என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கொடுமுடி அருகே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுமுடி அருகே கொளத் துப்பாளையம் அடுத்த தேவம்பாளையம் பகுதியில் குரங்கன் ஓடை செல்கிறது. இந்த ஓடை பகுதி அருகே சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஒடையின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப் பணை கட்டினால் அருகே உள்ள 200 வீடுகள் பாதிக்கப் படும் என கூறி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, கொடுமுடி தாசில் தாரிடம் கடந்த மனு கொடுத்தனர்.
ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட வர்கள் இந்த பகுதியில் தடுப்பணை கட்டக் கூடாது என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கதிரேசன் தலைமை தாங்கி னார். ஆதி தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் முரு கேசன், செல்வி, சித்திரா, ஜெயா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் வீர கோபால், மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட நிதி செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொளத்துப் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவ ரிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். கொடு முடி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.
Next Story






