search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் காசுகள் எண்ணும் மரத்தட்டுகள் கண்காட்சி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் காசுகள் எண்ணும் மரத்தட்டுகள் கண்காட்சி

    • முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன
    • கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொரு ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மாதம் கண்காட்சியில் அரும் பொருளான கலை நயம் மிக்க காசுகள் எண்ணும் மரத்தட்டு இடம் பெற்று உள்ளது.

    காசு எண்ண பயன்படும் இத்தகைய மரத்தட்டுக்கள் திருவனந்தபுரம், திருவி தாங்கூர், கொச்சின் போன்ற கேரள சமஸ்தான பகுதிகளிலும் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்ட பகுதிகளிலும் பெருமளவில் வழக்கத்தில் இருந்தன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காசு எண்ணும் மரத்தட்டு செவ்வக வடிவமாக உள்ளது. இதில் மொத்தம் 200 குழிகள் உள்ளன. குத்து கோட்டு வரிசையில் 12 குழிகளும், கிடைகோட்டு வரிசையில் 15 புள்ளிகளும் உள்ளன.

    முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன. ஆக மொத்தம் 200 குழிகள் உள்ளன. நமது முன்னோர்கள் பயன்ப டுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரி வித்தார். இந்த கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    Next Story
    ×