search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்: பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை  மேயர் மகேஷ் தகவல்
    X

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்: பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேயர் மகேஷ் தகவல்

    • நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது
    • கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனாதேவ், நவீன்குமார், ரமேஷ், வீரசூரபெருமாள், சேகர், உதயகுமார், கோபால் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலமாக ஒரு கோடி 6 லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். எனவே நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சார்பாக முதல்-அமைச்சருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் போடப்பட்ட பிறகு பைப்லைd; mமைப்பதற்காக தோண்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு கழிவு நீர் ஓடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இடமில்லாதவர்கள் இல்லாதவர்களுக்கு மாற்று வழி வகை செய்ய வேண்டும். சாக்கடை தண்ணீரை கால்வாயில் விடுவதால் குடிநீர் மற்றும் விவசாயமும் பாதிக்கப்படும்.அதை தடுக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்க வேண்டும். நாகர்கோவில் ஆம்னி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இதில் அக்கறை காட்டாதது ஏன் என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்னதாக என்னென்ன சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த சாலைகளில் பைப் லைன்கள் போட வேண்டியது இருந்தால் அதை போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் சாலை அமைக்க வேண்டும். சாலை அமைத்த பிறகு பைப்லைன் போடுவதற்கு தோண்டக்கூடாது. உறிஞ்சி குழாய் அமைப்பதன் மூலமாக சுகாதாரத்தை பேணி பாதுகாக்க முடியும்.

    எனவே தான் உறிஞ்சு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இடம் இருப்பவர்கள் கண்டிப்பாக உறிஞ்சிக்குழாய் அமைக்க வேண்டும். இடமில்லாதவர்களுக்கு பொது இடங்களில் உறிஞ்சிக்குழாய் அமைத்து கழிவுநீர் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பஸ் நிலையத்தில் அரசின் விதிமுறைக்குட்பட்டு தான் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புத்தன்அணையிலிருந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தி.மு.க. பெண் கவுன்சிலர் போராட்டம்

    நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் மோனிகா பேசினார். அப்போது தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள போர்வேலில் இருந்து வேறு வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் எனது வார்டில் தண்ணீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரியிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார். உடனடியாக தான் இருக்க இருந்து அமர்ந்து தரையில்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×