search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1 லட்சம் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1 லட்சம் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி தீவிரம்

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நடைபெறுகிறது

    கன்னியாகுமரி, நவ.2-

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா பயணி கள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

    இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடு முறை என்பதாலும், கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர் கள் கூட்டம் அலைமோதும்.

    எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சபரிமலை சீசனையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவி லில் தினமும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர் களுக்கு வசதியாக திருக்கோ வில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு வசதி யாக "கியூ செட்" அமைந்து உள்ள பகுதியில் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி, மின்விளக்கு வசதி மேல் கூரை சீரமைக்கும் பணி போன்ற பணிகள் நடை பெற்றுள்ளன. கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள நடைபாதை குண்டும், குழியுமாக கிடந்தது. பிரகார நடைபாதையில் சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப் பட்டு சீரமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலை யில் வருகிற 17-ந்தேதி சபரி மலை சீசன் தொடங்குகிறது.

    இந்த சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். இதைத்தொ டர்ந்து பக்தர்களுக்கு வசதி யாக கோவிலில் நடை திறக்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க திருக்கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் லட்டு, அரவணை, முறுக்கு, பஞ்சா மிர்தம், அதிரசம் போன்ற பிரசா தங்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் இப்போதே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின் போது நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப் பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×