என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலையில் தீ பிடித்து வட மாநில இளம்பெண் கருகி பலி

    சமையல் செய்த வட மாநில இளம்பெண்ணின் சேலையில் தீ பிடித்து கருகி பலியான சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    சமையல் செய்த வட மாநில இளம்பெண்ணின் சேலையில் தீ பிடித்து கருகி பலியான சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தை சார்ந்தவர் மொய்துல்காஜி. இவரது மனைவி பாத்திமாசனா (வயது 22). 

    இவர்கள் தற்பொழுது பெருந் துறையை அடுத்துள்ள பணிக்கும் பாளையம் பகுதியில் குடியிருந்து அங்குள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 13&ந் தேதி பார்த்திமாசனா சமையல் செய்து கொண்டு இருந்தார். 

    அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது. உடனடியாக அவரை மொய்துல்காஜி காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் பாத்திமாசனா உடல் முழுவதும் தீ பரவியது.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

     லேசான தீக்காயத்துடன் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிக தீக்காயம் ஏற்பட்ட பாத்திமா சனா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×