என் மலர்
ஈரோடு
உலக புவி தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.
கோபி:
உலக புவி தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மையியல், தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி, அவைகளை நுண் உரக் குடில் மையத்தில் அரைத்து உரமாக்குதல் பணிகளையும், மக்காத கழிவுகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணிகளையும், உயிரி எரிவாயு கூட பணிகளையும் விரிவாக விளக்கி கூறினார்.
பின்னர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு உலக புவி தின விழிப்புணர்வு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் மைதிலி, முதன்மை செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன், கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், இயற்பியல் பிரிவு துறைத்தலைவர் ராதிகா, பேராசிரியர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அருள் பிரசாத், சத்யா, பரப்புரையாளர்கள் அருள், கிருஷ்ணன், பூங்கொடி, மஞ்சுநாதன், வைஷ்ணவி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சாஸ்திரி நகர் கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் (36).மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன் (12), புகழேந்தி (4) என 2 மகன்கள் உள்ளனர்.
யோகேஷ் குமார் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத் தன்று யோகேஷ்குமார் மகன் ஹரிகிருஷ்ணனை பள்ளியில் விடுவதற்காக தனது மொபட்டில் அழைத்து சென்று கொண்டி ருந்தார். மொபட்டை யோகேஷ்குமார் ஓட்ட பின்னால் ஹரிகிருஷ்ணன் அமர்ந்து வந்தார்.
காந்திஜி ரோடு பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது யோகேஷ்குமார் முன்னால் மற்றொரு மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டி ருந்த நபர் திடீரென பிரேக் போட்டார். இதை சற்றும் எதிர்பாராத யோகேஷ்குமார் மொபட் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் யோகேஷ் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னால் அமர்ந்து வந்த ஹரி கிருஷ்ணாவுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு யோகேஷ்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஹரி கிருஷ்ணா வுக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் யோகேஷ்குமார் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த யோகேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொன்மாணிக்கவேல் தவற விட்ட கைத்துப்பாக்கியை ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
தமிழக சிலை தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஈரோட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று இரவு சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் புறப்பட்டார்.
அவர் ஏற்காடு எக்ஸ்பிரசில் ஏ1 ஏ.சி. கோச்சில் பயணம் செய்தார். அப்போது தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை இருக்கைக்கு அடியில் வைத்து இருந்தார். அதில் 8 தோட்டாக்கள் இருந்தது.
ரெயில் இன்று காலை ஈரோடு வந்து நின்றதும் பொன்மாணிக்கவேல் கைத்துப்பாக்கியை தவறுதலாக எடுக்காமல் சென்று விட்டார். இந்த நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு ரெயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து வழக்கம்போல் ரெயிலை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ1 ஏ.சி. கோச்சில் கைத்துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் தனது கைத்துப்பாக்கியை ரெயிலில் தவற விட்டதை அறிந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போதுதான் ஊழியர்கள் எடுத்த துப்பாக்கி பொன்மாணிக்கவேலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் கைத்துப்பாக்கியை பொன்மாணிக்க வேலுவிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தாளவாடி வனப்பகுதியில் உறவினர்களுடன் புல் அறுக்க சென்ற தொழிலாளி யானை தாக்கி பலியான சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி நொய்தாலாபுரம் அல்லாபுரதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேவன் (47) தொழிலாளி. இவரது மனைவி மாஸ்தி (36). இவர்களது மகன் மகேந்திரன்.
மாதேவன் நேற்று காலை தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களான பொம்பையன், மணி, செஞ்சி, மாதேவி, நாகம்மாள், மாலா ஆகியோருடன் சீமாறு புல் அறுப்பதற்காக தாளவாடி வனப்பகுதிக்கு சென்றார்.
பின்னர் சீமார்புல் அறுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மீண்டும் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது அவர்கள் வனப்பகுதியில் உள்ள மாரப்பர்குட்டை பிரிவு அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த ஒற்றை யானை மாதேவனை தும்பிக்கையால் சுற்றி வளைத்து பிடித்து காலால் மிதித்தது. இதில் மாதேவன் பலத்த காயம் அடைந்தார். யானையை பார்த்த உறவினர்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து யானை அங்கிருந்து சென்று விட்டது.
பின்னர் படுகாயம் அடைந்த மாதேவனை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாதேவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு:
பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முள்ளம்பட்டியில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையை ஒரு மாணவன் மற்றும் ஒரு சிறுமி சுத்தம் செய்வது போன்ற ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி பரவியது.
இந்த வீடியோவை பார்த்த பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் மூலமாக சுத்தம் செய்ய வைத்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டு இருந்தார். அவருடைய உத்தரவின்பேரில் பெருந்துறை கல்வி மாவட்ட அதிகாரி அமுதா சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று தலைமை ஆசிரியை, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில், அதன் அறிக்கையை அவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மைதிலி, ஆசிரியை சுதா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்-.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்-.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி, எஸ்.கே.சி ரோடு, ஜெகநாதபுரம் காலனி ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் ரோட்டோரம் ஆக்கிர மிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதேபோல் எஸ்.கே.சி ரோடு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில கடை களில் கடைக்காரர்கள் சாக் கடைக்கு மேல் கான்கிரீட் தளம் அமைத்து படிகள் அமைத்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி தூர்வார முடிய வில்லை. இதனால் இந்த பகுதியில் சாக்கடைகள் அடைத்து விடுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சம்மந்தப்பட்ட கடைக்காரர் களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதனால் ஆணையாளர் சிவகுமார் உத்தரவு பேரில் இன்று 3&ம் மண்டல உதவி ஆணையாளர் விஜயா, இளநிலை பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் மேற்பார்வையில் சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி. ரோடு, ஜெகநாதபுரம் காலனி வரை உள்ள பகுதி களில் ரோட்டோரம் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளின் முன் பகுதிகள் அகற்றப்பட்டன.
மாநகராட்சி பணியாளர் கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் தங்களது கடைகளில் முன் சாக்கடைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதேபோல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
மேலும் சாலையோரம் போடப்பட்டிருந்த காய்கறி கடைகளும் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக் கையாக சூரம்பட்டி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் கிருஷ்ணனுன்னி தொடங்கி வைத்தார்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் கிருஷ்ணனுன்னி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங் களில் மரக்கன்றுகள் நடுவ தற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டெக்ஸ்வேலி இயக்குனர் உமா ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் அங்கு அடர் குறுவனம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 500 சதுர அடியில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 40 அரசு பள்ளிக்கூடங்களில் அடர் குறுவனம் அமைக்கும் வகையில் தலா 800 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும் 95 பள்ளிக் கூடங்களில் இடைவெளி விட்டு மரக்கன்றுகள் நடப் படுகிறது. எனவே மொத்தம் 135 பள்ளிக் கூடங்களில் 35 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன. இதேபோல் 395 பள்ளிக்கூடங்களில் மாடி தோட்டம் அமைக்கப் படுகிறது.
இந்த விழாவில் ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி ஜோதி சந்திரா, பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் அம்மன் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
மேலும் சிலர் கள்ளச்சந்தையில் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் போலீசார் நேற்று ஒரு நாளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இவர்களுடன் மதுவிலக்கு போலீசாரும் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாநகர பகுதியில் கருங்கல்பாளையம், டவுன், சூரம்பட்டி, கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி மொடக்குறிச்சி, கொடுமுடி உட்பட மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.
இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள், அனுமதியின்றி மது விற்றவர்கள், கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது பெற்றவர்கள், வாகனங்களில் மதுவை கடத்தி விற்றவர்கள் என ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மது விற்பனையில் ஈடுபட்ட 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஒரே நாளில் 831 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்-பட்டுள்ளது. மது விற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி வேட்டை இன்று 2&வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த கருக்கன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (58). இவரது மனைவி முத்து லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
குமாரசாமி பெருந்துறை சிப்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் முகவர் முதல் நிலையில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து உடல் நலம் சரியில்லாத காரணத் தினால் கடந்த 11 மாதங் களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
தொடர்ந்து மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணம் அடையாததால் கடந்த சில நாட்களாகவே குமாரசாமி மனவேதனை-யுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்-தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்த குமரசாமி வீட்டில் இருந்த 10 சல்பாஸ் (விஷ)மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து முத்துலட்சுமி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக குமாரசாமி கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவி-யுடன் கணவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்-சைக்காக அனுமதித்தனர்.
அங்கு குமாரசாமியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக பெருந்-துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ-தித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குமார-சாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி அருகே மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் நார் கம்பெனி கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி இந்த கம்பெனியால் நிலத்தடி நீர் மற்றும்சுற்றுச்சூழல் பாதிக்கப் படும் என கூறி அந்த பகுதியை சேர்ந்த-பொது-மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு அனுமதி வழங்க- கூடாது என வலி-யுறுத்தியும் வந்தனர்.
மேலும் சுற்றுச் சுழலுக்கு இடையூறு ஏற்படுத்தி மாசு உண்டாக்கி வரும் தேங்காய் நார் கம்பெனிக்கு சீல் வைக்க கோரி கடந்த ஆண்டு நடந்த கிராம சபா கூட்டத்தில் கிராம மக்கள்-கொடுத்த மனுவை ஏற்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடை-பெற்ற பேச்சு-வார்த்தையில் ஆலை-நிர்வாகம் ஆலையை மீண்டும் திறந்து நடத்த மாட்டோம். பொருட்கள் எடுப்பதாக- இருந்தாலும் பஞ்சாயத்து நிர்வாகம், கிராம அலுவலருக்கு தகவல் தந்து தான் திறப்போம் என்று கூறி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த தேங்காய் நார் ஆலை திடீ ரென திறக்கப்பட்டு இருந் தது. இது குறித்த தகவல் அறிந்ததும் இச்சிப் பாளையம் பகுதி மக்கள் ஆலையின் முன்பு ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் துக்கு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வந்தனர்.
போலீசார் விசாரனையில் நாளை (அதாவது இன்று) ஆர்.டி.ஓ. ஆலையை பார்வையிட வருவதாகவும், அதற்காக திறக்கப்பட்டதாகவும் ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற் பட்டது.
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 28 - ந் தேதி நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
28 - ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவில் 2022-2023ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு ஊசி இரண்டு தவணைகள் செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும்.
அதேபோல மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவில் கலந்து கொள்பவர்கள் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டிகள் வரும் 28ஆம் தேதி காலை 7 மணிமுதல் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொழுத்தி வருவதால் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொழுத்தி வருவதால் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் வருவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் பொது-மக்கள் கடுமையாக பாதிக்கப்-பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தை அடைகிறது. தொடர்ந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வீட்டில் புழுக்கம் அதிகள வில் உள்ளதால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பொது மக்கள் அதிக அளவில் கரும்பு பால், குளிர் பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி வியாபாரமும் தற்போது சூடுபிடிக்க தொடங் கியுள்ளது.
விடுமுறை நாட்களில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங் கியுள்ளனர். குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் குடும்ப த்துடன் சென்று வருகின் றனர்.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மட்டுமன்றி கோவை, சேலம், கரூர், நாமக்கல், போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் மக்கள் வருகின்றனர்.
இதேபோல் காலிங்க-ராயன் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குளித்து வெப்-பத்தை தணித்து வருகின்-றனர். அக்னி நட்சத்திரம் வெயில் வரும் மே மாதம் 4 - ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது.
இப்போதைய வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் என்ன செய்யப் போகிறோம் என மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.