என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 771 ஆக குறைந்தது

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.  

    நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 892 பேருக்கு பரிசோதனை செய்ததில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்ட பட்டியலின் படி புதிதாக மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது.

    மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து  வீடு திரும்பினர். 

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 982 பேர் தொற்றினால் இருந்து மீண்டு உள்ளனர். 

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 771 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×