என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து வைர மோதிரம்-பணம் திருட்டு
பெருந்துறையில் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை 4&வது வீதி, வி.சி.பி. நகரை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 47). இவர் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
துரைமுருகன் நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்தார். இன்று காலை துரைமுருகன் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. வீட்டு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.65 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு வைர மோதிரம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக் கப்பட்டது. இதேபோல் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






