என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 2 மணி நேரம் தாமதம்
    • காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் இன்று காலையில் 2-வது நாளாக கன்னியாகுமரியில்"திடீர்"என்று கடல்நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.

    கருங்கல் :

    கிள்ளியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு கிள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமாமாலினி தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை மருத்துவமனை பொது மருத்துவர் கணேசன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஸ்டாலின் ஜோஸ்வா, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை மருத்துவர் அனுபாவ், குழந்தைகள் மருத்துவர் அருண் சேம் பிரதீப், கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அஜிஷன், போஸ் பல் மருத்துவர் சுஜாதா குமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

    முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, உப்பு அளவு, காசநோய்க்கான சளி பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய நல செவிலியர் சரஸ்வதி மற்றும் செவிலியர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.

    • சிறுவர்-சிறுமிகள் கொண்டாட்டம்
    • வெளிநாடுகளில் அதிக வரவேற்பு பெற்றது

    நாகர்கோவில் :

    வெளிநாடுகளில் பொருட் காட்சிகள் எக்ஸ்போ என்ற பெயரில் பிரம்மாண்டமாக நடைபெறும். துபாய் போன்ற நாடுகளில் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி போன்றவை பார்வையாளர்களை குதூக லப்படுத்தும். இதைப் போன்ற பிரம்மாண்ட ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி தமிழ்நாட்டிலும் இப்போது நடத்தப்பட்டு வருவது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

    மதுரையைச் சேர்ந்த எம்.கே .சி. என்ற நிறுவனம் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. இக்கண்காட்சியை கன்னியாகுமரி மாவட்ட மக்களும் கண்டுகளிக்கும் வகையில் எம்.கே .சி. நிறுவனம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் நாகர்கோவில் மாநகராட்சி அனாதை மடம் மைதானத்தில் நடத்தி வருகிறது.

    ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி 200 மீட்டர் நீளத்தில் கடல் நீருக்குள் குகை போல் செட் அமைக்கப்பட்டு அதில் 50 வகையான விதவிதமான கடல் மீன்கள் சுற்றி வருவது பார்ப்பதற்கு பரவசம் தருகிறது. இந்த குகை முழுவதும் ஏசி வசதியும் செய்யப்பட்டிருப்பது சிறப்பு.

    கண்காட்சி அரங்கிற்குள் டிக்கெட் எடுத்து விட்டு சுறா மீன் வாய் நுழைவு வாயிலில் நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது செல்பி பாயிண்ட். 50-க்கும் மேற்பட்ட செல்பி பாயிண்டுகளில் பார்வையாளர்கள் நின்று படம் எடுத்துக் கொள்கி றார்கள். அதன் பிறகு நம்மை வரவேற்பது பரவ சம் ஏற்படுத்தும் குகை கடல் மீன்கள் கண்காட்சி.

    கடலுக்குள் குகை போல் உள்ள ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் தலைக்கு மேலேயும், நமக்கு இருபுறமும் கடலுக்குள் சுற்றி வரும் மீன்கள் கூட்டத்தை போல தண்ணீருக்குள்சுற்றி வரும் மீன்கள் கூட்டத்தை பார்த்து ரசித்தபடி செல்வதற்கு நமக்கு 30 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

    குழந்தைகள் துள்ளி திரியும் மீன்களை தொட்டு ரசித்தபடி பார்த்து மகிழ்ந்து குகையை விட்டு வெளியே வந்தால் மைதானத்திற்குள் பறந்து விரிந்து இருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நம்மை வரவேற்கிறது. வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கின்றன.

    ஆங்காங்கே டெல்லி அப்பளம், பஞ்சுமிட்டாய், பாப்கார்ன், குலுக்கி சர்பத், பானி பூரி கடைகள், உணவு வகைகள் ஆகியவற்றை வாங்கி ருசித்தபடி கடந்து சென்றால் ராட்டினங்கள். குழந்தைகளுக்கான டோரா டோரா ராட்டி னங்கள், ஹனி டியூ ராட்டினம், பார்வை யாளர்களை விண்ணுக்கும் மண்ணுக்கும் கொண்டு செல்லும் அனுபவத்தை தரும் ஜெயண்ட் வீல் ராட்டினம், முன்னும் பின்னும் சுழன்று அடிக்கும் சுனாமி எனப் படும் ராட்டினம், ெரயில் ராட்டினம் என பல வகையான ராட்டினங்கள் குழந்தைகளையும், பெரி யவர்களையும் குதூகலப் படுத்துகின்றன.

    இவற்றை கடந்து வந்தால் பேய் வீடு அரங்கமும், 3டி அரங்கமும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் குழந்தைகளுக்கு போட்டிங், கார் டிரைவிங் என பொருட்காட்சியில் அனைத்தும் நம்மை 5 மணி நேரம் மறக்கடிக்க செய்கின்றன. ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை நடத்துவது மிகப் பெரிய சவாலான விஷயம் என்கின்றனர் நிர்வாகிகள். குகைக்கடல் கண்காட்சியில் மீன்கள் மிதக்க 5ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இதை குமரி கடலில் இருந்து லாரியில் கொண்டு வந்து நிரப்பி பயன்படுத்துகிறார்கள்.

    இந்த ஆழ்கடல் குகை கண்காட்சியில் உள்ள மீன்கள், நான்வெஜ் சாப்பிடு பவை. அவற்றை பராமரிக்க 5 ஊழியர்கள் வரை பயன் படுத்தப்படுகிறார்கள்.

    நிர்வாக இயக்குனருக்கு டாக்டர் பட்டம்

    நாகர்கோவில், செப்.30-

    பார்வதிபுரத்தில் அமைந் துள்ள கிருஷ்ண குமார் எலும்பு சிகிச்சை மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் கிருஷ்ண குமாரின் மருத்துவம் மற்றும் கல்வி, தொழில் சார்ந்த செயல் பாடுகளை அங்கீக ரித்து, கவுரவப்படுத்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்க லைக்கழகம் கவுரவ பேராசிரியர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை
    • கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள கன்னியாகுமரிக்கு வருடந் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் படையெ டுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதேபோல் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் மிலாடி நபி விழா, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைவார விடுமுறைநாள் அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி விடுமுறை நாள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக இன்று கன்னியா குமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநிலசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிய வில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமா கும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூ ழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    வட்டக்கோட்டைக்கு இன்று கடல் கொந்தளிப்பு காரணமாக உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இரணியல் :

    கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அப்போதைய ஆயர் அலோ சியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப் பட்டது. இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நேற்று திருக்கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி, கல்லறை தோட் டம் மந்திரிப்பு, ஜெபமாலை, மலை சிற்றாலய குண மளிக்கும் திருப்பலி ஆகிய வை நடந்தது. பின்னர் மாலை புனிதையின் உருவம் பொறித்த திருக்கொடி பக்தர்கள் முன்னிலையில் பவனியாக எடுத்து வரப்பட்டது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளர் பேரருட்பணி இயேசு ரெத்தினம், காரங்காடு வட்டார முதன்மை பணியா ளர் அருட்பணி சகாய ஜஸ்டஸ் ஆகியோர் முன்னி லையில், மார்த்தாண்டம் மறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் நூற்றாண்டு நினைவு கட்டிடம் திறப்பு, திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடந்தது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. குழந்தை தெரே சாவின் பெயர் கொண்ட திருவிழாவான அக்டோபர் 1-ந்தேதி நாளை மாலை 6.45 மணிக்கு மேதகு ஆயர் அத்தனாசியுஸ் ரத்தினசாமி தலைமையில் மலர் சாற்று தல், நூற்றாண்டு நினைவு சின்னம் அர்ச்சிப்பு, திருப் பலி, தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கி றது. 8-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெப மாலை, திருப்பலியும், 9-ம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கும், 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்ட றிக்கை மற்றும் வரவு, செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவா திக்கப்படவுள்ளது. மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்து ரைக்கவும், பொது மக்களுக்கு தேவையான விவரங்களை அளித்திடவும், அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    எனவே, பொது மக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று மதியத்துக்கு பிறகு பெய்ய தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் விடிய விடிய நீடித்தது.

    நாகர்கோவிலில் இரவு விட்டு விட்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கி யது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, கேப் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 65.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது.

    கன்னிமார், களியல், மயிலாடி, சுருளோடு, தக்கலை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

    திற்பரப்பு அருவி பகுதி யில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரு அணைகளும் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதை யடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது. பேச்சிப் பாறை அணையி லிருந்தும் குறை வான அளவு தண்ணீரே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 22.54 அடியாக இருந்தது. அணைக்கு 1109 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 333 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. அணைக்கு 629 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 12.07 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 12.17 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 3.94 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.8, பெருஞ்சாணி 30.4, சிற்றார் 1- 24.2, சிற்றார் 2- 26.4, பூதப்பாண்டி 20.2, களியல் 55.2, கன்னிமார் 29.4, கொட்டாரம் 31, குழித்துறை 4.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 28.4, புத்தன்அணை 30, சுருளோடு 34.2, தக்கலை 41, குளச்சல் 32.6, இரணியல் 24, பாலமோர் 37.8, மாம்பழத்துறையாறு 26.8, திற்பரப்பு 52, ஆரல்வாய்மொழி 8.2, அடையாமடை 26.2, குருந்தன்கோடு 31.4, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைகிடங்கு 27.4, முக்கடல் 18.

    மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. தோவாளை, ஆரல் வாய்மொழி, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர் தாலு காவில் மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு காரணமாக ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும்
    • தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.

    குழித்துறை, செப்.30-

    கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் திமிங்கலம் உமிழ்நீரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், கும்பல் ஒன்றிக்கு விற்பனை செய்ய வந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீஸ் குழுவினர் கடந்த ஒரு வாரமாக மார்த்தாண்டம் பகுதியில் ரகசியமாக முகாமிட்டு ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று பிற்பகல் மார்த்தாண்டம் விரிகோடு செல்லும் ரோட்டில் ரெயில்வே கிராசிங் அருகே கேரளாவை சேர்ந்த சொகுசு கார் நின்று கொண்டிருந்ததை தனிப்படை போலீசார் கவனித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது அதில் 6 பேர் இருந்தனர். போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சொகுசு காரையும், 6 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது 36 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது.

    மேலும் இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் தானா என்று சோதனை செய்தனர். இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் என உறுதி செய்யப்பட்டது.

    ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும். காரில் இருந்த கேரளா மாநிலம் திருவனந்த புரம் மாவட்டம் வெள்ளார் கோடு வெள்ளையா குதிரைகுளம் விவேகானந்தன் (வயது 49), கொல்லம் மாவட்டம் தலத்தலா உரிமைய நல்லூர் நிஜூ (39), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் திரேசியாபுரம் நெடிய விளைபுத்தன் வீடு ஜெயன் (41), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் குன்னத்துக்காடு திலீப் (26), பாலக்காடு மாவட்டம் ஒற்றை பாலம் பாலகிருஷ்ணன் (50), தனக்காடு குன்னத்து பாவு கோணம் வீரான் (61) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கலம் உமிழ்நீர் மற்றும் 6 பேரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    திமிங்கல உமிழ்நீர் குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கடத்தல் கும்பல் கப்பலில் ஆழ்கடல் பகுதியில் பெரிய பயனாக்குலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளும், அப்போது ஏதாவது ஒரு பகுதியில் திமிங்கலம் வாமிட் செய்த உமிழ்நீர், கடலின் மேற்பகுதியில் மெல்லிய திராவகம் போன்று படிந்து காணப்படும், அதனை கடத்தல் கும்பல் எடுத்து, உலகம் முழுவதும் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவித்து, அது உண்மையானதா என சோதனை செய்து விற்பனை செய்வார்கள், அதாவது இந்திய மார்க்கெட்டின் விலை 1 கிலோ ஒரு கோடி ரூபாய், அது சர்வதேச மார்க்கெட்டில் பல கோடி மதிப்பு எனக்கூறப்படுகிறது. இந்த உமிழ்நீரை மருத்து வத்திற்கும் பயன்படுத்து வதாக கூறப்படுகிறது. அதனை கேப்சூலாக, பவுடராக மாற்றி விற்பனை செய்து பணம் சம்பா திப்பார்கள். மேலும் வாசனை திரவியங்களுடன் பயன்ப டுத்தி, போதைக்கா கவும் பயன்படுத்துவ ணதாக தெரிகிறது. இந்த திமிங்கல உமிழ்நீர் கேப்சூல் சர்வதேச மார்க்கெட்டில் ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்ப டுவதாக தெரியவருகிறது.

    இந்த திமிங்கல உமிழ்நீர் மேலேய நாடுகளில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்த திமிங்கலம் உமிழ்நீர் கேரளாவில் ஆழ்கடலில் கடத்தல் கும்பல் மூலம் எடுக்கப்பட்டு கை மாறப்பட்டு தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.

    யார் வாங்க வந்தனர். யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போது இவர்களை களியல் வனச்சரக அதிகாரிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • குளச்சலில் குடும்பத்தினர் சோகம்
    • நடுக்கடலில் படகு மூழ்கி 3 பேர் மாயம்

    குளச்சல் :

    குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமான விசைப் படகு வைத்து கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்த படகில் பங்கு தாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் (52), கொட்டில்பாட்டை சேர்ந்த பயஸ் (54) உட்பட 16 மீனவர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகை ஆன்றோ ஓட்டினார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து 30 நாட்டிங்கல் கடல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகின் ஒரு பக்கம் சாய்ந்து கவிழ்ந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த னர். அப்போது அந்த வழியாக விசைப்படகில் வந்த மீனவர்கள் நடுக்கட லில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர். 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள்.

    இதையடுத்து அந்த 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட 13 மீனவர்களும் குளச்சல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கியது குறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் மீனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து வரப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீனவர்களை தேடி வருகிறார்கள். மேலும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீனவர்கள் மூழ்கிய பகுதியில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள் ளனர். மீனவர்கள் மாயமாகி 36 மணி நேரத்துக்கு மேலாவதால் அவர்களது கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். குளச்சலில் உள்ள மாயமான மீனவர் குடும்பத்தினரை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார். மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    அமைச்சருடன் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளும் சென்று இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், மாயமான மீனவர்களை கப்பல் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விசைப்படகு மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான குழியாளிகளை வைத்து மீட்க வேண்டுமென மீனவர்களின் உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை மீன்வளத்துறை அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களை மீட்க ந டவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

    இதற்கிடையே 3 மீன வர்கள் மாயமான சம்ப வத்தால் குளச்சல் விசைப் டகினர், வள்ளம் கட்டுமர மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கரை திரும்பிய விசைப்படகி லிருந்து மீன்கள் இறக்கி விற்பனையும் செய்யப படவில்லை. இதனால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்

     

    நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவிகளும் அதிகளவில் போட்டி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தற்போது போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி பெற்ற 12 பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று இன்று அதிகாரிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விடாமுயற்சியுடன் நாம் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

    அரசியலில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றிபெற விடாமுயற்சி தேவை. எம்.எல்.ஏ.வாக நான் தேர்வாக 35 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டி இருந்தது. உங்கள் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஜாதியோ, மதமோ அதை முடிவு செய்ய முடியாது. நீங்கள் மட்டும் தான் உங்கள் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். உங்கள் உழைப்பு தான் வாழ்வில் உங்களை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நிர்ணயம் செய்யும்.

    எனவே மாணவ-மாணவிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தனக்கான இலக்கை அடைய வேண்டும். அதிகளவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தக்கூடிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பகுதிகளில் அமர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இமானுவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    குறும்பனையில் ரூ.30 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைத்தார். குறும்பனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,ராஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது
    • கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனாதேவ், நவீன்குமார், ரமேஷ், வீரசூரபெருமாள், சேகர், உதயகுமார், கோபால் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலமாக ஒரு கோடி 6 லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். எனவே நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சார்பாக முதல்-அமைச்சருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் போடப்பட்ட பிறகு பைப்லைd; mமைப்பதற்காக தோண்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு கழிவு நீர் ஓடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இடமில்லாதவர்கள் இல்லாதவர்களுக்கு மாற்று வழி வகை செய்ய வேண்டும். சாக்கடை தண்ணீரை கால்வாயில் விடுவதால் குடிநீர் மற்றும் விவசாயமும் பாதிக்கப்படும்.அதை தடுக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்க வேண்டும். நாகர்கோவில் ஆம்னி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இதில் அக்கறை காட்டாதது ஏன் என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்னதாக என்னென்ன சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த சாலைகளில் பைப் லைன்கள் போட வேண்டியது இருந்தால் அதை போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் சாலை அமைக்க வேண்டும். சாலை அமைத்த பிறகு பைப்லைன் போடுவதற்கு தோண்டக்கூடாது. உறிஞ்சி குழாய் அமைப்பதன் மூலமாக சுகாதாரத்தை பேணி பாதுகாக்க முடியும்.

    எனவே தான் உறிஞ்சு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இடம் இருப்பவர்கள் கண்டிப்பாக உறிஞ்சிக்குழாய் அமைக்க வேண்டும். இடமில்லாதவர்களுக்கு பொது இடங்களில் உறிஞ்சிக்குழாய் அமைத்து கழிவுநீர் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பஸ் நிலையத்தில் அரசின் விதிமுறைக்குட்பட்டு தான் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புத்தன்அணையிலிருந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தி.மு.க. பெண் கவுன்சிலர் போராட்டம்

    நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் மோனிகா பேசினார். அப்போது தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள போர்வேலில் இருந்து வேறு வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் எனது வார்டில் தண்ணீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரியிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார். உடனடியாக தான் இருக்க இருந்து அமர்ந்து தரையில்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×