search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஜபுரம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோஷம் - பரபரப்பு
    X

    மகாராஜபுரம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோஷம் - பரபரப்பு

    • 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    கன்னியாகுமரி, நவ.2-

    மகாராஜபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் இந்த பஞ்சாயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 11 கிராமசபை கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.

    கூட்டத்தில் துணை தலைவர் பழனிகுமார், மகாராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சுயம்புலிங்கம், அனீஸ்வரி, சுயம்பு, ராஜம், சுகாதார செவிலியர் ஹெப்சிபாய், மக்களை தேடி மருத்துவம் செவிலியர் ரூபி, சமூக ஆர்வலர் சொர்ணவதி உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களான சிவகாமி, கிருஷ்ணம்மாள், பகவதியம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் மகாராஜபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்

    Next Story
    ×