என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
தனியார் பஸ் முன்பு தந்தை-மகன் தர்ணா
ஈரோடு பஸ் நிலையத்தில் விபத்தில் இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் முன்பு தந்தை-மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் விபத்தில் இழப்பீடு வழங்காததால் தனியார் பஸ் முன்பு தந்தை-மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் திவாகரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மனோகரனும், திவாகரனும் தங்களது காரில் கொல்லம் பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக திவாகரன் கார் மீது லேசாக உரசியது. இதில் கார் சேதமடைந்தது.
இதையடுத்து சேத மடைந்த காருக்கு தேவையான பணத்தை தருவதாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தெரிவித்தனர்.
இதனையடுத்து திவாகரன் சேதமடைந்த காரை தனது சொந்த பணத்தில் செலவழித்து சரி செய்தார்.
திவாகரன் சம்பந்தப்பட்ட பஸ் நிர்வாகத்திடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு பஸ் நிர்வாகத்தினர் பணம் தருவதாக அலைக் கழித்துள்ளனர். ஆனால் பணம் தரவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ் வெள்ளகோவில் செல்வதற்காக கிளம்பியது.
அப்போது மனோகரனும் அவரது மகன் திவாகரனும் திடீரென அந்த பஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் 2 பேரையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story






