என் மலர்
நீங்கள் தேடியது "திமிங்கல உமிழ் நீர்"
- ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும்
- தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.
குழித்துறை, செப்.30-
கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் திமிங்கலம் உமிழ்நீரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், கும்பல் ஒன்றிக்கு விற்பனை செய்ய வந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீஸ் குழுவினர் கடந்த ஒரு வாரமாக மார்த்தாண்டம் பகுதியில் ரகசியமாக முகாமிட்டு ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று பிற்பகல் மார்த்தாண்டம் விரிகோடு செல்லும் ரோட்டில் ரெயில்வே கிராசிங் அருகே கேரளாவை சேர்ந்த சொகுசு கார் நின்று கொண்டிருந்ததை தனிப்படை போலீசார் கவனித்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது அதில் 6 பேர் இருந்தனர். போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சொகுசு காரையும், 6 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது 36 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது.
மேலும் இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் தானா என்று சோதனை செய்தனர். இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் என உறுதி செய்யப்பட்டது.
ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும். காரில் இருந்த கேரளா மாநிலம் திருவனந்த புரம் மாவட்டம் வெள்ளார் கோடு வெள்ளையா குதிரைகுளம் விவேகானந்தன் (வயது 49), கொல்லம் மாவட்டம் தலத்தலா உரிமைய நல்லூர் நிஜூ (39), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் திரேசியாபுரம் நெடிய விளைபுத்தன் வீடு ஜெயன் (41), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் குன்னத்துக்காடு திலீப் (26), பாலக்காடு மாவட்டம் ஒற்றை பாலம் பாலகிருஷ்ணன் (50), தனக்காடு குன்னத்து பாவு கோணம் வீரான் (61) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கலம் உமிழ்நீர் மற்றும் 6 பேரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
திமிங்கல உமிழ்நீர் குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கடத்தல் கும்பல் கப்பலில் ஆழ்கடல் பகுதியில் பெரிய பயனாக்குலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளும், அப்போது ஏதாவது ஒரு பகுதியில் திமிங்கலம் வாமிட் செய்த உமிழ்நீர், கடலின் மேற்பகுதியில் மெல்லிய திராவகம் போன்று படிந்து காணப்படும், அதனை கடத்தல் கும்பல் எடுத்து, உலகம் முழுவதும் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவித்து, அது உண்மையானதா என சோதனை செய்து விற்பனை செய்வார்கள், அதாவது இந்திய மார்க்கெட்டின் விலை 1 கிலோ ஒரு கோடி ரூபாய், அது சர்வதேச மார்க்கெட்டில் பல கோடி மதிப்பு எனக்கூறப்படுகிறது. இந்த உமிழ்நீரை மருத்து வத்திற்கும் பயன்படுத்து வதாக கூறப்படுகிறது. அதனை கேப்சூலாக, பவுடராக மாற்றி விற்பனை செய்து பணம் சம்பா திப்பார்கள். மேலும் வாசனை திரவியங்களுடன் பயன்ப டுத்தி, போதைக்கா கவும் பயன்படுத்துவ ணதாக தெரிகிறது. இந்த திமிங்கல உமிழ்நீர் கேப்சூல் சர்வதேச மார்க்கெட்டில் ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்ப டுவதாக தெரியவருகிறது.
இந்த திமிங்கல உமிழ்நீர் மேலேய நாடுகளில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த திமிங்கலம் உமிழ்நீர் கேரளாவில் ஆழ்கடலில் கடத்தல் கும்பல் மூலம் எடுக்கப்பட்டு கை மாறப்பட்டு தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.
யார் வாங்க வந்தனர். யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போது இவர்களை களியல் வனச்சரக அதிகாரிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்






