என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர்.
    X
    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர்.

    வெளிமாநில வியாபாரிகள் வருகையால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

    ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். 

    இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    கடந்த 3 வாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் வியாபாரம் மந்தமாகவே இருந்து வந்தது.

    தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் கட்டுப்பாடுகள் நீங்கி உள்ளது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்தனர். 

    இன்று 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை அதிகளவில் வாங்கி சென்றனர். 

    இன்று 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசு மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம்  முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
    Next Story
    ×