என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூசாரி குண்டம் இறங்கிய காட்சி.
தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழா
தாளவாடி தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தார்.
தாளவாடி:
தாளவாடி தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தார்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு தாளவாடி அடுத்த தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் திருவிழா நடை பெற்றது.
விழா இரவு புலி ஆட்டத்துடன் தொடங்கி யது. கோவிலில் உள்ள மண்டேசாமி, பீரேஸ்வர சாமி, லட்சுமி தேவி, மாரியம்மன், சௌடேஸ் வரி, மசனம்மாள், ராக் காயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.
தொடர்ந்து மேள தாளங்களுடன் சுவாமிகள் வீதி உலா வந்தது.பின்னர் ஆற்றாங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு மேள தாளம் முழங்க தொட்டகாஜணூர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளில் சாமி திருவீதி உலா சென்றது.
அப்போது பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணி வித்து தேங்காய், பழம் பூஜை செய்து வழிட்டனர். ஆர்.சி வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதத்தில் சுவாமிகளை அழைத்து சென்றனர். காலை சுவாமி கோவிலை வந்தடைந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி உள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா வில்வர்ச் சனையுடன் விழா வுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு மல்லி கார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய் யபட்டு மலர்களால் அலங் காரிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் சாமி உற்சவர் சிலை மேள தாளங்களுடன் ஆற்றாங்கறைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளில் வீதி உலாவாக ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்தி« ராடு வழியாக எடுத்து செல்லப் பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.
விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர் சிக்கொலா, அட்டு குளிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






