என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
    X
    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயரத்தொடங்கியது.
    ஈரோடு:

    கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயரத்தொடங்கியது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு  தினமும் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா, மைசூர் எல்லைப் பகுதியான கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து 4 ஆயிரம் பெட்டிகள் தக்காளிகள் வரத்தாகி வந்தது.

    விளைச்சல் அதிகமாக இருந்ததாலும், வரத்து அதிகரித்து வந்தாலும் தக்காளி விலை குறைந்து கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த வாரம் விற்பனையானது.

    கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்-களிலும், வெளி மாநிலங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து தக்காளி வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்த காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயரத்தொடங்கியது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இன்று மேலும் விலை அதிகரித்துள்ளது.

    இன்று காலை ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 4 ஆயிரம் பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் இன்று 2 ஆயிரம்  பெட்டிகளே வரத்தாகி இருந்தது.

    இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. இதனால் இன்று தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    இன்னும் அடுத்து வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×