என் மலர்
ஈரோடு
ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி (44). இவர் தனது குடும்பத்துடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி கடந்த 14-ந் தேதி பணியில் இருந்தபோது திடீரென உயர் அதிகாரிகளின் செல்போனிற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பினார்.
மேலும் அதில் தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நீலாவதியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்நிலையில் சோலார் பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் நீலாவதி மொபட்டில் சென்றார். அப்போது அவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார்.
இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாவதி பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது. அதில் உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான். எனது இந்த முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவரும் தான் காரணம்.
அந்த உயர் அதிகாரி சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டுவை ஒரு முறை நான் திட்டியதால் என்னை பழி வாங்குவதற்காக என்னை பற்றிய தவறான தகவலை உயர் அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார்.
இவர்களின் செயலால் தான் என்னை ஆயுதப்படைக்கு போக சொன்னார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் பறித்துக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று அதில் கூறி இருந்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரணை நடத்த டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதேப்போல் இன்ஸ்பெக்டர் நீலாவதியிடமும் விசாரணை நடத்தினர்.
இரண்டு தரப்பினரிடமும் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-
பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி தெரிவித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
இதேபோல் பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் புகார்கள் இருந்ததை அடுத்து அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அந்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள். அது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு மீது புகார் தெரிவித்த இன்ஸ்பெக்டர் நீலாவதி இதுவரை பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பழைய ராசா குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் சரிவர வருவதில்லை எனவும் இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று காலை அந்தியூர் ராசா குளம் பிரிவு ஆதி ரெட்டியூர் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் அந்தப் பகுதி மக்கள் இடத்தில் பேச்சு-வார்த்தை செய்து உடன-டியாக தண்ணீர் வருவதற்கு உண்டான வழிவகை செய்து கொடுப்-பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்தியூர், வெள்ளித்-திருப்பூர் சாலையில் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
தாளவாடி:
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்-கணக்கான வாகனங்கள் பயணிக்-கின்றன.
தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக பிப்10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் க்கு சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் காலை 7 மணியளவில் திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறிய வாகனங்கள் சென்று வந்தன மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. பின்னர் அவ்வழியாக வந்தவேறு லாரி ஓட்டுநர் லாரியை குறுகிய வளைவில் இருந்து மீட்டர் பின்னர் 9 மணி-யளவில் போக்குவரத்து சீரானது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






