என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெஜிலிபாளையம்-திக்கையூர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி.
    X
    பெஜிலிபாளையம்-திக்கையூர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி.

    பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் சாலை பணிகள் அமைக்கும் பணி தொடங்கியது

    பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் 12.490 கி.மீ. நீளத்துக்கு 8 சாலை பணிகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் 12.490 கி.மீ. நீளத்துக்கு 8 சாலை பணிகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திற்கு ட்பட்ட மாநகராட்சி, நகரா ட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சியில் சாலை வசதிகள் இல்லாத மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்¬யினை நிறைவேற்றிடும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்காக 8 சாலைப்பணிகள் 12.490 கி.மீ. நீளத்தில் ரூ.288.010 லட்சம் மதிப்பீட்டிலும்,

    2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68.41 லட்சம் மதிப்பீட்டிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியினை மேற்கொள்வதால் சுமார் 17,529 மக்கள் பயன் பெறுவார்கள்.

    இதில் பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49.390 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை  அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வனஎல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49.760  லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை  அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.48.140 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை  அமைத்தல், பர்கூர் ஊராட்சி பாலபந்தனூர் சாலை முதல் பெஜலட்டி வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.25.530 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், பர்கூர் ஊராட்சி கெப்பக்காடு சாலை முதல் பெஜலட்டி வரை ஓரடுக்கு கப்பிச் சாலை ரூ.36.650 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்,பர்கூர் ஊராட்சி கோவில்நத்தம் மின்கம்பம் முதல் அக்னிபாவி கொங்காடை வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.32.850 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், பர்கூர் ஊராட்சி பெஜிலி பாளையம் திக்கையூர் சாலை வரை ஓரடுக்கு கப்பிச்சாலை ரூ.4.380 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்,பர்கூர் ஊராட்சியில் தேவர்மலை வழியாக தாமரைக்கரை முதல் மடம்  வரை ரூ.34.110 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம்  அமைத்தல், பர்கூர் ஊராட்சியில் ஈரட்டி வழியாக தாம ரைக்கரை முதல் மடம் வரைரூ.34.300 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித் திருப்பூர் ஊராட்சியில் 3.500 கி.மீ. நீளத்தில் ரூ.66.470 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை பணிகள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    இப்பணியினைமேற்கொள்வதால்  சுமார் 1,200 மக்கள் பயன்பெறுவர்.

    இதில்  வெள்ளித்திருப்பூர் ஊராட்சி குரும்பானூர் சாலை முதல் வன எல்லை வரை ரூ.35.620 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை  அமைத்தல், வெள்ளித்திருப்பூர் ஊராட்சி குரும்பானூர் சாலை முதல் வன எல்லை வரை ரூ.30.850 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
     
    ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சைபாலத் தொழுவு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1.240 கி.மீ நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச்சாலை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியினால் சுமார் 72 குடும்பங்களை சார்ந்த 186 மக்கள் பயனடைவார்கள். 

    இதில் புஞ்சைபாலத் தொழுவு ஊராட்சி சென்னி மலை&ஊத்துக்குளி சாலை முதல் வசந்தம் நகர் சாலை வரை ஓரடுக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கப்பிசாலை அமைத்தல் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் 0.900 கி.மீ நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியானது ரூ.49.81 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட உள்ளது.

    இப்பணியினை மேற்கொள்வதால் சுமார் 296 மக்கள் பயன்பெறுவார்கள். இதில் மைலம்படி ஊராட்சி வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டு வலசு சாலை வரை ரூ.49.810 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
     
    மேலும் அந்தியூர் வட்டா ரத்தில் பர்கூர் ஊராட்சி ஒன்னக்கரை முதல் முத்தூர் வனச்சாலை வரை ரூ.41.310 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அந்தியூர் (பர்கூர்)அம்மாபேட்டை, சென்னி மலை மற்றும் பவானி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரூ.4.94 கோடி மதிப்பீட்டில் 14 பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×