என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
- ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
நாகர்கோவில் :
நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு தமிழகத்தின் உடைய வளர்ச்சிகளை எப்படி தடுக்கலாம் என்று செயல்பட்டு வருகிறது. அதை முறையடித்து சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
கல்வியில் சிறந்து தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகம் உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்.அரசு பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டு பிள்ளையும் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவ படிப்பு அல்லது மேற்படிப்பு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அந்தப் படிப்பு போதாது நீட் தேர்வு வேண்டும் என்று கூறுகிறீர்கள். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது தகுதி தேர்வாகும். வசதி படைத்தவர்கள் நீட் தேர்வை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.ஆனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். இதனால் தான் நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வருகிறது. மக்களிடையே குறைகளை பேசி அதை தீர்க்க நாடாளுமன்றம் குரல் கொடுத்து வருகி றார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்று கூறுகிறார்கள். மணிப்பூர் சம்பவம் பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு பிரதமர் மணிப்பூரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். கோடான கோடி தொண்டர்களை திமுக தலைவரைப் பற்றி பேச பாரதி ஜனதா தலைவருக்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. திமுக தலைவர் நமக்கு நாமே என்பதன்மூலமாக தமிழக முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தினார். ஆனால் அண்ணாமலை மக்களை ஏமாற்றி வருகிறார். அண்ணாமலை , எதிர் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்னுடன் நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறீர்களா. பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை தந்தார். தலைவர் கலைஞர் கல்லூரிகளை தந்தார். இதனால் தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. வட இந்தியாவில் கூட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது மாநிலத்தில் உள்ள கல்விதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியை திணிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சுங்கச்சாவடியில் மத்திய அரசு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. சாலை அமைப்பதிலும் ஊழல் செய்துள்ளது தங்களது ஆதாயத்திற்காக மதத்தை அரசியலுக்காக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறத. தமிழ்நாடு தான் இந்திய துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 35 குவாரிகள் இயங்கியது. தற்பொழுது 7 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. கல்வி உதவி தொகை வழங்குவதாக ஏழை மக்களை பாரதிய ஜனதா அரசு ஏமாற்றியது. மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கு முடிவு கட்டும் கவுண்டன் தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை டீசல் விலை பொருட்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை மக்கள் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், மாநில துணைச் செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரதீப் ராஜா, துணை மேயர்மேரி பிரின்சி லதா உட்பட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், புஷ்பலீலா ஆல்பன், மண்டல தலைவர் ஜவகர், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சந்திரா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நிர்வாகி தாமரை பாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் பூதலிங்கம், ஒன்றிய செயலாளர்கள்பாபு, சுரேந்திர குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், ரேமோன் மனோ தங்கராஜ், அணி அமைப்பாளர்கள் சி. என்.செல்வன், இ.என். சங்கர்,அருண் காந்த் உள்படபலர் கொண்டனர்.






