என் மலர்
ஈரோடு
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகர் - ரெயில் நகர் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இருந்து கழிவுகள் வெளியேறி சாலையில் பாய்ந்து செல்கிறது. பல மாதங்களாக இப்படி கழிவுகள் வெளியேறி வருவதாகவும், மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊஞ்சலூர் அருகே காதலன் இறந்த துயரத்தில் தூக்குப்போட்டு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊஞ்சலூர்:
ஊஞ்சலூர் அருகே உள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கேசவன் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இதேபோல் ஊஞ்சலூர் அருகில் உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் கிருத்திகா (25). பி.ஏ. முடித்து உள்ளார். இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார் ஆஸ்பத்திரியின் ஈரோடு கிளையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
கேசவனும், கிருத்திகாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேசவனிடம் கிருத்திகா கூறினார். இதற்கு கேசவன் தன்னுடைய வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்து கொண்டு பின்னர் எங்களுடைய வீட்டில் தெரிவித்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன் கிளாம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 3-ந் தேதி அன்று அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் திருமணநாளில் கேசவன் வரவில்லை என தெரிகிறது. இதனால் திருமணம் நின்று போனது. இதன்காரணமாக கிருத்திகா மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் கோவையில் கேசவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கிருத்திகா மிகவும் மனமுடைந்தார். மேலும் கிருத்திகாவின் பெற்றோரும் அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டை வீட்டு வெளியே சென்று உள்ளனர்.
தூக்குப்போட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட துயரத்தில் இருந்த கிருத்திகா இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் உடைந்த கண்ணாடியை எடுத்து கிருத்திகா தனது கையை அறுத்து கொண்டார். பின்னர் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் இறந்த துயரத்தில் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெளியூர்களில் இருந்து அந்தியூர் வந்த 156 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் இருந்து வேலை விஷயமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இ-பாஸ் மூலம் அந்தியூருக்கு வந்தனர். அவ்வாறு வந்த அனைவருக்கும் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 113 பேர் இமாச்சல்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, ஒடிசா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 43 பேர் என மொத்தம் 156 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் சென்னையில் இருந்து வந்த 3 பேர் மட்டும் பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்தியூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி அபராதம் விதிக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி அபராதம் விதிக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர் எஸ்.நல்லசாமி தலைமையில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த 52 பேருக்கு தலா ரூ.100 உடனடி அபராதம் விதித்தனர். இதுபோன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. 2-வது முறை அதே நபர் பிடிபட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 3-வது முறை பிடிபட்டால் போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
ஈரோடு:
தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார். அதை அனைத்து துறை அதிகாரிகள் திரும்ப கூறி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி வருமாறு:-
இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதிகூறுகிறேன்.
இவ்வாறு கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. வைபுதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வனிதாமணி ஜெகதாம்பாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஈஸ்வரன் (கணக்குகள்), ஜெகதீஷ் (வளர்ச்சி), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் இ.வேல்முருகன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் பாலதண்டாயுதம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் டி.எஸ்.இந்திரா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சி.பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

அந்தியூர், அம்மாபேட்டையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வழங்கினார்.
ஈரோடு:
கொரோனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அந்தியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், அந்தியூர் இ.எம்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பர்கூர், வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
இதேபோல் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்பட 38 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
மேலும் போலீசாரிடம் போலீஸ் சூப்பிரண்டு பேசும்போது, ‘கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். மேலும் கடமையின் போது வேகம், விவேகம், நமது பாதுகாப்பு ஆகியவற்றை ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டு பணியாற்ற வேண்டும்’ என்றார்.

10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முயற்சி எடுக்கப்பட்டபோது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குரிய அனைத்து ஆலோசனைகளையும் செய்த பிறகு தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதில் காலாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், அரையாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன. தனித்தேர்வர்கள் நிலை குறித்து பரிசீலனை செய்து அறிவிக்கப்படும். அதேபோல் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது. இதுபோன்ற பல்வேறு குறைகள் குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
நூலகம் திறப்பு குறித்தும் முதல்-அமைச்சர் அறிவிப்பார். பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் ஆய்வு நடத்தி முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இலவச பட்டய கணக்காளர் ஆன்லைன் பயிற்சியை கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இலவச பட்டய கணக்காளர் ஆன்-லைன் பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் கோபி அருகே உள்ள நம்பியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர் என அறிவித்துள்ளார். காலாண்டு தேர்வில் 40 சதவீதமும், அரையாண்டு தேர்வில் 40 சதவீதமும், 20 சதவீதம் வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பட்டய பயிற்சி வகுப்புகள் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முதலாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை மேற்கொள்ள விருப்பப்படும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை சந்தித்து பதிவு செய்துகொள்ளலாம். இதன் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 3 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தான் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவிற்கு தற்போது 10 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பட்டயக் கணக்காளர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.

பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இயங்கும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இடவசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் தினசரி மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கே வந்தது.
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு மார்க்கெட் வளாகத்திற்குள் அனைத்து காய்கறி கடைகளும் இயங்கி வந்தன. ஆனால் தற்போது, மார்கெட்டின் உட்பகுதியில் போதிய இட வசதி இல்லை. இதன் காரணமாக மார்க்கெட் எதிரே ஈரோடு செல்லும் ரோட்டின் மீது வியாபாரிகள் கடை விரித்து அமர்ந்து விட்டனர்.
கடந்த 4 நாட்களாக பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குன்னத்தூர் நால் ரோடு வரை சென்று அங்கிருந்து ஈரோடு ரோட்டிற்கு திரும்ப வேண்டியுள்ளது. இதனால் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மார்க்கெட் வழியாக எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘தினசரி மார்க்கெட்டை கொரோனா பாதிப்பின் போது பஸ் நிலையத்தில் வைத்து இயக்கிய போது, இட நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. வாகனங்களை அங்கு வசதியாக நிறுத்தவும், சமூக இடைவெளி விட்டு, பொதுமக்கள் காய்கறிகளை வாங்கவும், பஸ் நிலையம் பகுதி ஏதுவாக இருந்தது. ஆனால், தற்போது பழைய பஸ் நிலைய மார்க்கெட் பகுதியில் போதிய இட வசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஈரோடு ரோட்டிற்கும்-பவானி ரோட்டிற்கும் இடையே அமைந்துள்ள வாரச்சந்தை வளாகத்திற்கு, பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் மார்க்கெட்டை மீண்டும் ஏற்படுத்தினால் அனைவருக்கும் அது நன்மை பயக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து மார்க்கெட் மற்றும் பஸ் நிலைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பஸ்கள் 50 சதவீதம் இயக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்து இருந்தார்.
அதன் படி இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கியது.
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 270 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு பஸ் நிலையத்தில் 2 நிறுத்தத்தில் மட்டும் பஸ் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மீதி பகுதிகளில் தற்காலிக நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்படும்.
நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளன அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்கும் என ஈரோடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து இன்று ஈரோட்டுக்கு தனியார் பஸ்கள் வந்தன. அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் போல் மினி பஸ் களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அந்தியூர்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (27). இவர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுபாஷ் குப்பாண்டபாளையத்தில் உள்ள தனது வீட்டில் மாணவியுடன் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அங்கு சென்ற போலீசார் சுபாஷிடம் விசாரித்த போது அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து மாணவியை மீட்டனர்.
மாணவியை கடத்தி திருமணம் செய்த சுபாசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பவானிகோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு 1,103 பேர் ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு:
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு சிறப்பு ரெயில்கள் மூலமாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் இடமில்லாததால் ஈரோட்டில் தங்கியிருந்தவர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் ஈரோட்டில் தங்கியுள்ள 543 பேர் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதேபோல் திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈரோட்டுக்கு வேன், பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.
மொத்தம் 1,103 பேர் சிறப்பு ரெயிலில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஈரோடு ரெயில் நிலையத்தில் விண்ணப்பம் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டன.