என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா
    • அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    நாகர்கோவில் :

    பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து வேப்பமூட்டில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சிலதா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் உரிமை களுக்காக போராடிய பல தலைவர்கள் வாழ்ந்து ள்ளனர். இதில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பொது வுடமை வீரர் ஜீவா. ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்களாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். தமிழக அரசு கடந்த 2½ ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண் டுள்ளது.

    சுற்றுலாத்துறை இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.200 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி யிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக பஸ் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள், வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளுநரை பொறுத்தமட்டில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் எல்லை மீறி செயல்படுகிறார். நீட் தேர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்பதற்காக தி.மு.க. அரசு இதை எதிர்த்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வட இந்தி யாவிலும் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க. போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் மண்டல தலைவர்கள், சிவபிரபு, செல்வன், கவுன்சிலர்கள் பால்அகியா, அனிஷா பிரைட், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சகாய பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அகமது உசேன், மாநகர செயலாளர் மோகன், மாநகர் குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது.
    • ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனவே இந்த கோவிலுக்கு மிக பிரம்மாண்டமான வகை யில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த மரங்கள் வெட்டிஅகற்றப்பட்டன. ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்தியாவிலேயே மிக உயரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய சிவப்பிரகாசம் ஸ்தபதியின் மகனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியுமான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஸ்தபதி, இந்து அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில் ஸ்தபதி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு இந்த ஆய்வு பணி களை மேற்கொண்ட னர். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தப்பி ஓடிய டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த் துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். செம்மண் கடத்தலை தடுக்க போலீ சார் வாகன சோதனை யிலும் ஈடுபட்டு வருகின்ற னர். இருப்பினும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் துறையினரை பார்த்ததும் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பிச்செல்வது வாடிக்கை யாக நடந்து வருகிறது.

    நேற்று கொல்லங்கோடு அருகே உள்ள சந்தனபுறம் பகுதியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டெம்போக்கள் வந்தன. அதில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாக னங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    உடனடியாக போலீசார் 2 டெம்போக்களையும் சோதனை செய்தபோது அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 2 டெம்போக்களைணயும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து செம்மண் கடத்தி வந்த டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் அருகே களியங்காடு சிவன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈசானிய சிவம் என்ற ராஜா. இவர் இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்ட பார்வையாளராக உள்ளார்.

    நேற்று இரவு ஈசானிய சிவம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டில் முன் பகுதியில் தனது காரை நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலையில் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈசானிய சிவம் தயாராகி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர். வீட்டின் மீதும் கற்களை வீசினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இது குறித்து ஈசானிய சிவம் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் காரை உடைத்த வாலிபர்களின் முகம் தெளிவாக பதிவாகி யுள்ளது.

    இதையடுத்து அவர்கள் யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசில் ஈசானிய சிவம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் கணேச புரம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் மூடப்பட்டது. சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டதால் சாலை புழுதியாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதிகள் பறப்பதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக தொடர்கதை யாகவே உள்ளது.

    இந்த நிலையில் பொட்டல் பகுதியில் இருந்து நாங்குநேரிக்கு டாரஸ் லாரியில் தும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிரைவர் கணேசபுரம் சாலையில் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலையில் பைப்லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. இதைத்தொடர்ந்து டிரைவர் லாரியை இயக்க முயன்றார். ஆனால் அந்த பள்ளதில் சக்கரம் பதிய தொடங்கியது. லாரி ஒருபுறம் சரியவே டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மட்டுமே அந்த வழியாக வந்தனர். மற்றவர்கள் வாகனங்களை திருப்பி சென்றனர்.

    தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரியை கிரைன் மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த லாரி கிரைன் மூலமாக மீட்கப்பட்டது. ஏற்கனவே அந்த சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் டாரஸ் லாரி டிரைவர் அந்த வழியாக வந்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • ஜீவானந்தம் 117வது பிறந்தநாள் இன்று மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
    • சிவபிரபு, கண்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும் பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள் இன்று மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் ஜீவானந்தத்தின் திருவுருவ சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட வர்த்த காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாமன்ற உறுப்பினர் அனுஷாபிரைட், மண்டல தலைவர்கள் செல்வம், சிவபிரபு, கண்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெதின் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ரெதினுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு ஒடையன் விளை பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ்குமார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரெதின் ரெதீஷ் ஜெயந்திரோஜர் (வயது 22).

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு சென்று உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரெதின் வீட்டிலிருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தேடினார்கள்.

    இந்த நிலையில் குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் பகுதியில் ரெதின் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த ரெதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார்.
    • 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜான்சன். இவரது மகன் ஜஸ்டின் சுதாகர் (வயது28). இவர் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக வேலை செய்தார்.

    கோழிகளுக்கு தேவையான மருந்துகளை வாங்க ஜஸ்டின் சுதாகர், காவல்கிணறு விலக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்றும் அவர் மருந்து வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் இரவில் அவர் ஆரல்வாய்மொழிக்கு புறப்பட்டார். குமாரபுரம் வழியாக மோட்டார் சைக்கிள் வரும்போது கண்ணு பெத்தை பகுதியில் வேகத்தடையை அவர் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஜஸ்டின் சுதாகர், கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு ஜஸ்டின் சுதாகரை மீட்டு நாகர்கோ வில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு, ஜஸ்டின் சுதாகர் இறந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து உடல் ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

    இதுகுறித்து உறவினர் தேவதாஸ், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பலியான ஜஸ்டின் சுதாகருக்கு, அனிஸ்ஷா என்ற மனைவியும் 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொல்லங்கோடு நகராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட இடம்
    • பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோடு நக ராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெட்டுவிளை முதல் பெருங்குளம் வரையி லான 235 மீட்டர் சாலை, 25 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டது.

    இந்த சாலையில் தற்போது வரை எந்த பணியும் செய்யப்படாமல் இருப்பதால் சாலையின் கீழ் பகுதியில் ஒரு பெருங்குளம் ஒன்று உள்ளது. அந்த பெருங்குளத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது.

    இந்த சாலையை நம்பி தான் தற்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தபால் நிலையத்துக்கு செல்பவர்கள், மின்வாரிய அலுவலகத்தில் செல்ப வர்கள், நகராட்சி அலுவல கத்திற்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த சாலை வழியாகத்தான் கடந்த செல்கின்றனர்.

    இந்த சாலைக்கும் பெருங்குளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கத்துவர் இல்லாமல் இருப்பதால் இங்கு விபத்துகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பெருங்குளத்துக்கு பக்கச்சுவர் அமைத்து இந்த சாலையை கான்க்ரீட்டால் சீரமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • குவிந்து கிடக்கும் மணல் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல்போக்குவரத்து கழகம்படகுபோக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற் காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடலில் உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீனசொகுசு படகுகளும் உள்ளன.

    இந்த5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்த ளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன. அ

    துமட்டுமின்றிநீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத்தொ டர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. அதன் பயனாக 5 ஆண்டு களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் தூர்வாரும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்ததூர்வாரும் பணிரூ.5 லட்சம் செலவில் நடைபெற்றுவருகிறது. இதுவரை சுமார்50டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது

    • நாகர்.சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்
    • ஆவணி முதல் ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழ மை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை யான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாரா தனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராள மான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண் கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இத னால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளா கத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர் கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவ தும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சி யளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதான மும் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந் தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை யும் 4 சக்கர வாகனங்களை யும் நிறுத்தி சென்று இருந்த னர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாக ராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார்.
    • சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அருள் லின்ஸ்லி கலந்துகொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கினார். சங்கத்தின் மாணவ பொதுச்செயலாளர் கபிலேஷ் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    சங்கத்தின் மாணவ துணை தலைவர் ராஜசுனில் சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதேவி, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் டாக்டர் மோகன லட்சுமி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முடிவில் மாணவ இணை செயலாளர் விஷ்ணு காந்த் நன்றி கூறினார்.

    ×