என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றி சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றி சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 769 கவுன்சிலர் பதவிக்கு 2,722 பேர் போட்டியிட்டு 769 பேர் கடந்த 22-ந் தேதி தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் பெற்று சென்றனர்.

    இவர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த உள்ளாட்சி அமைப்பில் வரும் மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 9:30 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். 

    ஈரோடு மாநகராட்சியில் மட்டும் மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். 

    வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கியபோதே வரும், 2-ந் தேதி பதவியேற்பில் பங்கேற்பதற்கான அழைப்பாணையும் வழங்கப்பட்டுவிட்டது.

    இதற்கிடையில் வரும் 4-ந் தேதி ஈரோடு மாநகராட்சிக்கு ஒரு மேயர், ஒரு துணை மேயர், 4 நகராட்சியில் தலா ஒரு தலைவர், ஒரு துணை தலைவர், 42 பேரூரா ட்சிகளில் தலா 42 தலைவர், 42 துணை தலைவர் என 94 பதவிக்கானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

    மேயர் மற்றும் தலைவர் தேர்வு காலை 9.30 மணிக்கும், துணை மேயர் மற்றும் துணை தலைவர் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் நடக்க உள்ளது.

    தற்போது தேர்வு செய்யப் பட்ட கவுன்சிலர்களில் உள்ள நபர்களே இப்பதவிக்கு தேர்வு செய்யப் படுகின்றனர். 

    இதனால், 2-ந் தேதி பதவியேற்று கொண்டவர்கள் மட்டுமே, அத்தேர்வில் பங்கேற்கலாம். ஒரு வேளை அன்றைய தேதியில் கொரோனா உள்ளிட்ட காரணத்தால் பதவியேற்க தவறி இருந்தால் 4-ந் தேதி காலை தலைவர், துணை தலைவர் தேர்வு முன் பதவியேற்று, பங்கேற்கலாம்.

    மேயர், துணை மேயர் மற்றும் தலைவர், துணை தலைவர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தால் அவரே தேர்வு செய்யப்படுவர். 

    கூடுதலான நபர்கள் மனுத்தாக்கல் செய்தால், தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு, அன்றே பதவியேற்பார்கள். 

    இதற்கும் அந்தந்த பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று முதல் அழைப்பாணை வழங்கி வருகிறார். 

    இம்மறைமுக தேர்தலுக்கு தேர்தல் கட்டணம் ஏதுமில்லை. மாநகராட்சியில் மட்டும் கூடுதலாக, மண்டல தலை வர்கள் நியமிக்கப்படுவர்.

    எனவே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் வெற்றி சான்றிதழுடன் பதவி ஏற்க வர கேட்டுக் கொண்டு உள்ளனர்.
    கவுந்தப்பாடி அருகே நகை பட்டறை உரிமையாளரிடம் போலீஸ் போல் நடித்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் கானாஜி. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நகை உருக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று கானாஜி மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கவுந்தப்பாடி, சித்தோடு, காஞ்சிக்கோவில் எல்லையோரம் அமைந்து உள்ள எல்லிஸ் பேட்டை என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. பின்னர் அவரை வழிமறித்து நிறுத்தினர். காரில் இருந்து போலீஸ் சீருடையில் இறங்கியவர்கள் நாங்கள் போலீஸ்காரர்கள் உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

    தொடர்ந்து காரில் வந்தவர்கள் நகை பட்டறை உரிமையாளர் கானாஜியிடம் இருந்த பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அதை எடுத்துக் கொண்ட அவர்கள் மேலும் பையில் இருந்த 2 கிலோ தங்கத்தை எடுக்க முயன்றனர். அந்த நேரத்தில் பயிற்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினியின் வாகனம் சைரன் ஒலித்தபடி வந்தது.

    இந்த சத்தத்தைக் கேட்டு சுதாரித்துக்கொண்ட கும்பல் வேகமாக தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து காரில் வந்தவர்கள் போலீஸ் போல் நடித்து தன்னிடம் பணம், செல்போன் பறித்து சென்றது கானாஜிக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    டி.எஸ்.பி.யின் வாகனம் சரியான நேரத்தில் வந்ததால் 2 கிலோ நகை தப்பியது குறிப்பிடத்தக்கது.
    சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரை புதர் மறைவில் மறைந்திருந்த யானை திடீரென துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி சாலையோரம் நடமாடுவதும் குட்டிகளுடன் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

    இந்நிலையில் திம்பம் வனச்சோதனைச் சாவடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள நெய்தாலபுரம் என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றது.

    அதை அவ்வழியாக வாகனம் ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென ஆக்ரோ‌ஷத்துடன் வாகனத்தை துரத்தி உள்ளது.

    இதை கண்ட அந்த வாலிபர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி உயிர் தப்பினார்.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள வனசாலை என்பதால் யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும். எனவே இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூடாது. என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரை புதர் மறைவில் மறைந்திருந்த யானை திடீரென துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி சாலையோரம் நடமாடுவதும் குட்டிகளுடன் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

    இந்நிலையில் திம்பம் வனச்சோதனைச் சாவடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள நெய்தாலபுரம் என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றது.

    அதை அவ்வழியாக வாகனம் ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென ஆக்ரோ‌ஷத்துடன் வாகனத்தை துரத்தி உள்ளது.

    இதை கண்ட அந்த வாலிபர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி உயிர் தப்பினார்.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள வன சாலை என்பதால் யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும். எனவே இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். 

    இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    கடந்த 3 வாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் வியாபாரம் மந்தமாகவே இருந்து வந்தது.

    தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் கட்டுப்பாடுகள் நீங்கி உள்ளது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்தனர். 

    இன்று 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை அதிகளவில் வாங்கி சென்றனர். 

    இன்று 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசு மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம்  முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மன்றகூடம் தூய்மை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மன்றகூடம் தூய்மை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில்  நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 14 இடங்களிலும்,அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சையாக போட்டியிட்ட ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதையடுத்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய  கோபிசெட்டிபாளையம் நகராட்சியை தற்போது தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதையடுத்து  புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 2&ந் தேதி நடக்கிறது.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் மேல்தளத்தில் உள்ள கூட்ட அறையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் விழா நடக்கிறது. 

    இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.பணியாளர்கள் மன்ற கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார்கள். 

    பின்னர்   மன்ற உறுப்பினர்கள்  மற்றும் அதிகாரிகளுக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை  அமைக்கப்படும். 

    பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதால் கோபி செட்டி பாளையம் நகராட்சி அலுவலகம் புதுப்பொலிவை பெற்றுள்ளது.
    புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந் தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதனால் மாநகராட்சியில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
     ஈரோடு:

    புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந்  தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதனால் மாநகராட்சியில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 வார்டுகளில்  தி.மு.க. 43 வார்டுகளையும்,  காங்கிரஸ் 3 வார்டுகளையும், கொ.ம.தே.க, ம.தி.மு.க. தலா ஒரு வார்டுகளையும் என மொத்தம் 48 வார்டுகளை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை  கைப்பற்றியுள்ளது.

    ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந்  தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அன்றைய தினம் முதல் கூட்டம் நடைபெறுகிறது. 

    அதைத்தொடர்ந்து 4-ந் தேதி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் கவுன்சிலர்கள் மேயரையும், துணை மேயரையும்  தேர்ந்தெடுப்பார்கள்.  மாநகராட்சியில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மாநகராட்சியில் கூட்ட அரங்கில் தேர்தலின் போது சேர்கள் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.  

    தற்போதும் மீண்டும் அதே இடத்தில் சேர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டரங்கு வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெறுகின்றன. 

    மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் மேயர் அறையும், 2-ம் தளத்தில் துணை மேயர் அறையும் உள்ளது. நீண்ட வருடமாக அறைகள் பூட்டப்பட்டு இருந்தது. 

    தற்போது இந்த அறைகள் திறக்கப்பட்டு அங்கு தூய்மை பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன.
    அரச்சலூர் அருகே வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அரச்சலூர் அருகே வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்து இருந்த  1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 

    இங்கு அதிக அளவில் வடமாநி லத்தவர்கள் தங்கி உள்ளதால் அவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

    இதனை தடுக் கும் பொருட்டு ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
     
    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வாளத்தோட்டம் வலசு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வத் திற்கு தகவல் வந்தது.

    அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் வாள தோட்டம்வலசு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்  சோதனை செய்தனர். 

    அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர் அதில் திருப் பூர் மாவட்டம் வெள்ளக் கோவில், தண்ணீர் பந்தல் பாளை யம் பகுதியை சேர்ந்த உதய குமார் (வயது 32) என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தி ருந்தது தெரிய வந்தது.

    இவர் அந்த பகுதியில் வசிக்கும் வடமாநிலத் தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 

    போலீஸ் வருவதை தெரிந்து கொண்ட உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

    இதனையடுத்து 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    மேலும் தப்பி ஓடிய உதயகுமாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கீழ்பவானிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கீழ்பவானிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பவானி சாகர் அணையின் முலம் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.  

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. 

    ஆனாலும் தொடர்ந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனம், குடிநீர் தேவை  கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

    நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் பவானி சாகர்அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

    இன்று காலை 8 மணிநிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 812 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

    அணையில்இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100  கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியை திருடிய வடமாநில வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில்  பயணியிடம் மடிக்கணினியை திருடிய வடமாநில வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்

    கரூர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினி, ரூ.600 பணம் மற்றும் மருந்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டு சென்றுவிட்டார். 

    இது குறித்து அந்த பயணி கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் கரூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் நிலையத்தில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

    அப்போது வாலிபர் ஒருவர் மடிக்கணினி உடன் மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேகமாக ஏறியது பதிவாகியிருந்தது. அந்த ரெயில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை சப்&இன்ஸ்பெக்டர் நிஷாந்த் தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. 

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். 

    அப்போது டி-2 பெட்டியல் சோதனை செய்தபோது ஒரு வாலிபரிடம் இருந்து மடிக்கணினி, ரூ.600, சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். 

    அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மென்தி ராஜ்குமார் அக்ரஹரி (36) என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கரூருக்கு அழைத்துச் சென்று ரெயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சமையல் செய்த வட மாநில இளம்பெண்ணின் சேலையில் தீ பிடித்து கருகி பலியான சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    சமையல் செய்த வட மாநில இளம்பெண்ணின் சேலையில் தீ பிடித்து கருகி பலியான சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தை சார்ந்தவர் மொய்துல்காஜி. இவரது மனைவி பாத்திமாசனா (வயது 22). 

    இவர்கள் தற்பொழுது பெருந் துறையை அடுத்துள்ள பணிக்கும் பாளையம் பகுதியில் குடியிருந்து அங்குள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 13&ந் தேதி பார்த்திமாசனா சமையல் செய்து கொண்டு இருந்தார். 

    அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது. உடனடியாக அவரை மொய்துல்காஜி காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் பாத்திமாசனா உடல் முழுவதும் தீ பரவியது.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

     லேசான தீக்காயத்துடன் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிக தீக்காயம் ஏற்பட்ட பாத்திமா சனா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    வயிற்று வலி தாங்காமல் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    வயிற்று வலி தாங்காமல் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மனைவி லட்சுமி (54). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

    இதில் மகள் நந்தினியை (32) கொங்கர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நந்தினிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் நந்தினி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்து ள்ளதாக கூறப்படுகிறது.

     சம்பவத்தன்று அதிகாலை கார்த்திக்ராஜா வீட்டில் இருந்து வெளியே கடைக்கு சென்றிருந்தார். 

    அப்போது நந்தினிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல்  நந்தினி வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.

    தகவலறிந்து வந்த கார்த்திக்ராஜா அருகில் இருந்தவர் களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக நந்தினியை சேர்த்தார்.

    அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×