என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காவிரி ஆற்றில் விழுந்த நாய் குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
காவிரி ஆற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு:
காவிரி ஆற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் மின் தடுப்பணை உள்ளது. தடுப்பணை மீது உள்ள பாலத்தில் இருந்து சம்பவத்தன்று 30 அடி கீழே காவிரி ஆற்றில் ஒரு நாய்க்குட்டி தவறி விழுந்து விட்டது.
ஆகாய தாமரைசெடி மீது விழுந்ததால் நாய்க்குட்டி நீரில் மூழ்கவில்லை. வெளியே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரவு 7 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரவானதால் கயிறு கட்டி மீட்க முடிவு செய்தனர். பாலத்தில் இருந்து தீயணைப்பு வீரர் ஒருவர் கயிற்றின் மூலம் கீழே இறங்கினார்.
பின்னர் அவர் நாய்க்குட்டியை லாவகமாக கையில் பிடித்து மேலே கொண்டு வந்தார். நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story






