என் மலர்
கள்ளக்குறிச்சி
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
- சிறந்த மதிப்–பெண் பெற்ற மாணவ-மா ண–வி–களை பள்ளி தாளாளர் மணிமா–றன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி:
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 616 மாணவ-மாணவிகளில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பே ரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 மாணவ-மாணவிகளும் பெற்றனர்.
அதேபோல் கணித பாடத்தில் 12 பேர், வேதியியலில் 17 பேர், இயற்பியலில் 4 பேர், உயிரியலில் 2 போ், கணினி அறிவியலில் 8 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவர், கணக்குப்பதிவியலில் 2 பே ர் என மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவி ஜான்சிராணி 600-க்கு 589, மாணவர்கள் ராம்குமார்-588, சாய்கணேஷ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்பொழுது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பித்தார் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
- பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
- முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி ஜெயஸ்ரீ-594 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம், தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குபதிவியியல் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணினிபயன்பாடுகள் 100 மதிபெண் பெற்றுள்ளார்.
பள்ளியில் 2-ம் இடம் பெற்ற மாணவி அம்சவள்ளி-590 மதிபெண் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் மதிப்பெண்பெ ற்றுள்ளார்.பள்ளி அளவில் 3-ம் மதிப்பெண் 588 இரண்டுபேர் பெற்றுள்ளனர். மாணவி நவினா தமிழ் 96, ஆங்கிலம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 37 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் இந்த பள்ளி மாணவ-மாணவிகள் 590-க்கும் மேல் 2 பேர், 580 க்கும் மேல் 11பேர், 550க்கும் மேல் 55 பேர், 500க்கும் மேல் 188 பேர் அதிக மதிப் பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, இயக்குனர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
- தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.
அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரங்கப்பனூரில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் தூய்மை இயக்கம் மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனாகாமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
- முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும் பணியும், மண் பரிசோதனையும் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.56 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலையில் உள்ள இருவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் சாலைபாதுகாப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள இருவழிச்சாலையில் சாலை விபத்து அதிகமாக ஏற்படுவது கண்டறியப்பட்டன.இந்த விபத்துகளை குறைக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் சுமார் ரூ.2.21 லட்சம் செலவில் சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கி.மீ. தூரத்திற்கு 170 போலாட்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், முற்றிலுமாக அவ்விடங்களில் விபத்துகள் ஏற்படா வண்ணம் தடுத்திட, கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை இருவழிச்சாலை பகுதிகளை 4வழிச்சாலையாக மாற்றித் தருமாறு மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.56 கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை முதற்கட்டமாக இருவழிச்சாலையினை 4 வழிச்சாலையாக மாற்றிடவும், இப்பணியினை டிசம்பர் 2022-க்குள் முடித்திடவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணியில் முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
- மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.51 ஆகும். தேர்வில் மாணவி ஜான்சிராணி 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் 99, உயிரியல் 98 வேதியியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ராம்குமார் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் மற்றும் வேதியியல் 98, உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சாய் கணேஷ் 587 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் 95, இயற்பியல் மற்றும் கணக்கு 100, வேதியியல் 98, உயிரியல் 99 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதன்மோகன் 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 98, கணக்கு 97 ஆகிய மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேரும், வேதியியல் பாடத்தில் 17 பேரும், இயற்பியல் பாடத்தில் 4 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 2 பேரும் ஆக மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 பேரும் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் இரா.மணிமாறன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் பாராட்டினர்.
- 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
- அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி.மேல்நிலை பள்ளியில் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3 சதவீத மாணவ மாணவிகளும்,10-ம் வகுப்பில் 100 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில்12-ம் வகுப்பில் தேர்வு எழுதிய 140 பேரில் 139பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் கண்மணி 579 மதிப்பெண்களும் மோகனா 575 மதிப்பெண்களும் மானசா ஸ்ரீ 574 மதிப்பெண்களும், ஆஷிகாபிலா 572 மதிப்பெண்களும் பெற்றனர். 36 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்களும், மானசாஸ் ஸ்ரீ வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், குணசீலன் கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் ஓவியா என்ற மாணவி 488 மதிப்பெண், பார்த்தசாரதி 487 மதிப்பெண்களும் ,ஹரிபிரசாத் 482 மதிப்பெண்களும் பெற்றனர். 44 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தமிழரசி, செயலாளர் சுஜாதா, பள்ளியின் முதல்வர் திருவேங்கடம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- அத்தியூர் கிராமத்தில் தனது சொந்த செலவில் ஏரி உபரி நீர் வாய்க்கால் தூர்வாரப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
- உபரிநீர் கிராமம் மற்றும் காலனி வீதி வழியாக செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே குறிப்பிட்ட வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் மழைக்காலங்களில் அத்தியூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கிராமம் மற்றும் காலனி வீதி வழியாக செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே குறிப்பிட்ட வாய்க்காலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல். ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அத்தியூர் கிராமத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அத்தியூர் ஏரியில் இருந்து தெற்கு தெருவையொட்டி செல்லும் உபரி நீர் வாய்க்காலை ஆய்வு செய்தார்.
அப்போது அரசு மூலம் கால்வாயை தூர்வாருவதற்குகால தாமதம் ஆகும் என்பதால் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை உடனடியாக செய்து தருவதாக கிராமமக்களிடம் தெரிவித்தார். அப்போது மாவ ட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தனது செலவில் உபரி நீர் செல்லும் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைத்து தருவதாகவும், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் கால்வாயின் குறுக்கே மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் பாலம் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து அத்தியூர் புது காலனியை ஆய்வுசெய்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அங்கு குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வழி செய்வதாக அந்தபகுதி மக்களிடம் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் பெருமாள், அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன், கட்சி நிர்வாகிகள் செந்தில், கே.அண்ணாதுரை, செல்வம், ராஜீவ்காந்தி, ஊராட்சி செயலாளர்கள் சுகுமாரன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ஒருவருக்கு நாடக உபகரணங்கள் வாங்குவதற்காக மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000- க்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு செல்போன்களையும் ஒரு காது கோளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் காதொலி கருவி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஷெர்லி ஏஞ்சலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் அருகே ரூ.38 லட்சம் மதிப்பில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகள் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தியாகதுருகம் யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது செயற்பொறியாளர் சின்னப்பன், வேளாண்மை அலுவலர் வனிதா, உதவி வேளாண்மை அலுவலர் வினோத், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன், எத்திராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் இறந்து கிடந்தன.
- நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பழைய பல்லகச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரேஷன் கடை அருகே கட்டப்பட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவரின் நான்கு பசுமாடுகள் மீது விழுந்ததில் மாடுகள் சம்பவ இடத்தில் இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசு மாடுகளை மீட்டனர். பழுதடைந்த ரேஷன் கடை இடிந்து விழுந்து நான்கு மாடுகள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






