search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை
    X

    கள்ளக்குறிச்சி ஏ. கே.டி.பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் பாராட்டினார். அருகில் துணை முதல்வர் சர்ப்ராஜ் உள்ளார்.

    பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை

    • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி ஜெயஸ்ரீ-594 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம், தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குபதிவியியல் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணினிபயன்பாடுகள் 100 மதிபெண் பெற்றுள்ளார்.

    பள்ளியில் 2-ம் இடம் பெற்ற மாணவி அம்சவள்ளி-590 மதிபெண் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் மதிப்பெண்பெ ற்றுள்ளார்.பள்ளி அளவில் 3-ம் மதிப்பெண் 588 இரண்டுபேர் பெற்றுள்ளனர். மாணவி நவினா தமிழ் 96, ஆங்கிலம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 37 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவ-மாணவிகள் 590-க்கும் மேல் 2 பேர், 580 க்கும் மேல் 11பேர், 550க்கும் மேல் 55 பேர், 500க்கும் மேல் 188 பேர் அதிக மதிப் பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, இயக்குனர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×