search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dredged"

    • அத்தியூர் கிராமத்தில் தனது சொந்த செலவில் ஏரி உபரி நீர் வாய்க்கால் தூர்வாரப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
    • உபரிநீர் கிராமம் மற்றும் காலனி வீதி வழியாக செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே குறிப்பிட்ட வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் மழைக்காலங்களில் அத்தியூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கிராமம் மற்றும் காலனி வீதி வழியாக செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே குறிப்பிட்ட வாய்க்காலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல். ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அத்தியூர் கிராமத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அத்தியூர் ஏரியில் இருந்து தெற்கு தெருவையொட்டி செல்லும் உபரி நீர் வாய்க்காலை ஆய்வு செய்தார்.

    அப்போது அரசு மூலம் கால்வாயை தூர்வாருவதற்குகால தாமதம் ஆகும் என்பதால் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை உடனடியாக செய்து தருவதாக கிராமமக்களிடம் தெரிவித்தார். அப்போது மாவ ட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தனது செலவில் உபரி நீர் செல்லும் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைத்து தருவதாகவும், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் கால்வாயின் குறுக்கே மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் பாலம் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.

    தொடர்ந்து அத்தியூர் புது காலனியை ஆய்வுசெய்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அங்கு குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வழி செய்வதாக அந்தபகுதி மக்களிடம் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் பெருமாள், அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன், கட்சி நிர்வாகிகள் செந்தில், கே.அண்ணாதுரை, செல்வம், ராஜீவ்காந்தி, ஊராட்சி செயலாளர்கள் சுகுமாரன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    வெள்ளத்தில் இருந்து தப்பிக்க கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ramadoss #tngovt

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவு கூட முடிவடையவில்லை.

    2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ஒரே ஆண்டில் பல முறை சாலைகள் போடப்பட்ட தாக கணக்கு காட்டி மக்களின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குப்பை அகற்றும் பணிகளும் சரிவர செய்யப்படாததால் சென்னை மாநகரம் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சீர்மிகு சென்னை நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது.

    தென்மேற்கு பருவ மழையைப் போலவே வட கிழக்குப் பருவமழையும் காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி வட தமிழகத்திலும், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

    சென்னையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணம் செய்தால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளும், தெருக்களும் பள்ளம் தோண்டி சிதைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடி வடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் முடிக்கும் அளவுக்கு பராமரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற வில்லை.

    மழைநீர் வடிகால்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால் கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

    சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேழிவை ஏற்படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராம தாஸ் கூறியுள்ளார். #ramadoss #tngovt

    ×