என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    கியாஸ், பெட்ரோல், டீசல், சுங்க கட்டணம் விலை உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு சூளை பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கட்டுப்படுத்து. கட்டுப்படுத்து.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம். ரத்து செய். ரத்து செய்.. சுங்க கட்டண உயர்வை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    நகரச் செயலாளர் சுந்தரராஜ், சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்டேட் காலனி, சூரம்பட்டி நால்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
    Next Story
    ×