என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை
    X
    பாதாள சாக்கடை

    ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குளம்போல் தேங்கிய கழிவுநீர்

    ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகர் - ரெயில் நகர் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இருந்து கழிவுகள் வெளியேறி சாலையில் பாய்ந்து செல்கிறது. பல மாதங்களாக இப்படி கழிவுகள் வெளியேறி வருவதாகவும், மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×