என் மலர்tooltip icon

    ஈரோடு

    கியாஸ், பெட்ரோல், டீசல், சுங்க கட்டணம் விலை உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    கியாஸ், பெட்ரோல், டீசல், சுங்க கட்டணம் விலை உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு சூளை பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கட்டுப்படுத்து. கட்டுப்படுத்து.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம். ரத்து செய். ரத்து செய்.. சுங்க கட்டண உயர்வை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    நகரச் செயலாளர் சுந்தரராஜ், சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்டேட் காலனி, சூரம்பட்டி நால்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
    தாளவாடி தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தார்.
    தாளவாடி:

    தாளவாடி தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தார்.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு தாளவாடி அடுத்த தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் திருவிழா நடை பெற்றது.

    விழா இரவு புலி ஆட்டத்துடன் தொடங்கி யது.  கோவிலில் உள்ள மண்டேசாமி, பீரேஸ்வர சாமி, லட்சுமி தேவி, மாரியம்மன், சௌடேஸ் வரி, மசனம்மாள், ராக் காயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.

    தொடர்ந்து மேள தாளங்களுடன் சுவாமிகள் வீதி உலா வந்தது.பின்னர் ஆற்றாங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு மேள தாளம் முழங்க தொட்டகாஜணூர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளில் சாமி திருவீதி  உலா சென்றது. 
    அப்போது  பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணி வித்து  தேங்காய், பழம் பூஜை செய்து வழிட்டனர். ஆர்.சி வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதத்தில் சுவாமிகளை அழைத்து சென்றனர். காலை  சுவாமி கோவிலை வந்தடைந்தது. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி உள்ள குண்டத்தில்   7 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அதே போல தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா வில்வர்ச் சனையுடன் விழா  வுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு மல்லி கார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய் யபட்டு மலர்களால் அலங் காரிக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் சாமி  உற்சவர் சிலை மேள தாளங்களுடன் ஆற்றாங்கறைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளில் வீதி உலாவாக ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்தி« ராடு வழியாக எடுத்து செல்லப் பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.

    விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர்  சிக்கொலா, அட்டு குளிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில்  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் முனிராஜ் (21). லாரி டிரைவர்.

    இவர் புதுக்கரை புதூர் பகுதியில் நடந்து வரும் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் சாணார் பாளையத்தில் உள்ள வீட்டுக்கு செல்வதற் காக வந்து கொண்டு இருந்தார்.

    முனிராஜ் குட்டைய காட்டூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்த போது சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த கிருபா கரன் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

    அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் கள் எதிர்பாரத விதமாக மோதி கொண்டது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே முனிராஜ் இறந் தார். கிருபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (28). இவர் களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர்.

    செல்வத்துக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண் டித்தார். ஆனால் அவர் குடி பழக்கத்தை விடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லதா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது லதா வீட்டில் பேனில் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லதா இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் 85 அடியாக குறைந்துள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் 85 அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 282கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங் கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி  பாசனத்திற்கு 2,380 கனஅடி என மொத்தம் 3,080 கனஅடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.
    வரத்து குறைவு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    வரத்து குறைவு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு பெரிய காய்கறி மார்க்கெட் வ.உ.சி.பூங்கா பகுதியில் இயங்கி வருகிறது. தாளவாடி, அந்தியூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    இதேபோல் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவில் வரும். ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தக்காளிகள் வரத்தாகி வருகிறது.

    கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ. 15 வரை விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தினமும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்தானது. தற்போது வெறும் 350 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.16 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு வருமாறு:
    பீன்ஸ்-60  முதல் 70, பீட்ரூட்-40 முதல் 50, கேரட்-60 முதல் 80, கத்திரிக்கா-20, வெண்டைக்காய்-40, பீர்க் கங்காய்-35, பாவைக்காய்-25, முள்ளங்கி-25, முருங்கைக்காய்-40 முதல் 50, அவரைக்காய் - 60, மிளகாய், இஞ்சி-50, முட்டைக் கோஸ்-20, காலிங்ப்ளவர்-10, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-20.
    ஈரோடு மாவட்டத்தில் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளதால், இதனால் டீ விலை 12 ரூபாய், காபி 15 ரூபாய் ஆக உயர்ந்ததுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளதால், இதனால்  டீ விலை 12 ரூபாய், காபி 15 ரூபாய் ஆக உயர்ந்ததுள்ளது.


    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதன் எதிரொ லியாக  அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர தொடங்கியுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
    இந்நிலையில் வணிக பயன்பாடு உள்ள கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.26 அதிகரித்துள்ளது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.
    கியாஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    டீ, காபி விலை உயர்வு
    இதன் காரணமாக சிறிய ஓட்டல் முதல் பெரிய ஓட்டல்  வரை அனைத்து உணவுப் பண்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோட்டில் டீ, காபி விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
    பால், கியாஸ் விலை உயர்வு காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ விலை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.15 -ல் இருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைகள் உள்ளன. இதில் பாதிக்கு பாதி டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து கடைகளிலும் டீ, காபி விலை உயர்ந்து விடும்.
    அறிவிப்பு நோட்டீஸ்
    இதேப்போல் பாஸ்ட்புட் கடைகளிலும் சில உணவு வகைகள் உயர்ந்துள்ளன. இது தொடர்பாக அந்தந்த டீக்கடைகளில் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள டீ , காபி விலை குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்ட்டு இருந்தன.
    இதனால் இன்று டீ, காபி குடிக்க வந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, தற்போது டீ, காபி விலை உயர்வு என்று உயர்ந்து வருவதால் மக்கள் திணறி வருகின்றனர்.
    சித்தோடு அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    சித்தோடு அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூரில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சை தர்மபுரி மாவட்டம் கனகத்தூர் பாவடி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52) என்பவர் ஓட்டி சென்றார்.  கண்டக்டராக இரும்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (46) என்பவர் இருந்துள்ளார்.

    இவர்கள் 2 பேரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.  அப்போது அரசு பஸ் முன்னே சென்று கொண்டிருந்த  லாரியை முந்தி சென்று உள்ளது.

    இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ் முன் பக்கம் அப்பளம் போல் நொறிங்கியது. மேலும் இந்த விபத்தில் கண்டக்டர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் ராஜேந்திரன் மற்றும் பயணிகள் சிலர் காயத்துடன் உயிர் தப்பினர்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பலியான சக்திவேலின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம்- கொங்கர் பாளையம் ரோடு குமரன் கோவில் வீதி இந்திரா காலனியில் பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கவுண்டன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகுடேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டு  கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மண் ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
    மேலும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் லாரியை சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் கொங்கர் பாளையத்தில் இருந்து 3 யூனிட் செம்மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
    இதைத்தொடர்ந்து செம்மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் லாரி டிரைவர் அத்தியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்த சுந்தரம் (40) என்பவரை கைது செய்தனர்.
    இது குறித்து  கவுண்டன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகுடேஸ்வரன் பங்களாப் புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    இதில் லாரி உரிமையாளர் டி.ஜி.புதூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த இளங்கோ மற்றும் செம்மண் எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கொங்கர் பாளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என தெரிய வந்தது. அவர்கள் தலைமறை வாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கொடுமுடி அருகே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி அருகே கொளத் துப்பாளையம் அடுத்த தேவம்பாளையம் பகுதியில் குரங்கன் ஓடை செல்கிறது. இந்த ஓடை பகுதி அருகே சுமார் 200 குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர்.

    இந்த ஒடையின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப் பணை கட்டினால் அருகே உள்ள 200 வீடுகள் பாதிக்கப் படும் என கூறி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, கொடுமுடி தாசில் தாரிடம் கடந்த மனு கொடுத்தனர். 
    ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதில் கலந்து கொண்ட வர்கள் இந்த பகுதியில் தடுப்பணை கட்டக் கூடாது என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கதிரேசன் தலைமை தாங்கி னார். ஆதி தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் முரு கேசன், செல்வி, சித்திரா, ஜெயா ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

    சிறப்பு அழைப்பாளராக மாநில நிதி செயலாளர்  பெருமாவளவன், மாநில தொழிலாளர் அணி செயலாளர்  வீர கோபால், மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட நிதி செயலாளர்  மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இதை தொடர்ந்து கொளத்துப் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவ ரிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். கொடு முடி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.
    ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.109.44 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.99.54 காசுக்கு விற்பனை ஆனது.
    ஈரோடு:

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது.

    கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.69-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 98.78 காசுக்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது.

    ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.109.44 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.99.54 காசுக்கு விற்பனை ஆனது.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    ஈரோடு:

    சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை 3 அலைகள் வந்துள்ளன. தற்போது இந்தியாவில் 3-ம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 வருடம் மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு முதன் முதலில் கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதன்பின் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2-ம் அலையின் போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பரிசோதனை 10 ஆயிரம் பேருக்கு வரை எடுக்கப்பட்டது.

    இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டதால் 3-ம் அலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகி இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 3-ம் அலை பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் நேற்றுடன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.

    இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர்.
    ×