என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் 2 தியேட்டர்களில் வலிமை படம் வெளியானது.
    X
    சத்தியமங்கலத்தில் 2 தியேட்டர்களில் வலிமை படம் வெளியானது.

    ஈரோடு மாவட்டத்தில் 28 தியேட்டர்களில் அஜித் நடித்த வலிமை படம் வெளியானது

    ஈரோடு மேட்டூர் ரோடு முன்பு உள்ள ஒரு தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    ஈரோடு:

    நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வெளியாகி உள்ளதால் வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் குவிந்தனர்.

    ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் அதிகாலை போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 தியேட்டர்கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் 11 தியேட்டர்கள் உள்ளன. இதில் வலிமை படம் 28 தியேட்டர்களில் இன்று வெளியானது. மாநகர் பகுதியில் உள்ள 11 தியேட்டர்களிலும் வலிமை படம் வெளியானது.

    அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். தியேட்டர் முன்பு பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். சில ரசிகர்கள் அஜித் கெட்டப்பில் வந்திருந்தனர். இன்னும் சில தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்க வலிமை படத்தை வரவேற்றனர். சத்தியமங்கலம் பகுதியில் 2 தியேட்டர்களில் இன்று வலிமை படம் வெளியானது. இதையடுத்து தியேட்டர் முன்பு வாழை தோரணம் கட்டியிருந்தனர். மேலும் மின்விளக்குகளால் தியேட்டர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் அஜித் பேனர் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தியேட்டருக்குள் படம் வெளியானதும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்தபடி நடனம் ஆடினர். படம் வெளியான அனைத்து தியேட்டர்கள் முன்பும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு மேட்டூர் ரோடு முன்பு உள்ள ஒரு தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
    Next Story
    ×