என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கல்வித்திட்ட முகாம் நடந்தது.
    X
    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கல்வித்திட்ட முகாம் நடந்தது.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கல்வித்திட்ட முகாம்

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத் திற்குட்பட்ட இருகாலூர் காலனி பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சங்க வளாகத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    இம்முகாமிற்கு துணைப் பதிவாளர் (பால்வளம்)ஈரோடு ஜெ.ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    இருகாலூர் காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு தற்போது 142 உறுப்பினர்களை கொண்டு இப்பகுதியில் வாழும் விவசாய பெருமக்களுக்கு சேவை செய்து வருகிறது. 

    இச்சங்கத்தின் மூலம் நாள் ஒன்று சராசரியாக 351 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. 

    கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டுறவு இயக்கம் தான் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. 

    இடைத்தரகர்களை அழித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பால் வழங்கும் இந்த நிலையில் அரசுனுடைய பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பெற்று பயனடைகிறார்கள். 
     
    பொதுவாக கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கம், உறுப்பினர்களின் பொருளாதார நலன்களை பேணுவதேயாகும். 

    எனவே, ஒரு கூட்டுறவு சங்கம் பல்வேறு நோக்கங் களையும், பொருளாதார முன்னேற்றத்தினையும் நிறைவேற்றிட முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×