என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ&மாணவிகள் எழுதுகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்-.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை
    24,909 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்-.

    தமிழகத்தில் வரும் மே மாதம் 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
     பிளஸ்-1 பொதுத் தேர்வினை 27,656 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்காக 104 தேர்வு மையங்களும் மற்றும் தனி தேர்வர்களுக்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வினை அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்ல முறையில் நடத்திட வேண்டும். தேர்வு பணியில் துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், பறக்கும் படையினர், ஆய்வு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவு நியமனம் செய்ய வேண்டும்.

    தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 -ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது.

    இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2&ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
    இதன்பின் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2&ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது.

    இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப் பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 
    ஆனால் பெரும்பா லானோர் முககவசம் அணியாமல் சென்றதால் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஒன்றிணைந்து முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    முக கவசம் அணிந்தால் கொரோனா  ஒருவரிட மிருந்து மற்றொரு வருக்கு பரவாது என அரசும் வலியுறுத்தியது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்-பட்டனர்.
    தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வர தொடங் கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க் கைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி-யுள்ளது. இந்தியா வில் கேரளா டெல்லி போன்ற மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று கூட சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

    இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும் பொது இடங்களில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். 


    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத் தியுள்ளனர். தற்போது 90 சதவீத பொதுமக்கள் முக கவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்து செல்கின்றனர். 

    குறிப்பாக பொது இடங்களில் முககவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். பெண்கள் தங்களது குழந்தைகளை வெளியே அழைத்து வரும்போது முககவசம் அணிந்து வருவதில்லை. கொரோனா முழுவதுமாக விலகி விடவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.

    தற்போது கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும் பாலானோர் முககவசம் அணிந்து வருவதில்லை. இதேபோல் திருமணம் உட்பட விசேஷங் களிலும் முககவசம் அணிவ தில்லை. பொதுமக்கள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு குறைந்து விட்டது. கொரோனா பரவல் தடுப் பதில் முககவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
    எனவே பொது இடங்களில் முககவசம் அணியாமல் வரும் மக்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கும் பணிய தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி, ஆசனூர் போலீஸ் நிலையம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போலீசாரிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது சத்தியமங்கலம் டி.எஸ்.பி.ஜெயபாலன், தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    புஞ்சைபுளியம்பட்டியில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மாரப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (52). நாதஸ்வர கலைஞர். இவர் இன்று காலை தண்ணீர்பந்தல்- மாரப்ப கவுண்டன்புதூர் செல்லும் வழியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி (புஞ்சைபுளியம்பட்டி), நெப்போலியன் (சத்தியமங்கலம்) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பழனிச்சாமி தனது உறவினர்கள் 2 பேருடன் நேற்று இரவு இந்த பகுதியில் மது குடித்தது தெரிய வந்தது. மேலும் மது குடிக்கும் தகராறில் ஏற்பட்ட மோதலில் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட பழனிச்சாமிக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், வேலுச்சாமி என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் உள்ளனர். 

    கர்நாடகாவை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் எலந்தூர் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஈரோடு மாவட்டம் பரிசாபாளையம் என்ற பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது சத்தியமங்கலம் தேசிபாளையம் காமராஜ் நகர் காலனியை சேர்ந்த நாகராஜ் (23) என்ற வாலிபர் அந்த பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நாகராஜுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று நாகராஜ் சிறுமியை அழைத்து கொண்டு கைக்காலன்குட்டை என்ற பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த திருமணத்தை அவரது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து நாகராஜ் தேசிபாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து நாகராஜ் குடும்பம் நடத்தும் தகவல் சைல்டு அமைப்புக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் லூர்துமேரி, கற்பகம், பிரேமா ஆகியோர் தேசிபாளையத்துக்கு சென்றனர்.

    அப்போது சிறுமிக்கு கன்னட மொழி மட்டுமே தெரியும் என்பதால் அவர்கள் கன்னடத்தில் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தான் 7-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தனது பெற்றோர் இறந்து விட்டதால் அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது நாகராஜுவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் நிலையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மாலை பெருந்துறை மணியம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பவானி ஜீவாநகரை சேர்ந்த அரவிந்தசாமி (வயது 31) என்பதும், அவர் பெருந்துறையில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    தாளவாடி வனப்பகுதியில் மயங்கி கிடந்த பெண் யானை சிகிச்சை பெற்று மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.
    தாளவாடி:

    தாளவாடி வனப்பகுதியில் மயங்கி கிடந்த பெண் யானை சிகிச்சை பெற்று மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட  தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் காட்டு யானை நடமாடுவதாக வனத்-துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை நடக்க முடியாமல் மயக்க நிலையில் கீழே படுத்துக் கிடப்பதை கண்டனர்.

    இதையடுத்து உடனடியாக கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் குடல் புழு நோயால் அவதிப்பட்ட  யானைக்கு சிகிச்சை அளித்தார்.  

    சுமார் 3 மணி நேர சிகிச்சைக்குப்பின்  காட்டுயானை சற்று உடல்நலம் தேறியதால் மெல்ல எழ முயற்சித்தது. அப்போது வனத்துறை ஊழியர்கள் கயிறு கட்டி இழுத்து காட்டு யானையை எழுந்து நடக்கும்படி செய்தனர்.

    தட்டுத்தடுமாறி எழுந்த யானை மெல்ல நடந்து  வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    பெருந்துறை அருகே குழந்தை இல்லாததால் இளம்பெண் விஷ குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அருகே குழந்தை இல்லாததால் இளம்பெண் விஷ குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கோகிலாம்பாள். இவர்களது மகள் சந்தியா (வயது 26).

     கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சந்தியா அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சந்தியா மற்றும் கார்த்திக் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக இருவரும் சிகிச்சை எடுத்து வந்தனர்.

    எனினும் குழந்தை இல்லை என்ற மன உளைச்சலில் சந்தியா இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சம்பவத்தன்று சந்தியா விஷ மாத்திரை தின்று வாந்தி எடுத்துள்ளார்.

    இதுகுறித்து கேட்டதற்கு தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறிவிட்டு மயங்கினார்.

    உடனடியாக சந்தியாவை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தபாடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேசன் அரிசை பொதுமக்கள் மடக்கி பிடித்து தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தபாடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேசன் அரிசை பொதுமக்கள் மடக்கி பிடித்து தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பூலுவபட்டியில் பாவண்டா கவுண்டனூருக்கு உட்பட்ட முழு நேர ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு 8 மணி அளவில் இந்த ரேசன் கடைக்கு எதிரே உள்ள ஒரு வீட்டின் முன் ரோட்டோரத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த அரிசி யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் கருப்பு நிற ஆம்னி வேன் ஒன்று வந்து நின்றது.

    பின்னர் அந்த வேனில் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்றனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் ஆம்னி வேன் அருகே திரண்டு சென்றனர்.

    அப்போது கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து பொதுமக்கள் காரில் பார்த்தபோது அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. 

    இதுகுறித்து பொதுமக்கள் கவுந்தப்பாடி நில வருவாய் ஆய்வாளர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து 20 மூட்டை ரேசன் அரிசி மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்து உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.  

    போலீசார் ஆம்னி வேன் யாருக்கு சொந்தமானது, ரேசன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வந்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அந்தியூர் ஒன்றியத் தலைவர் அய்யனார் வரவேற்றார். 

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கதிரவன், சாந்த முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் நல்லசாமி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டரை வழங்கிட வேண்டும்.

    சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட மூன்றரை லட்சம் ஊழியர்-களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்

    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை பணிக்கால-மாக வரன்முறைப்படுத்த வேண்டும்.

    அரசுத் துறையில் உள்ள காலிப்பயிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை தாசில்தார் ரவி உள்பட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    அந்தியூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் சரன்ராஜ் (வயது 21). சரன்ராஜ் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயுடன் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் சரன்ராஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சரண்ராஜ் தவறி கீழே விழுந்து கால் தொடையில் காயம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சரண்ராஜ் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த செல்வி மகன் அறையை பார்த்த போது சரண்ராஜ் தூக்குபோட்டு கொண்டு தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    அரச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக இன்று காலை ஈரோடு பஸ் நிலையம் நோக்கி  டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    பஸ்சை ஈரோட்டை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.  பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் அந்த பஸ் ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் பஸ் நிறுத்தத்தில் நின்றது.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 50) என்ற பெண் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் படிக்கட்டின் அருகே நின்று பயணம் மேற்கொண்டார்.

    அப்போது கே.கே. நகர் தாண்டி பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    நல்ல வேளையாக பஸ் மெதுவாக சென்றதால் அவருக்கு முகம் மற்றும் கைகளில் மட்டும் அடிபட்டது. மேலும் அவர் கீழே விழுந்தபோது பின்னால் எந்த ஒரு வாகனமும் வரவில்லை.

    இதனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.  பஸ்சில் இருந்து பெண் கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி அந்த பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வள்ளியம்மாளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இன்று காலை அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    பவானிசாகர் அணையில் இருந்து 2700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் இருந்து 2700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 81.92  அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1033 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடியும், காலிங்கராயன் 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2000 கன அடியும் என மொத்தம் 2700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ×