என் மலர்
செய்திகள்

கைது
மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அந்தியூர்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (27). இவர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுபாஷ் குப்பாண்டபாளையத்தில் உள்ள தனது வீட்டில் மாணவியுடன் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அங்கு சென்ற போலீசார் சுபாஷிடம் விசாரித்த போது அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து மாணவியை மீட்டனர்.
மாணவியை கடத்தி திருமணம் செய்த சுபாசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பவானிகோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story