என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
    • கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார்

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகி அட்சய கண்ணன், மாநில விவசாய அணி தானு பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச்செயலாளர் பகவதியப்பன் மற்றும் தோவாளை பகுதியை சேர்ந்த விவசாய அணி முத்துசாமி, சிவச்சந்திரன், ராஜேந்திரன், மது, ராஜன், சரிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சுஜா ஜாஸ்மின் தலைமை தாங்கினார்

    தக்கலை :

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மத அரசியல் செய்வதை கண்டித்தும் தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சுஜா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சைமன் சைலஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். போராட்டத்தில் நிர்வாகிகள் சந்திரகலா, ஜாண் ராஜ், ஜாண் இம்மானுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    • பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர்.
    • ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம் நடந்தது. முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு தனித்தனியாக நடந்த இந்த பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர். முதுநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தொடங்கி வைத்தார். முதுநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை குழித்துறை ஜே.சி.ஐ. தலைவர் பெகின் தொடங்கி வைத்தார்.

    இளநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வன்னியூர் ஊராட்சி தலைவி பாப்பா தொடங்கி வைத்தார். இளநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெஜி தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் மாணவர்களை ஒருங்கிணைத்து ஓட்டப்பந்தய ஏற்பாடுகளை செய்திருந்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.எம்.சி. தலைவர் மினி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • திருவள்ளுவர் சிலைக்கு 6 மாதங்களாக படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆண்டுக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதி கை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கை யாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளு வர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்கு வரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்ப டுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்ட தாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல்அலையை ரசிக் கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட் டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்துக்கான கட்டு மான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை யில் மட்டும் மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணி தொடங்கி 6 மாதங்கள் ஆன பிறகும் திருவள்ளுவர் சிலையில் இணைப்பு பாலத்துக்கான தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறம் அமைந் துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான எந்தவித பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலையை பார்க்க முடியாமல் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர். சமீபத்தில் தான் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசுவ தற்காக 7 மாத காலமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ரசாயன கலவை பூசும் பணி முடிந்த பிறகு ஒரு சில மாதங்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக் கப்பட்டு வந்தது. இதற்கிடை யில் இந்த பாலப்பணியும் உடனடியாக தொடங்கி யதால் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்க முடியா மல் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.

    இந்த நிலையில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசன் காலங்களில் லட்சக்க ணக்கான அய்யப்ப பக்தர்க ளும், சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரு வார்கள்.

    எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண் டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    பூதப்பாண்டி :

    அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் பொதுமக்கள் சார்பில் பூதப்பாண்டியை அடுத்துள்ள தெரிசனங்கோப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது குருபூஜை விழா நடந்தது.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க செயலாளர் சுபாஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகன், தோவாளை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஜான் அசூன், வார்டு உறுப்பினர் ரதீஷ், மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிக்கல்
    • நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படு கிறது.

    குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரி யில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதி யாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சி லர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பி னும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்ப தற்காக இப்போதே வெளியூர் வியா பாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரி களின் நிலை கேள்விக்குறி யாக தான் உள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    நாகர்கோவில் :

    குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்ப தால் போதுமான வகுப்ப றைகள் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த அவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    தொடர்ந்து வட்டார தலைவர் பிரேம் குமார் தலைமையில் கால்டு வின் முன்னிலையில் விஜய் வசந்த் எம்.பி. புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி செய்து அடிக்கல் நாட்டி னார்.

    நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார தலைவர் ஜெபா, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோ பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
    • இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 35). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சமீபம், போலீஸ் நிலைய சந்திப்பில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி கடையின் முன்பு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை அதிகாலையில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், அஜினின் இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து, கள்ள சாவியை போட்டு திறக்க முயற்சிக் கின்றனர். ஆனால் அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் இருவரும் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ கட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை.

    மேலும் 2, 3 மாதங்களில் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் அடிப்பகுதியிலிருந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு சென் றுள்ளன. ஆனால் குற்ற வாளிகள் கைது செய்யப்பட வில்லை. மார்த்தாண்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஆனால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக திருட்டு வேலைகளில் ஈடுபடுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு மற்றும் இரு சக்கர வாகன திருட்டுகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனையடைந்த சுபாஷினி வீட்டில் ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். சென்னையை சேர்ந்தவர் சுபாஷினி (வயது23). பி.காம் பட்டதாரி. இவர்கள் இருவரும் வங்கி ஒன்றில் வேலை பார்த்தனர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சுபாஷினி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்தார். கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இதனால் மனவேதனையடைந்த சுபாஷினி வீட்டில் ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது, சுபாஷினி தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
    • மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென் றுள்ளார். அப்போது அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென் றுள்ளார். அங்கு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அப்போது டாக்டர் உடனடியாக ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்து விடுவோம் என கூறி அந்த மருத்துவ மனையிலே ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார்.

    மேலும் டாக்டர் பழைய ரிப்போர்ட்டுகளை அனுப்பு வதற்கு மொபைல் நம்ப ரையும் கொடுத்துள்ளார். இவரும் அந்த பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள் ளார். மருத்துவர் உங்களது வயிற்றில் இருக் கும் கட்டி எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென கூறி உள்ளார். அதற்கு பாத்திமாவும் தயா ராகி உள்ளார்.

    அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு பாத்திமாவும் எனக்கு அதற்கான வசதி இல்லை எனவும், அதற்கான அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் அது உங்களது இஷ்டம், இங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால் காலதா மதமாகும் என கூறியுள்ளார்.

    நான் பணிபுரியும் மருத் துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் உடனடி யாக செய்யலாம் எனவும், திரும்பவும் தெரிவித்துள் ளார். பின்னர் பாத்திமா மருத்துவரிடம் எனக்கு அதிக வலி எடுப்பதாகவும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    அப்போது அறுவை சிகிச்சை மருத்துவர் கடந்த வாரம் குழித்துறை அரசு மருத்துவமனையில் அட்மிஷன் ஆகும்படி கூறி யுள்ளார். உடனடியாக மருத்துவர் கூறிய தேதியில் பாத்திமா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளி யாக சேர்ந்துள்ளார்.

    மருத்துவர் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய தேதியில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை. இது குறித்து பாத்திமா கேட்டவுடன் இது அரசு ஆஸ்பத்திரி உடனே செய்ய முடியாது. நாளை செய்யலாம், அடுத்த நாள் செய்யலாம், அதற்கு அடுத்த நாள் பண்ணலாம் என காலம் தாழ்த்திக்கொண்டே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு வலி அதிகமாகி உள்ளது.

    இதனால் துடிதுடித்து போன பாத்திமா அழுது புலம்பி உள்ளார். இதை பார்த்த மருத்துவர் நீங்கள் வீட்டுக்குச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஏன் என கேட்டதற்கு இங்கு நிறைய நோயாளிகள் இருக் கிறார்கள் நீங்கள் சென்று விடுங்கள் கூறியுள்ளார். இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் அவர் வலியோடு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது வீடியோ பதிவை பார்ப்பவர்களுக்கு மனதில் வேதனையை ஏற்ப டுத்துகிறது. ஏழைகள் பயன்பட வைத்திருக்கும் அரசு மருத்துவமனை இவ் வாறான மருத்துவர்களின் பிடியில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இவ்வா றான அநியாயங்களை தட்டி கேட்டால், மருத்துவர்கள் தட்டிக்கேட்பவர் மீது, மருத்துவர்களை தாக்கி விட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து அவர்களை சிறை யில் தள்ளி விடுகின்றனர்.

    இதனால் யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை, தமிழக மருத்துவத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுப் பதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப டுத்தி வருகிறது. இவ்வாறான மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பியுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிற்றாறு அணைகள் நிரம்பியதை யடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டது. தற்பொழுது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்ப டும். அணை நீர்மட்டம் இன்று காலை 42.02 அடி யாக உயர்ந்தது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    கோதையாறு, திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எப்பொ ழுது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படும் பட்சத்தில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண் காணித்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.72 அடியாக உள்ளது. அணைக்கு 382 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலை யோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளச்சல், இரணியல், குழித் துறை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. இரணியலில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகு படி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    6500 ஹெக்டேரில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை அதிகாரி கள் அவர்களுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடையின்றி வழங்கி வருகிறார்கள்.

    • மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்
    • யானை கூட்டம் அடிக்கடி உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல் லும் சாலையில் யானை களின் நடமாட்டம் அதிக ரித்து வருகின்றன. இந்த சாலையில் கோதமடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலை யை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர். இதை யடுத்து சாலையின் இருபக்க மும் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு மரண பயத்துடன் யானை கூட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் சாலையை விட்டு நகராமல் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு மெல்ல... மெல்ல நகரத் தொடங்கின.

    இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கி ருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, வனத்துறையினர் யானைகளின் நட மாட்டத்தை கண்காணித்து சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டம், கேரள வன பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கன்னி யாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் புல் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ள தால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடி வருவ துண்டு.

    தற்போது பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக் கின்றன. முன்னர் ரப்பர் தோட் டங்களில் வாழை ஊடு பயிராக போடப்பட்டு இருந்ததால் அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால், தற்போது வாழை களுக்கு பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது.

    குறிப்பிட்ட சீசன் முடிவ டைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×