என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மாநகராட்சி, 4 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த தி.மு.க.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும், 37 பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும், 37 பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. 44 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க. 6 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஈரோடு மாநகராட்சி பகுதிக்குள் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய இந்த 2 தொகுதியிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. 

    இதையடுத்து தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளனர். ஈரோடு மாநகராட்சியை தி.மு.க. 2&வது முறையாக கைப்பற்றி உள்ளது.

    குறிப்பாக கோபிசெட்டி பாளையம் நகராட்சி, பவானி நகராட்சிகள் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது.

    கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதி ஆகும். 

    இதேபோல் பவானி நகராட்சி முன்னாள் அமைச்சர் கருப்பணின் சொந்த தொகுதி ஆகும். இதனால் இந்த 2 இடங்களும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது.

    தொடர்ச்சியாக இந்த 2 நகராட்சிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 

    ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த 2 இடங்களிலும் தி.மு.க. தனது முத்திரையை  பதித்துள்ளது. 

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. 

    இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 

    இதில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் கடந்த 1958&ம் ஆண்டு முதல் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வருகிறது. 

    தற்போது நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி உள்ளது. 

    இந்த நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 

    இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், சுயேச் சைகள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.

    இதேபோல் சத்திய மங்கலம் நகராட்சியும் அ.தி.மு-.க. வின் கோட் டையாக விளங்கி வந்தது. இந்த நகராட்சியிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 

    இங்கு உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், பா.ஜனதா 2 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 42 பேரூராட்சிகள் உள்ளது. 

    இதில் 37 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் லக்கம்பட்டி பேரூராட்சியில் மட்டும் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. 

    மேலும் நல்லாம்பட்டி, நெரிஞ்சிப் பேட்டை, பெத்தாம் பாளையம், வெங்கம்பூர் ஆகிய பேரூராட்சிகளில் தி.மு.க&அ.தி.மு.க. சம பலத்தில் உள்ளன. 

    இதில் சுயேச்சைகள் ஆதரவை பெறுவோர் பேரூராட்சியை கைப்பற்றுவார்கள்.
    Next Story
    ×