என் மலர்
செய்திகள்

பெருந்துறை பழைய பஸ் நிலைய பகுதியில் இயங்கி வரும் தினசரி காய்கறி மார்க்கெட்
காய்கறி மார்க்கெட்டில் இடவசதி இல்லாததால் வியாபாரிகள் அவதி
பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இயங்கும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இடவசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் தினசரி மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கே வந்தது.
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு மார்க்கெட் வளாகத்திற்குள் அனைத்து காய்கறி கடைகளும் இயங்கி வந்தன. ஆனால் தற்போது, மார்கெட்டின் உட்பகுதியில் போதிய இட வசதி இல்லை. இதன் காரணமாக மார்க்கெட் எதிரே ஈரோடு செல்லும் ரோட்டின் மீது வியாபாரிகள் கடை விரித்து அமர்ந்து விட்டனர்.
கடந்த 4 நாட்களாக பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குன்னத்தூர் நால் ரோடு வரை சென்று அங்கிருந்து ஈரோடு ரோட்டிற்கு திரும்ப வேண்டியுள்ளது. இதனால் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மார்க்கெட் வழியாக எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘தினசரி மார்க்கெட்டை கொரோனா பாதிப்பின் போது பஸ் நிலையத்தில் வைத்து இயக்கிய போது, இட நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. வாகனங்களை அங்கு வசதியாக நிறுத்தவும், சமூக இடைவெளி விட்டு, பொதுமக்கள் காய்கறிகளை வாங்கவும், பஸ் நிலையம் பகுதி ஏதுவாக இருந்தது. ஆனால், தற்போது பழைய பஸ் நிலைய மார்க்கெட் பகுதியில் போதிய இட வசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஈரோடு ரோட்டிற்கும்-பவானி ரோட்டிற்கும் இடையே அமைந்துள்ள வாரச்சந்தை வளாகத்திற்கு, பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் மார்க்கெட்டை மீண்டும் ஏற்படுத்தினால் அனைவருக்கும் அது நன்மை பயக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து மார்க்கெட் மற்றும் பஸ் நிலைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Next Story