என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவரின் தந்தையிடம் நிதி உதவி வழங்கிய ஆசிரியர்கள்.
பிளஸ்-1 மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி உதவி
கிரிக்கெட் விளையாடிய போது கால் முறிவு ஏற்பட்ட பிளஸ்-1 மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி உதவி அளித்தனர்.
அந்தியூர்:
கிரிக்கெட் விளையாடிய போது கால் முறிவு ஏற்பட்ட பிளஸ்-1 மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி உதவி அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்கு மலை பகுதி தேவர்மலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் கோகுலகிரு ஷ்ணன் என்பவர் கிரிக்கெட் விளையாடிய போது கால்எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர் கோகுலகிருஷ்ணனை அவரது பெற்றோர் அந்தியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியி ல் அனுமதித்தனர்.
மாணவர் குடும்பத்தினர் வறுமையில் இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப்குமார், உதவி தலைமை ஆசிரியர்தேவி மற்றும் ஆசிரியர் வீரபத்தின் மற்றும் பள்ளியின் மற்ற ஆசிரியர்கள், சக மாணவ,மாணவிகள் தாங்களால் முடிந்த உதவியை செய்தனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் பிரதீப்குமார், மாணவர் கோகுலகிருஷ்ணனின் தந்தை கண்ணப்பனை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுத்த ரூ. 13 ஆயிரத்து 50ஐ வழங்கினார்.
கால் எலும்பு முறிவு அடைந்த மாணவர் தற்போது டாக்டர்கள் ஆலோசனைபடி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
Next Story






