என் மலர்
ஈரோடு
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை பவானி&ஈரோடு ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 49).
இவர் அதேபகுதியில் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து வருகிறார்.
அற்புதராஜ் பெருந்துறை அடுத்துள்ள சிப்காட்டில் ஒரு தனியார் மில்லில் பிட்டர் ஆக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அற்புதராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.35,000 ஆகும்.
இதுதொடர்பாக அற்புதராஜ் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்த விவசாயி தவறி வாய்க்காலுக்குள் விழுந்து பலியானார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்த விவசாயி தவறி வாய்க்காலுக்குள் விழுந்து பலியானார்.
பெருந்துறை அடுத்துள்ள நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேதபால் (வயது 58). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேதபால் அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வாய்க்காலுக்குள் விழுந்து விட்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி வாய்க்காலில் 100 மீட்டர் தொலைவில் அவருடைய உடலை மீட்டனர்.
இது குறித்து திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேதபால் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் கேம்மியாம்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் நிஷாந்தினி (வயது 15). ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தினமும் பட்லூரில் இருந்து பஸ்சில் ஈரோட்டுக்கு வந்து பள்ளி சென்று வந்தார்.
சம்பவத்தன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உடனே பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது பள்ளி நிர்வாகம் நிஷாந்தினி காலையிலே பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.
பின்னர் அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
இதனையடுத்து இது குறித்து மாணவியின் பெற்றோர் வெள்ளிதிருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு இ.சி.எம். லே-அவுட் பகுதியில் ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து மாத்திரைகளை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, இ.சி.எம். லே-அவுட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று காலை மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ரோட்டோரமாக 2 மூட்டைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடந்தன. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனை பயன்படுத்தி யாரோ சிலர் காலாவதியான மருந்து, மாத்திரை மூட்டைகளை இங்கு ரோட்டோரமாக கொட்டி சென்று உள்ளனர்.
இது குறித்து துப்புரவு ஆய்வாளர் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள், 34-வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அந்த மூட்டைகளில் ரத்தக்கொதிப்பு மாத்திரைகள், மருந்துகள், கருத்தரிக்காமல் இருக்க கூடிய மாத்திரைகள் அதிக அளவில் இருந்தன. இது யார் கொண்டு வந்து கொட்டியது என தெரியவில்லை. இ.சி.எம். லே-அவுட் பகுதியை சுற்றி ஏராளமான மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் உள்ளன.
இதில் யாராவது கொண்டு வந்து போட்டார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காலாவதியான மருந்துகளை கொட்டிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று காலை இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி:
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 17-ந் தேதி தேர் நிலை சேர்ந்தது.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜர் தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிவகிரி ஆதீனம் தலைமையில் கோமாதா பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு ஆடவல்லான் நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்ச வத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
நீலகிரி பகுதிகளில் இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
ஈரோடு:
நீலகிரி பகுதிகளில் இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு 2,812 கன அடி நீர் வந்தது. இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.21 அடியாக உள்ளது. அணைக்கு 1,411 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காலிங் கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 2,100 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி பீடி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தொழிற்சங்கம், நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு நடந்தது.
ஈரோடு:
ரம்ஜான் பண்டிகையையொட்டி பீடி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தொழிற்சங்கம், நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு நடந்தது.
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) மற்றும் பீடி தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஈரோட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பீடி தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பில் சங்க பொது செயலாளர் சின்னசாமி, செயலாளர் அப்துல் வஹாப், பொருளாளர் சர்தார் ஆகியோர் கலந்து கொண்-டனர்.
பேச்சுவார்த்தையில் கடந்தாண்டு சுற்றிய பீடிகளின் அடிப்படையில் கணக்கிட்டு போனஸ் வழங்குவது என்றும், போனஸ் தொகை ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக வழங்கி முடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 1,500 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.
போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக ஆர்.டி.ஓ. மூலம் பறிமுதலான, நிதியா ளர்களால் விடுவிக்கப்படாத 69 வாகனங்கள், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ளன.
இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 11 மணி முதல் மாலை, 5 மணி வரை ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம்.
ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27-ந் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம்.
பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28-ந் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும்.
ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பார்வையிடலாம்.
பெருந்துறையில் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை 4&வது வீதி, வி.சி.பி. நகரை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 47). இவர் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
துரைமுருகன் நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்தார். இன்று காலை துரைமுருகன் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. வீட்டு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.65 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு வைர மோதிரம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக் கப்பட்டது. இதேபோல் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஆண்டு தோறும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
இந்த உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைபெருக்கம் மற்றும் சாகுபடிக்காக விதைப்பண்ணைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லிய மாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப் பருவம் மற்றும் விதைக் குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கிறது.
இந்த நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல் ஐ.ஆர் 20 மற்றும் பாசிப்பயிறு சி.ஓ 8 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
மேலும் நெல் ஐ.ஆர்- 50, பாசிப்பயிறு சி.ஓ-7 மற்றும் உளுந்து வி.பி.என்&9 அறு வடைப் பருவத்தில் உள்ளது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
இதில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேரா சிரியர்கள் உத்தராசு, தேவா ணந், குமரேசன் மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண் காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும் விதைப் பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறி விக்கப்பட்ட நோய்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்ய தேவையான அனைத்து நடை முறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காவிரி ஆற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு:
காவிரி ஆற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் மின் தடுப்பணை உள்ளது. தடுப்பணை மீது உள்ள பாலத்தில் இருந்து சம்பவத்தன்று 30 அடி கீழே காவிரி ஆற்றில் ஒரு நாய்க்குட்டி தவறி விழுந்து விட்டது.
ஆகாய தாமரைசெடி மீது விழுந்ததால் நாய்க்குட்டி நீரில் மூழ்கவில்லை. வெளியே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரவு 7 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரவானதால் கயிறு கட்டி மீட்க முடிவு செய்தனர். பாலத்தில் இருந்து தீயணைப்பு வீரர் ஒருவர் கயிற்றின் மூலம் கீழே இறங்கினார்.
பின்னர் அவர் நாய்க்குட்டியை லாவகமாக கையில் பிடித்து மேலே கொண்டு வந்தார். நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயரத்தொடங்கியது.
ஈரோடு:
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயரத்தொடங்கியது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா, மைசூர் எல்லைப் பகுதியான கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து 4 ஆயிரம் பெட்டிகள் தக்காளிகள் வரத்தாகி வந்தது.
விளைச்சல் அதிகமாக இருந்ததாலும், வரத்து அதிகரித்து வந்தாலும் தக்காளி விலை குறைந்து கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த வாரம் விற்பனையானது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்-களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து தக்காளி வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்த காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயரத்தொடங்கியது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இன்று மேலும் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 4 ஆயிரம் பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் இன்று 2 ஆயிரம் பெட்டிகளே வரத்தாகி இருந்தது.
இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. இதனால் இன்று தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்னும் அடுத்து வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






