என் மலர்
ஈரோடு
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வெளியாகி உள்ளதால் வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் குவிந்தனர்.
ஈரோடு,:
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வெளியாகி உள்ளதால் வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் குவிந்தனர்.
ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் அதிகாலை போடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 தியேட்டர்கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் 11 தியேட்டர்கள் உள்ளன. இதில் வலிமை படம் 28 தியேட்டர்களில் இன்று வெளியானது. மாநகர் பகுதியில் உள்ள 11 தியேட்டர்களிலும் வலிமை படம் வெளியானது.
அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். தியேட்டர் முன்பு பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
சில ரசிகர்கள் அஜித் கெட்டப்பில் வந்திருந்தனர். இன்னும் சில தியேட்டர் களில் அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்க வலிமை படத்தை வரவேற்றனர்.
சத்தியமங்கலம் பகுதியில் 2 தியேட்டர்களில் இன்று வலிமை படம் வெளியானது. இதையடுத்து தியேட்டர் முன்பு வாழை தோரணம் கட்டியிருந்தனர்.
மேலும் மின்விளக் குகளால் தியேட்டர்கள் அலங்காரம் செய்யப்பட் டிருந்தது.
படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் அஜித் பேனர் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
தியேட்டருக்குள் படம் வெளியா னதும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்தபடி நடனம் ஆடினர்.
படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஈரோடு மேட்டூர் ரோடு முன்பு உள்ள ஒரு தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் 12.490 கி.மீ. நீளத்துக்கு 8 சாலை பணிகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
ஈரோடு:
பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் 12.490 கி.மீ. நீளத்துக்கு 8 சாலை பணிகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு ட்பட்ட மாநகராட்சி, நகரா ட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சியில் சாலை வசதிகள் இல்லாத மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்¬யினை நிறைவேற்றிடும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்காக 8 சாலைப்பணிகள் 12.490 கி.மீ. நீளத்தில் ரூ.288.010 லட்சம் மதிப்பீட்டிலும்,
2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68.41 லட்சம் மதிப்பீட்டிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியினை மேற்கொள்வதால் சுமார் 17,529 மக்கள் பயன் பெறுவார்கள்.
இதில் பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49.390 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வனஎல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49.760 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.48.140 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல், பர்கூர் ஊராட்சி பாலபந்தனூர் சாலை முதல் பெஜலட்டி வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.25.530 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், பர்கூர் ஊராட்சி கெப்பக்காடு சாலை முதல் பெஜலட்டி வரை ஓரடுக்கு கப்பிச் சாலை ரூ.36.650 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்,பர்கூர் ஊராட்சி கோவில்நத்தம் மின்கம்பம் முதல் அக்னிபாவி கொங்காடை வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.32.850 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், பர்கூர் ஊராட்சி பெஜிலி பாளையம் திக்கையூர் சாலை வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.4.380 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்,பர்கூர் ஊராட்சியில் தேவர்மலை வழியாக தாமரைக்கரை முதல் மடம் வரை ரூ.34.110 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் ஈரட்டி வழியாக தாம ரைக்கரை முதல் மடம் வரைரூ.34.300 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித் திருப்பூர் ஊராட்சியில் 3.500 கி.மீ. நீளத்தில் ரூ.66.470 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணியினைமேற்கொள்வதால் சுமார் 1,200 மக்கள் பயன்பெறுவர்.
இதில் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி குரும்பானூர் சாலை முதல் வன எல்லை வரை ரூ.35.620 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல், வெள்ளித்திருப்பூர் ஊராட்சி குரும்பானூர் சாலை முதல் வன எல்லை வரை ரூ.30.850 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சைபாலத் தொழுவு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1.240 கி.மீ நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச்சாலை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியினால் சுமார் 72 குடும்பங்களை சார்ந்த 186 மக்கள் பயனடைவார்கள்.
இதில் புஞ்சைபாலத் தொழுவு ஊராட்சி சென்னி மலை&ஊத்துக்குளி சாலை முதல் வசந்தம் நகர் சாலை வரை ஓரடுக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கப்பிசாலை அமைத்தல் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் 0.900 கி.மீ நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியானது ரூ.49.81 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட உள்ளது.
இப்பணியினை மேற்கொள்வதால் சுமார் 296 மக்கள் பயன்பெறுவார்கள். இதில் மைலம்படி ஊராட்சி வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டு வலசு சாலை வரை ரூ.49.810 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அந்தியூர் வட்டா ரத்தில் பர்கூர் ஊராட்சி ஒன்னக்கரை முதல் முத்தூர் வனச்சாலை வரை ரூ.41.310 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அந்தியூர் (பர்கூர்)அம்மாபேட்டை, சென்னி மலை மற்றும் பவானி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரூ.4.94 கோடி மதிப்பீட்டில் 14 பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மேட்டூர் ரோடு முன்பு உள்ள ஒரு தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு:
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வெளியாகி உள்ளதால் வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் குவிந்தனர்.
ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் அதிகாலை போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 தியேட்டர்கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் 11 தியேட்டர்கள் உள்ளன. இதில் வலிமை படம் 28 தியேட்டர்களில் இன்று வெளியானது. மாநகர் பகுதியில் உள்ள 11 தியேட்டர்களிலும் வலிமை படம் வெளியானது.
அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். தியேட்டர் முன்பு பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். சில ரசிகர்கள் அஜித் கெட்டப்பில் வந்திருந்தனர். இன்னும் சில தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்க வலிமை படத்தை வரவேற்றனர். சத்தியமங்கலம் பகுதியில் 2 தியேட்டர்களில் இன்று வலிமை படம் வெளியானது. இதையடுத்து தியேட்டர் முன்பு வாழை தோரணம் கட்டியிருந்தனர். மேலும் மின்விளக்குகளால் தியேட்டர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் அஜித் பேனர் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தியேட்டருக்குள் படம் வெளியானதும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்தபடி நடனம் ஆடினர். படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஈரோடு மேட்டூர் ரோடு முன்பு உள்ள ஒரு தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

ஈரோடு கருங்கல்பாளளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, வீரப்பன் சத்திரம் கங்கை வீதியை சேர்ந்தவர் அன்பரசு. கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதாவள்ளி. இவர்களது மகன் ஹரிஷ் குமார் (வயது 13). ஈரோட்டில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வைரபாளையம் குப்பை கிடங்கு அருகே உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு ஹரிஷ் குமார் நண்பர்களுடன் குளிக்க சென்றார். ஹரிஷ்குமாருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.
நண்பர்களுடன் உற்சாக மிகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது ஹரிஷ்குமார் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.
இதைக் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். அதற்குள் மாணவன் நீரில் மூழ்கி விட்டான். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர்.
பின்னர் சிறிது நேரத்தில் மாணவனின் உடலை மீட்டனர். ஹரிஷ் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு காரபாறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 63). இவர் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியிடம் நைசாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் வீட்டுக்குள் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குருநாதன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் குருநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பெருந்துறை அடுத்த தென்முகம் வெள்ளோடு, தண்ணீர்பந்தல், ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த தென்முகம் வெள்ளோடு, தண்ணீர்பந்தல், ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயர் ஹரிபாபு. பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 15.2.2019-ம் ஆண்டு திடீரென எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அவர் வெளியே செல்லும் போது 30 ஆயிரம் பணம், 7 பவுன் நகை, மற்றும் எனக்கு சொந்தமான 1,800 சதுர அடி நில பத்திரத்தையும் எடுத்து சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவர் எங்கு சென்றார்? எங்கு போனார்? என தெரியவில்லை.
இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை போலீசாரும் எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை.
போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து கேட்டால் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லை.
வீட்டில் இருக்கும் ஆடுகளை விற்று செலவு செய்து வருகிறேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாயமான எனது கணவரையும், நகை பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 892 பேருக்கு பரிசோதனை செய்ததில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்ட பட்டியலின் படி புதிதாக மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 982 பேர் தொற்றினால் இருந்து மீண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 771 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு பஸ் நிலையத்தில் விபத்தில் இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் முன்பு தந்தை-மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் விபத்தில் இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் முன்பு தந்தை-மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் திவாகரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மனோகரனும், திவாகரனும் தங்களது காரில் கொல்லம் பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக திவாகரன் கார் மீது லேசாக உரசியது. இதில் கார் சேதமடைந்தது.
இதையடுத்து சேத மடைந்த காருக்கு தேவையான பணத்தை தருவதாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தெரிவித்தனர்.
இதனையடுத்து திவாகரன் சேதமடைந்த காரை தனது சொந்த பணத்தில் செலவழித்து சரி செய்தார்.
திவாகரன் சம்பந்தப்பட்ட பஸ் நிர்வாகத்திடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு பஸ் நிர்வாகத்தினர் பணம் தருவதாக அலைக் கழித்துள்ளனர். ஆனால் பணம் தரவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ் வெள்ளகோவில் செல்வதற்காக கிளம்பியது.
அப்போது மனோகரனும் அவரது மகன் திவாகரனும் திடீரென அந்த பஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் 2 பேரையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அம்மாபேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அந்த குடிநீர் போதுமானதாக இல்லை என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குட்டை மேடு பகுதிக்கு ஆற்று குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8 மணி அளவில் பவானி& வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30&க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.-
இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூரம்பட்டியில் வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சூரம்பட்டியில் வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சென்னிமலை ரோடு, மணல்மேடு முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்தவர் முத்தாயம்மாள் (வயது 80). இவர் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது உறவினர் மூதாட்டி முத்தாயம்மாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு கட்டிலில் மூதாட்டி முத்தாயம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் சூரம்பட்டி போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர்.
மூதாட்டி உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த அறிகுறி காணப்பட்டது.
போலீசார் விசாரணையில் மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப் பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை.
இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும், 37 பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. 44 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க. 6 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதிக்குள் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய இந்த 2 தொகுதியிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
இதையடுத்து தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளனர். ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. 2&வது முறையாக கைப்பற்றி உள்ளது.
குறிப்பாக கோபிசெட்டி பாளையம் நகராட்சி, பவானி நகராட்சிகள் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது.
கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதி ஆகும்.
இதேபோல் பவானி நகராட்சி முன்னாள் அமைச்சர் கருப்பணின் சொந்த தொகுதி ஆகும். இதனால் இந்த 2 இடங்களும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது.
தொடர்ச்சியாக இந்த 2 நகராட்சிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது.
ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த 2 இடங்களிலும் தி.மு.க. தனது முத்திரையை பதித்துள்ளது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன.
இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதேபோல் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.
இதில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
இதேபோல் கடந்த 1958&ம் ஆண்டு முதல் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வருகிறது.
தற்போது நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி உள்ளது.
இந்த நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.
இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், சுயேச் சைகள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இதேபோல் சத்திய மங்கலம் நகராட்சியும் அ.தி.மு-.க. வின் கோட் டையாக விளங்கி வந்தது. இந்த நகராட்சியிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.
இங்கு உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், பா.ஜனதா 2 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 42 பேரூராட்சிகள் உள்ளது.
இதில் 37 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் லக்கம்பட்டி பேரூராட்சியில் மட்டும் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
மேலும் நல்லாம்பட்டி, நெரிஞ்சிப் பேட்டை, பெத்தாம் பாளையம், வெங்கம்பூர் ஆகிய பேரூராட்சிகளில் தி.மு.க&அ.தி.மு.க. சம பலத்தில் உள்ளன.
இதில் சுயேச்சைகள் ஆதரவை பெறுவோர் பேரூராட்சியை கைப்பற்றுவார்கள்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஏற்கனவே 51--வது வார்டு தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதையடுத்து 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. 44 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், ம.தி.மு.க. 1 வார்டு என 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது.
மாநகர செயலாளர் சுப்ரமணியத்தின் மனைவி நாகரத்தினம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பெயர் மேயர் பதவிக்கு அடிபடுகிறது.
இதேப்போல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் செல்லபொண்ணு வெற்றி பெற்றுள்ளார்.
இவரது பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை அரங்கராசன் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர்.
அடுத்து கோகிலாவாணி மணிராஜ் பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. இவர் ஏற்கனவே ஈரோடு யூனியன் தலைவராக இருந்தவர்.
மல்லிகா நடராஜன் பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது.
இவர் ஏற்கனவே 2 முறை கவுன்சிலராக இருந்து உள்ளார். இவரது கணவர் வி.சி.நடராஜன் பகுதி செயலாளராக இருந்து வருகிறார்.
இதேபோல் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கீதாஞ்சலி செந்தில்குமார் மாநகராட்சி வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனை வருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதனால் மேயர் பதவிக்கு இவரது பெயரும் அடிபடுகிறது.