என் மலர்tooltip icon

    ஈரோடு

    வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அண்ணாநகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மதன்குமார் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு தனது மாடுகளை விட்டு இருந்தார். பின்னர் மீண்டும் மாலை மாடுகள் வீடு திரும்பியது.

    அப்போது ஒரு பசு மாட்டின் வாய் சிதைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருப்பதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வனப்பகுதியையொட்டிய இடங்களில் வைக்கப்பட்ட நாட்டுவெடியை மாடு கடித்ததில் வாய் சிதைந்து ரத்த காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வாய் சிதைந்த பசு மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் காட்டு பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    வனப்பகுதியில் தூக்கி வீசப்படும் நாட்டு வெடிகுண்டுகளை அவ்வப்போது மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் கடித்து பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே இதுபோன்ற நாட்டு வெடிகுண்டுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து  தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழுவின் அவசரக் கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

    கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா (பொது), வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய குழுத்தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தீர்மானங்கள் மன்ற அங்கீகாரம் பெறுவதற்காக படிக்கப்பட்டன. 

    யூனியன் செலவினங்கள் குறித்து படிக்கப்பட்ட போது அதற்கான ஆவணங்களை மன்றத்தில் காட்டச் சொல்லி 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி ஒன்றிய குழுத்தலைவர் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவிடம் (பொது) கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் கையொப்பம் இல்லாத ஜெராக்ஸ் பேப்பர் கொடுக்கப்பட்டது. 

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கையொப்பம் உள்ளதை காட்டுங்கள் என்ற கோரிக்கையை உறுப்பினர்கள் வைத்தனர்.  

    அதற்கு அவர் எனது மேலதிகாரிளுக்கு மட்டுமே எனது கையொப்பம் உள்ள ஆவணங்களை கொடு ப்பேன் என்று கூறினார்.

    உடனே 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி, 2-வது வார்டு கவுன்சிலர் எம்.ஏ.பழனிசாமி, 4-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், 5-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் லட்சுமி ராஜேந்திரன் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் ப்ரீத்தி செந்தில் மட்டும் கூட்ட அரங்கின் உள்ளே இருந்தார். இதனால் சிறிது நேரம் கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.
    மொடக்குறிச்சி ஒன்றிய த்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றிய த்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். 

    இதில் இல்லம் தேடி கல்வி பயிற்சியின் மறுசீரமைப்பு, குழந்தை களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களின் கடமைகள், பொறுப்புகள், பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 16 பள்ளிகளை சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும்  50&க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மாணிக்கராஜ், சுமித்ராதேவி உள்பட பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். 

    இதேபோல் லக்காபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் நாளை 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நாளை 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. 
    .

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை 9 மணி முதல் மாலை 5  மணி வரை  அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 434 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. 

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2&ம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன் களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும்.

    இது தவிர 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் வகை தடுப்பூசி முதல் மற்றும் 2&ம் தவணை செலுத்தப்படும். 

    மொத்தம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, 66 வாகனங்கள் 1,736 பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத் திற்குட்பட்ட இருகாலூர் காலனி பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சங்க வளாகத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத் திற்குட்பட்ட இருகாலூர் காலனி பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சங்க வளாகத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடத்தப்பட்டது.

    இம்முகாமிற்கு துணைப் பதிவாளர் (பால்வளம்)ஈரோடு ஜெ.ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    இருகாலூர் காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு தற்போது 142 உறுப்பினர்களை கொண்டு இப்பகுதியில் வாழும் விவசாய பெருமக்களுக்கு சேவை செய்து வருகிறது. 

    இச்சங்கத்தின் மூலம் நாள் ஒன்று சராசரியாக 351 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. 

    கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டுறவு இயக்கம் தான் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. 

    இடைத்தரகர்களை அழித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பால் வழங்கும் இந்த நிலையில் அரசுனுடைய பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பெற்று பயனடைகிறார்கள். 
     
    பொதுவாக கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கம், உறுப்பினர்களின் பொருளாதார நலன்களை பேணுவதேயாகும். 

    எனவே, ஒரு கூட்டுறவு சங்கம் பல்வேறு நோக்கங் களையும், பொருளாதார முன்னேற்றத்தினையும் நிறைவேற்றிட முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிரிக்கெட் விளையாடிய போது கால் முறிவு ஏற்பட்ட பிளஸ்-1 மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி உதவி அளித்தனர்.
    அந்தியூர்:

    கிரிக்கெட் விளையாடிய போது கால் முறிவு ஏற்பட்ட  பிளஸ்-1 மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி உதவி அளித்தனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்கு மலை பகுதி தேவர்மலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் கோகுலகிரு ஷ்ணன் என்பவர் கிரிக்கெட் விளையாடிய போது கால்எலும்பு முறிவு ஏற்பட்டது. 

    இதையடுத்து மாணவர் கோகுலகிருஷ்ணனை அவரது பெற்றோர் அந்தியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியி ல் அனுமதித்தனர். 

    மாணவர் குடும்பத்தினர் வறுமையில் இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப்குமார், உதவி தலைமை ஆசிரியர்தேவி மற்றும்  ஆசிரியர் வீரபத்தின் மற்றும் பள்ளியின் மற்ற ஆசிரியர்கள், சக மாணவ,மாணவிகள் தாங்களால் முடிந்த உதவியை செய்தனர். 

    இதையடுத்து தலைமை ஆசிரியர் பிரதீப்குமார், மாணவர் கோகுலகிருஷ்ணனின் தந்தை கண்ணப்பனை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுத்த ரூ. 13 ஆயிரத்து 50ஐ வழங்கினார். 

    கால் எலும்பு முறிவு அடைந்த மாணவர் தற்போது டாக்டர்கள் ஆலோசனைபடி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    கணவர் படத்துக்கு தீபம் ஏற்றியபோது விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்
    சிவகிரி:

    கணவர் படத்துக்கு தீபம் ஏற்றியபோது விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்

    சிவகிரி அடுத்த கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி தனலட்சுமி (74). கதிர்வேல் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  

    இதையடுத்து கந்தசாமி பாளையம் பகுதியில் தனலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கணவர் படத்திற்கு தீபம் ஏற்றி விட்டு திரும்பியபோது எதிர்பாராத விதமாக காலில் விளக்கு தட்டிவிட்டு கவிழ்ந்து மூதாட்டி அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. 

    இதனால் வேதனை தாங்காமல் மூதாட்டி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
    ஈரோடு:

    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

    பின்னர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி விளக்கு பூஜையும் நடைபெற்றது. 

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகியவை இன்று காலை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். 

    அதன் பின்னர் பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றத. இன்று இரவு தெப்போற்சவம் நிகழ்ச்சியும், நாளை 13&ந் தேதி மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகின்றது. 
    சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வழி நெடுகிலும் மஞ்சள்நீர் ஊற்றி வரவேற்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள்  கலந்து கொண்டு வழி நெடுகிலும் மஞ்சள்நீர் ஊற்றி வரவேற்றனர். 

    சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார்.

    இதையொட்டி பண்ணாரி யம்மன் கோவி லில் இருந்து அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிக்கரசம் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சப்பரம் சென்றது. 

    நேற்று நெரிஞ்சிபேட்டை, கொத்தமங்கலம் சென்றது. இதையடுத்து தொட்டம்பாளையம் கொண்டு செல்லப்பட்டு இரவு அரங்கநாதர் கோவி லில் சிறப்பு பூஜைகள் செய் யப் பட்டு தங்க வைக்கப் பட்டது. 

    இதை தொடர்ந்து இன்று காலை (வெள்ளிக்கிழமை) தொட்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அம்மன் திருவீதி உலா நடந்தது. 

    இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வழி நெடு கிலும் மஞ்சள் நீர் ஊற்றி வர வேற்றனர். தொடர்ந்து பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    அங்கு இருந்து புறப்பட்டு வெள்ளியம்பாளையம் பகுதியில்  மதியம் 12 மணி வரை சப்பரம் ஊர் வலம் நடந்தது. 

    இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி பட்டனர்.

    இதையடுத்து இன்று மதியம் பெத்தாம்பாளையம் பகுதியில் சாமி ஊர்வலம் நடக்கிறது. 

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு பெத்தாம் பாளையம் பவானி ஆறு பகுதிக்கு அம்மன் அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசலில் அம்மன் சப்பரம் ஏற்றி ஆற்றை கடந்து பசுவம் பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு அம்மன் சப்பரம் ஊர்வலம் நடக் கிறது.
     
    இதையடுத்து இரவு இக்கரை தத்தப்பள்ளி மற்றும் அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் அம்மன் வீதி உலா நடக்கிறது. அங்கு தங்க வைக்கப்படுகிறது. 

    நாளை உத்தாண்டியூர் பகுதியில் சப்பரம் வீதிஉலா நடக்கிறது.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
     
    பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாச னத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி திருப்பூர், கரூர் மாவட்ட விவ சாயிகளும் பயன் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து அணை யின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 90.87 அடியாக இருந்தது. அணைக்கு 1333 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

    அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடியும், கீழ்பவானி வாய்க் காலில் 2300 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணைக்கு வரத்தை விட அதிக அளவு தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு சூரம்பட்டியில் காதல் விவகாரத்தில் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து 3 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சீனிவாசன் (20).

    சலூன் கடை அருகே சிவா என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஈரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த அன்பரசு (18) என்ற பிளஸ்-2 மாணவர் மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பிறகு மருந்து கடையை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் மருந்து கடைகாரர் சிவாவுக்கும், சவுந்தருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. சிவாவுக்கு ஆதரவாக மாணவர் அன்பரசு இருந்து வந்தார். இதனால் சவுந்தர் கோபம் அன்பரசு மீது திரும்பியது. மேலும் சவுந்தர் சூரம்பட்டியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவி வீட்டுக்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதை தொடர்ந்து மாணவி குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதற்கு அன்பரசு தான் காரணம் என சவுந்தர் நினைத்து தனது அண்ணன் சீனிவாசனிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து நேற்று மாலை சீனிவாசன், சவுந்தர், அவர்களது தாய் லதா மற்றும் சவுந்தரின் நண்பர் ராம் ஆகியோர் அன்பரசுவிடம் இது குறித்து கேட்டனர். அப்போது சீனிவாசன் மாணவர் அன்பரசு முதுகில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அன்பரசு மயங்கி கீழே விழுந்தார்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த மாணவர் அன்பரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லதாவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது மகன்கள் சவுந்தர், சீனிவாசன் மற்றும் வாலிபர் ராம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    ஈரோடு:
    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 21,22-ந் தேதி நடக்கிறது. 

    23-ந் தேதி புஷ்பரதம் நிகழ்ச்சியும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
     
    அதைத்தொடர்ந்து 28-ந்  தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. குண்டம் விழா அன்று லட்சக்கணக்கான மக்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். 

    குண்டம் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தடுக்க வும், வனத்தையொட்டிய இடத்தில் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குண்டம் விழாவையொட்டி தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:&

    பண்ணாரி அம்மன் குண்டம் கோவில் திருவிழாவையொட்டி ஈரோடு தலைமை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனம், ஒரு பம்ப் வாகனமும் வரும் 19-ந் தேதி முதல் பண்ணாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    குண்டம் விழா அன்று கூடுதலாக 10 பேர் என மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குண்டம் இறங்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ×