என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    ஈரோடு மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி அபராதம் விதிக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி அபராதம் விதிக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர் எஸ்.நல்லசாமி தலைமையில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த 52 பேருக்கு தலா ரூ.100 உடனடி அபராதம் விதித்தனர். இதுபோன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. 2-வது முறை அதே நபர் பிடிபட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 3-வது முறை பிடிபட்டால் போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
    Next Story
    ×