வெட்டுவிளை- பெருங்குளம் சாலையில் கான்கிரீட் அமைத்து தர வேண்டும்

கொல்லங்கோடு நகராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட இடம் பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வெட்டுவிளை- பெருங்குளம் சாலையில் கான்கிரீட் அமைத்து தர வேண்டும்
Published on

கன்னியாகுமரி :

கொல்லங்கோடு நக ராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெட்டுவிளை முதல் பெருங்குளம் வரையி லான 235 மீட்டர் சாலை, 25 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் தற்போது வரை எந்த பணியும் செய்யப்படாமல் இருப்பதால் சாலையின் கீழ் பகுதியில் ஒரு பெருங்குளம் ஒன்று உள்ளது. அந்த பெருங்குளத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது.

இந்த சாலையை நம்பி தான் தற்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தபால் நிலையத்துக்கு செல்பவர்கள், மின்வாரிய அலுவலகத்தில் செல்ப வர்கள், நகராட்சி அலுவல கத்திற்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த சாலை வழியாகத்தான் கடந்த செல்கின்றனர்.

இந்த சாலைக்கும் பெருங்குளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் பக்கத்துவர் இல்லாமல் இருப்பதால் இங்கு விபத்துகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பெருங்குளத்துக்கு பக்கச்சுவர் அமைத்து இந்த சாலையை கான்க்ரீட்டால் சீரமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com