என் மலர்
உள்ளூர் செய்திகள்

முக ஸ்டாலின்
அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க உறுதியேற்போம்- முதலமைச்சர் ஈஸ்டர் வாழ்த்து
வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க அனைவரும் உறுதியேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஈஸ்டர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும், கிறித்தவ பெருமக்களுக்கு, ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள்.
கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானைப் போற்றும் இன்னாளில், வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை
Next Story