என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான முத்துசாமி.
சிறுமியை திருமணம் செய்து போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
பெருந்துறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் அவரது அக்கா ஆகியோர் பெருந்துறை பகுதியில் தங்கி வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் வேலை முடிந்து அந்த நிறுவனத்தின் பஸ்சில் வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இருவரும் இரவு அவர்கள் பஸ்சில் வந்தனர். ஆனால் சிறுமி அறைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. சிறுமி மாயமாகி விட்டார்.
அவர் எங்கு சென்றார் என தெரிய வில்லை. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான சிறுமி கோவை சூலூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பெருந்துறை சப்& இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமியை வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பவானி ஆனந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி (27) என்பதும் சிறுமியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
மேலும் முத்துசாமி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று சென்னிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவை சூலூர் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் முத்துசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து முத்துசாமி பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






