என் மலர்
ஈரோடு
கோபி:-
தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி, சனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைஎனதொடர்ந்து 4 நாட்கள்விடுமுறை விடப்பட்டது. இதையொட்டிஈரோடுமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்மக்கள்குவிந்தனர்.
ஈரோடுமாவட்டத்தில்சுற்றுலாதலங்களில்மிகமுக்கியமானதுகொடிவேரிஅணை. கோபிசெட்டிபாளையம்மற்றும்அதன்சுற்றுவட்டாரபகுதிகளில்பசுமைநிறைந்துகாணப்படுவதாலும், கொடிவேரிஅணையில்நீர்அருவிபோல்கொட்டுவதாலும், தமிழகத்தில்பல்வேறுபகுதிகளிலிருந்துவரும்சுற்றுலாபயனிகள்இயற்கைகாட்சிகளைரசிப்பதுடன்அணையில்தங்கள்குடும்பத்துடன்குளித்துமகிழ்ந்துசெல்வதுவழக்கம்.
இந்தநிலையில்கொடிவேரிதடுப்பணைக்குஈரோடுமாவட்டபொதுமக்கள்மட்டுமின்றிதிருப்பூர், கோவை, கரூர், நாமக்கல்சேலம்உள்படதமிழகத்தின்பல்வேறுமாவட்டங்களில்இருந்தும்கடந்த 4 நாட்களாக ஆயிரக்கணக்கானசுற்றுலாபயணிகள்வந்துகுவிந்தனர்.
மேலும் அணைக்குவந்தசுற்றுலாபயனிகள்அருவிபோல்கொட்டும்தண்ணீரில்குளித்து மகிழ்ந்தனர். மேலும்பலர்செல்பிஎடுத்துகொண்டனர். மேலும்பலர்தங்கள்குழந்தைகள்மற்றும்குடும்பத்துடன்வந்துநீராடியும், பரிசல்பயணம்மேற்கொண்டனர்.
நேற்றுஞாயிற்றுக்கிழமைஎன்பதால்வழக்கத்தைவிடஅதிகமானசுற்றுலாபயணிகள்அணைக்குவந்துகுளித்துமகிழ்ந்தனர். இதனால்அணைபகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.
பொதுமக்கள்தங்கள்கொண்டுவந்தஉணவுவகைகளைஅங்கேகுடும்பத்துடன்அமர்ந்துசாப்பிட்டனர். தொடர்ந்துஅணைபகுதியில்விற்கப்படும்பொறித்தமீன்வகைகள், தின்பண்டங்கள்ஆகியவற்றை சுற்றுலாபயணிகள்வாங்கிஉண்டும்மகிழ்ந்தனர்.
இதனால்கடந்த 4 நாட்களில்மட்டும் 33 ஆயிரத்து 300 பேர்அணைக்குவந்திருந்தனர். இதன்மூலம்ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 525 வசூலானதாகஅதிகாரிகள்தெரிவித்தனர்.
இதேபோல்பவானிசாகர்பூங்காவுக்குதொடர்விடுமுறைகாரணமாககடந்த 4 நாட்களாகஏராளமானசுற்றுலாபயணிகள்வந்துகண்டுகளித்தனர். நேற்றுமுன்தினம்மற்றும்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான மக்கள்வந்திருந்தனர்.
அவர்கள்பூங்காவில்குடும்பத்துடன்ஊஞ்சல்விளையாடிமகிழ்ந்தனர். மேலும்சிறுவர்மற்றும்சிறுமிகள்சறுக்குவிளையாடினர்.
தொடர்ந்துபொதுமக்கள்அணைபகுதிக்குவந்துஅங்குகொட்டும்தண்ணீரைகண்டுகளித்தனர். இதனால்பவானிசாகர்பகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.
மேலும்பவானிகூடுதுறையிலும்கடந்த 4 நாட்களாகஏராளமானபொதுமக்கள்மற்றும்பக்தர்கள்வந்துஆற்றில்புனிதநீராடி சங்கமேஸ்வரரைவழிபட்டனர்.
அதேபோல்ஈரோடு, வ.உ.சி. பூங்கா, கொடிமுடி உள்படமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்பொது மக்கள்குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு மாநகரில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பஸ் நிலையம், மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பார்க், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம், வீரப்பன்சத்திரம் உள்பட நகரின் பல பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
பலத்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் பழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் மழை வெள்ளத்தை வெளியேற்றினார். பலத்த மழை காரணமாக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் இன்று காலை காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
மேலும் கவுந்தப்பாடி, சலங்கபாளையம், அய்யம் பாளையம், பொம்மம்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு திடீரென இடி- மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன. மழை இரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் பசுமையாக காணப்பட்டன.
அந்தியூர், பர்கூர் மற்றும் தட்டக்கரை, தாமரைக்கரை உள்பட மலை பகுதிகளிலும் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் மலை பகுதிகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மொடக்குறிச்சி, அவல்பூந்துறை மற்றும் பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சித்தார் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை பரவலாக மழை பெய்தது.
தாளவாடி, கேர்மாளம் மற்றும் திங்களூர் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. திங்களூர், காடட்டி, பேடர் பாளையம், மந்தைதொட்டி, சிக்கநந்தி மலைகிராமங்களில் இடி- மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது
இந்த மழையால் பேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளப்பா என்பவரின் 2 கன்று குட்டிகள் மின்னல் தாக்கி பலியானது.
பவானி, சித்தோடு, ஆப்பகூடல், பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-27, கொடுமுடி-4.8, பெருந்துறை-20, பவானி-56, கோபி-25, சத்தியமங்கலம்-7, நம்பியூர்-9, சென்னிமலை-21, மொடக்குறிச்சி-38, கவுந்தப்பாடி-41.4, எலந்தகுட்டை-8.2, அம்மாபேட்டை-44, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம்-15.2. மாவட்டம் முழுவதும் 321.6 மி.மீட்டர் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.முக. சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலை 266-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்வில் பங்கு பெற இயலவில்லை.
இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று இருந்தாலும், அரசு இன்று கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கியுள்ளது.
அதன் காரணமாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்ன மலைக்கு புரட்சித்தலைவி அம்மா அமைத்த ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்காடு பகுதியில் 60-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணிக்கு சொந்தமான வீடு கட்டுமான பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்த கட்டுமான பணியின் மேஸ்திரியாக வெண்டிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்த கட்டுமான பணியில் ஈரோடு வெண்டிபாளையம் பாலதண்டாயுத பாணி வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரி (50), ராஜு (42), சாந்தி (44) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் 6 அடி உயரத்திற்கு ஹாலோ பிளாக் கற்களால் சுவர் வைத்துள்ளனர். தொடர்ந்து அடுத்த நாள் (நேற்று) கட்டுமான பணியில் ராஜேந்திரன், மாதேஸ்வரி, ராஜு, சாந்தி ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுவர் காயாமல் ஈரபதத்துடன் இருப்பதாக ராஜேந்திரன், மேஸ்திரி பொன்னுசாமியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் இது குறித்து உரிமையாளரிடம் பேசி விட்டதாகவும் இன்றைக்கு முழு சுவரையும் வைக்கனும் என கூறி விட்டு சென்றார்.
இதையடுத்து ராஜேந்திரன், ராஜூவும் மரச்சாரத்தின் மீது மீதமுள்ள சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுவர் முழுவதும் சரிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதில், கட்டிட வேலை செய்து வந்த ராஜேந்திரன், ராஜு, மாதேஸ்வரி ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், ராஜேந்திரனுக்கு தலையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரிக்கு வலது கை விரல்களிலும், ராஜூவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து 3 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். காயம் அடைந்த மாதேஸ்வரி, ராஜூ 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி மற்றும் மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 30). இவர் வனப்பகுதியையொட்டி தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பத்மா நேற்று அதிகாலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது யானையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது யானை ஒன்று மக்காச்சோள பயிரை தின்று நாசப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பத்மா யானையை விரட்ட முயற்சித்தார்.
அப்போது யானை அவரை தாக்கி உள்ளது. இதில் பத்மா படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து யானையை காட்டுக்குள் விரட்டி விட்டனர். பின்னர் படுகாயமடைந்த பத்மாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேப்போல அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாங்கள் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை மீண்டும் யானை வந்து சேதப்படுத்தி விடுமோ என்ற கவலையில் இருக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது நாங்கள் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளோம். யானை போன்ற வன விலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இரவு காவலில் இருந்து வருகிறோம்.
இருந்தாலும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஊருக்கு வெளியே பெரிய அகழிகள் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்றனர்.






