசமான அளவு உயர்ந் துள்ளது. ஒரு தாமரைப்பூ 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப் பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினத்தை யொட்டி இந்த மாதம் முழுவதும் பூக்கள் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். ஓணம் பண்டிகை தொடங்கியதையடுத்து இன்னும் கேரளாவில் இருந்து ஏராளமான வியா பாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வரு வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஓணம் பண்டி கையையொட்டி தினமும் அத்தப்பூ கோலம் போடப் படும். பள்ளி, கல்லூரிகளி லும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டா டப்படுவதை யடுத்து பூக்கள் வியாபாரம் இன்னும் ஒரு வாரத்திற்கு சூடு பிடித்திருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி வெள்ளங்கட்டி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாண்றோஸ் (வயது 76). இவரது மகன் ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ராஜசேகருக்கு சந்தியா (26) என்ற மனைவியும், ஷாட்லின் ஷான் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதையடுத்து ராஜ சேகரின் தந்தை ஜாண் றோஸ் மருமகளையும், குழந்தையையும் கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சந்தியா குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
நாகர்கோவில் :
நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு தமிழகத்தின் உடைய வளர்ச்சிகளை எப்படி தடுக்கலாம் என்று செயல்பட்டு வருகிறது. அதை முறையடித்து சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
கல்வியில் சிறந்து தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகம் உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்.அரசு பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டு பிள்ளையும் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவ படிப்பு அல்லது மேற்படிப்பு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அந்தப் படிப்பு போதாது நீட் தேர்வு வேண்டும் என்று கூறுகிறீர்கள். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது தகுதி தேர்வாகும். வசதி படைத்தவர்கள் நீட் தேர்வை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.ஆனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். இதனால் தான் நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வருகிறது. மக்களிடையே குறைகளை பேசி அதை தீர்க்க நாடாளுமன்றம் குரல் கொடுத்து வருகி றார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்று கூறுகிறார்கள். மணிப்பூர் சம்பவம் பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு பிரதமர் மணிப்பூரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். கோடான கோடி தொண்டர்களை திமுக தலைவரைப் பற்றி பேச பாரதி ஜனதா தலைவருக்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. திமுக தலைவர் நமக்கு நாமே என்பதன்மூலமாக தமிழக முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தினார். ஆனால் அண்ணாமலை மக்களை ஏமாற்றி வருகிறார். அண்ணாமலை , எதிர் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்னுடன் நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறீர்களா. பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை தந்தார். தலைவர் கலைஞர் கல்லூரிகளை தந்தார். இதனால் தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. வட இந்தியாவில் கூட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது மாநிலத்தில் உள்ள கல்விதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியை திணிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சுங்கச்சாவடியில் மத்திய அரசு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. சாலை அமைப்பதிலும் ஊழல் செய்துள்ளது தங்களது ஆதாயத்திற்காக மதத்தை அரசியலுக்காக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறத. தமிழ்நாடு தான் இந்திய துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 35 குவாரிகள் இயங்கியது. தற்பொழுது 7 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. கல்வி உதவி தொகை வழங்குவதாக ஏழை மக்களை பாரதிய ஜனதா அரசு ஏமாற்றியது. மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கு முடிவு கட்டும் கவுண்டன் தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை டீசல் விலை பொருட்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை மக்கள் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், மாநில துணைச் செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரதீப் ராஜா, துணை மேயர்மேரி பிரின்சி லதா உட்பட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், புஷ்பலீலா ஆல்பன், மண்டல தலைவர் ஜவகர், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சந்திரா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நிர்வாகி தாமரை பாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் பூதலிங்கம், ஒன்றிய செயலாளர்கள்பாபு, சுரேந்திர குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், ரேமோன் மனோ தங்கராஜ், அணி அமைப்பாளர்கள் சி. என்.செல்வன், இ.என். சங்கர்,அருண் காந்த் உள்படபலர் கொண்டனர்.
- 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது
- சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையையொட்டி கடந்த 16-ந்தேதி காலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு நேற்று வரை 4 நாட்களாக தொடர்ந்து காலையில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.
வழக்கம்போல் இன்று 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல்கொந்தளிப்புடனும், சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் படகுத்துறை நுழைவுவாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- மூளைக்கு உட்புறத்தில் அதிகரித்த அழுத்தம் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும்
- மருத்துவர்கள் குழு தீவிரமாக செயல்பட்டு உரிய சிகிச்சை அளித்தனர்
கன்னியாகுமரி :
திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ந்து விடாப்பிடியான தீவிர தலைவலி மற்றும் குமட்டல் பாதிப்போடு 70 வயது மூதாட்டி வந்தார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சோதனை செய்த போது மூளைக்கு மற்றும் அதனை பாதுகாக்கும சவ்வு மென்படலத்திற்கும் இடையே உள்ள வலையனைமிடை வெளியில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மூளையை சுற்றியுள்ள மூளை முதுகுத்தண்டு நீரில் ரத்தம் சேருமானால், மூளைக்கு உட்புறத்தில் அதிகரித்த அழுத்தம் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும். இதன் மூலம் ேநாயாளியின் உடல்நிலையானது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும்.
அவருக்கு கிம்ஸ்ெஹல்த்தின் நரம்பியல் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணரான டாக்டர் சந்தோஷ் ேஜாஸப் தலைமையிலான மருத்துவர்கள் குழு தீவிரமாக செயல்பட்டு உரிய சிகிச்சை அளித்தனர். இதன் மூலம் மூதாட்டி உயிர் பிழைத்தார்.
வயது முதிர்ந்த மூதாட்டிக்கு ஏற்பட்டிருந்த உயிருக்கு ஆபத்தான ரத்தக்கசிவை நிறுத்தி குணமளித்திருக்கிற மூளை நரம்பியல் இடையீட்டு கதிர்வீச்சியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர் மணீஷ் குமார் யாதவ், இணை சிறப்பு நிபுணர் டாக்டர் தினேஷ் பாபு மற்றும் நரம்பியல் உணர்விழப்பு மருந்தியல் துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர் ெஜயந்த் ஆர் சேஷன், டாக்டர் சந்ேதாஷ் ேஜாஸப் ஆகியோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
- நாளை 117-வது பிறந்த தினம்
- பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
நாகர்கோவில் ;
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியினருக்கு 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி மகனாக பிறந்தார் ஜீவா. அவரது பெற்றோர் தங்கள் கிராம தெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பெயரையே சொரிமுத்து என மகனுக்கு சூட்டினர். பின்னர் அவர் பொதுவுடமை தலைவர் ஜீவானந்தமாக வாழ்க்கை தொடங்கினார்.
9-ம் வகுப்பு படிக்கும் போதே காந்தியையும், கதரையும் மையப்படுத்தி ஜீவா கவிதை எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் காந்தி யடிகளால் "நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" எனப் பாராட்டப்பட்டவர். இளமை காலத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர், தந்தை பெரியாரின் பாசறையிலும் வளர்ந்தவர். காலப்போக்கில் கம்யூனிசக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுநேரக் கம்யூனிசவாதியாக மாறிய ஜீவாதான், தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி.
நாகர்கோவிலில் பிறந்த இவர் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் பகுதியை தமிழகத்துடன் இணைக்கப் போராடியதிலும் இவரது பங்களிப்பு பெரியது.
காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்தது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றது என காலத்தால் மறக்கமுடியாத வரலாறு களையும் தனதாக்கியவர். பகத்சிங்கின் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நூலைத் தமிழாக்கம் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியா குமரியில் பிறந்தாலும் 1952-ல் சென்னை வண்ணா ரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஊக்க மளிக்காத தொழிற்சங்கங்க ளும், அவர் கலந்துகொள்ளாத தொழிலாளர் போராட்டங்க ளும் இல்லை. இப்படி பல்வேறு போராட்டங்களில் ஜீவா கலந்து கொண்டு பொதுவுடமை வாரியாக திகழ்ந்தார்.
பின்னர் அவர் 1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா மறைந்தார். அவரது நினைவாக நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் சர்.சி.பி. ராமசாமி நினைவு பூங்காவில் ரூ. 12.98 லட்சம் மதிப்பில் பொதுவுடமை ஜீவா மணி மண்டபம் அமைத்துள்ளது தமிழக அரசு.
1998-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழ மை, அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில், ஜீவாவின் மார்பளவு சிலையும், அவரது புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் முகப்பில் ஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அவரது செயல்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த மணி மண்டபமானது பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஜீவானந்தத்தின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகிறது. மேலும் அரசியல் கட்சி சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஜீவானந்தம் மணி மண்ட பத்திற்கு அனைத்து பொது மக்களும் வந்து செல்வதற்கு ஏற்றார்போல் தினமும் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். ஜீவானந்தத்தின் 117-வது பிறந்தநாள் வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜீவனந்தத்தின் மணிமண்டபம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் மேல் ஆகிறது. இதனால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி மணி மண்டபத்தை புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது.
- தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்
- கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகம், மாநில அரசின் ஆதரவுடன் எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்தக் கழகம் புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
நாகர்கோவிலில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நாளை (21-ந் தேதி) முதல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவிற்கான தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது.சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய-மாநில அரசு களின் மானி யங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் ,தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு, 04652- 225774, 9445023493 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
- பா.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப் பதாவது:-
நாட்டு மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரு கின்றனர். மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகள் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் 3 வேளை உணவுக்கு அல்லல்பட்டு வருகின்றனர். நிம்மதியாக வாழ நினைக்கும் மக்களிடையில் பிரிவி னையை உருவாக்கி சமூ கத்தை குருதிகளமாக மாற்றிவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. சமீபத்தில் மணிப்பூர் கலவரம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள் அதற்கு அத்தாட்சி. மக்கள் அன்றாடம் பா.ஜ.க. அரசிடம் கேட்கும் கேள்விகள் ஏராளம். ஆனால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ஓடி ஒளிகிறது பா.ஜ.க அரசு. மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்றி வரும் மோடி அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்களை பெயர் மாற்றம் செய்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. கல்வி பயின்று பட்டம் பெறும் இளை ஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் சரித்தி ரத்தை மாற்ற வேண்டும், சரித்திர நாயகர்களை மக்களிடம் கொண்டு செல்ல கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. அவற்றை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டி யது காங்கிரஸ் கட்சியின் கடமை. பா.ஜனதா கட்சியின் பொய் முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆகஸ்ட் 20-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட காங் கிரஸ் கமிட்டிகள் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளோம். மாவட்ட தலைவர்கள் ஒருங்கி ணைக்கும் இந்த கூட்டங்கள் அனைத்து நகராட்சிகள், நகர்புற, கிராம ஊராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சி யின் அனைத்து மண்டலங்க ளிலும் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தலைவர் ராகுல்காந்தி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆகிட சோனி யாகாந்தி வழிகாட்டு தலின்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படு வோம். 'இந்தியா' வை வெற்றிபெற செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






