என் மலர்tooltip icon

    ஈரோடு

    திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
    தாளவாடி:

    திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சிறுத்தைகள் தங்களது எல்லையை அதிகரித்து வருவதால் வனத்தை யொட்டி உள்ள  கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தமிழகம்&கர்நாடகவை இனைக்கும் திம்பம் மலைப் பாதையில் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறப்பதை தடுக்க இரவு நேரத்தில் வாகன போக்கு-வரத்துக்கு தடைவிதிக்கப்-பட்டது.

    இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து கோவை நோக்கி பஸ் ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக இரவு 8.30 மணியள வில் சென்று கொண்டி ருந்தது. அப்போது 17- வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும் போது அங்கு உள்ள மரத்தின் மீது சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்திருந்தது.

    இதை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர்  சிறுத்தை மெதுவாக காட்டுக்குள் சென்றது. சிறுத்தை அடிக்கடி திம்பம் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
    கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று குறைந்ததால் மாவட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. இருப்பினும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியது.

    ஆனால் மக்கள் தொற்று குறைந்ததன் காரணமாக முக கவசம் அணிவதை மறந்து இயல்பாக சுற்றி திரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமா-நிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
    தமிழகத்திலும் குறைந்திருந்த தொற்று பாதிப்பு கடந்த 3 நாட்களாக மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.
     இதையடுத்து அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இனி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.

    ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்-படுத்தப்-பட்டுள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகரில் மக்கள் அதிகம் கூடும் ஈரோடு பஸ்நிலையம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஸ்வஸ்திக் கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூட கூடிய இடங்களில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அங்கு இருந்த மக்களிடம் கொரோனா தொற்று குறித்தும், முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்-கினர். மேலும் முககவசம் அணியாமல் சுற்றியவர்-களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர்.

     மேலும் பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்-கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்ற-ப்படு-கிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். முக கவசம் அணியாத ஊழியர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிந்த பின்பும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் இன்று காலை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்றும் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று மாலை திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக பலத்த மழை கொட்டியது. இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    பலத்த மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் ஒரு சில இடங்களில் ரோடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    இதனால் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிந்த பின்பும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் இன்று காலை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழை பெய்தால் வ.உ.சி. மார்க்கெட்டு பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் பார்க் ரோடு பகுதியில் இருந்து கருங்கல்பாளையம் பகுதி செல்லும் காமராஜர் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இந்த வழியாக தினமும் சேலம், நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் இருந்து ஏராளமான பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனம் வருகிறது. ரோடு சேறும் சகதியுமாக காணப்பட்டதால் பஸ்கள் ஊர்ந்து சென்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் சிலர் தட்டு தடுமாறி கீழே விழுந்தனர்.

    கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கொடுமுடி பகுதியில் நேற்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது.

    கொடுமுடி, ஒத்தக்கடை, வடக்கு புதுப்பாளையம், ஊஞ்சலூர், இச்சிப்பாளையம், தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், பழனிக்கவுண்டன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இரவு 11 மணி மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    கொடுமுடி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி ஜெனரேட்டர் ஏற்றிய மினி வேன் ஒன்று வந்தது. தாமரைப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டின் இடது புறத்தில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் மற்றும் உட்பட 2 பேர் காயத்துடன் உள்ளே சிக்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்மாபேட்டை, புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அத்தாணி, டி.என்பாளையம், கள்ளிபட்டி, பங்களாபுதூர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூறி கொண்டே இருந்தது.

    மேலும் பவானி, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் 10 மணி வரை சுமார் 7 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. கவுந்தப்பாடி பகுதியில் இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

    மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    இதே போல் கோபி, பெருந்துறை, அந்தியூர், நம்பியூர், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, அவல் பூந்துறை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் பசுமையாக காணப்பட்டது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. கோடை காலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மீ.மீட்டரில் வருமாறு:

    ஈரோடு 15, கொடுமுடி 108, பெருந்துறை 18, பவானி 56.6, கோபி 19, சத்தி 5, பவானிசாகர் 6.4, தாளவாடி 1.2, சென்னிமலை 6, மொடக்குறிச்சி 19, கவுந்தப்பாடி 18.4, எலந்த குட்டை மேடு 12.8, அம்மாபேட்டை 11.6, கொடிவேரி 8.2, குண்டேரிபள்ளம் 16.4, வரட்டு பள்ளம் 22.
    கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய லேப் டெக்னீசியன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் வந்த ராஜேந்திரன் தொப்பம் பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்தார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாவனிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராஜேந்திரனை தேடி வந்தனர்.

    இவ்வாறாக ஒருநாள், இரண்டுநாள் இல்லை தொடர்ந்து 7 நாட்களாக ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் நேற்று 8-வது நாளாக கீழ்பவானி வாய்க்காலில் ராஜேந்திரனை தேடும் பணி நடந்தது.

    தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நம்பியூர் மூணாம் பள்ளி என்ற இடத்தில் கீழ் பவானி வாய்க்காலில் ராஜேந்திரன் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.

    இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ராஜேந்திரன் உடல் அவரது உறவினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 240 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
    ஈரோடு:


    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 240 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 

    இதேப்போல் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79 ஆயிரம் மதிப்பில்  சக்கர நாற்காலி, 15 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 700 மதிப்பில் காதொலி கருவி, 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கப் பட்டன.

    மேலும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை, 84 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் வழங்கும் திட்டம் என மொத்தம் 240 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 26 லட்சத்து 26 ஆயிரத்து 275 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் 6.95 ஏக்கரில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் கயிறு மற்றும் பல்வேறு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது.

     இந்நிறுவனம் தேங்காய் நாரில் இருந்து கயிறு மற்றும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு சுமார் 20 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்-நிறுவனம் அமைக்கப் பட்டபோதே இந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கினால் காற்று, சுற்றுச்சூழல் மாசு உண்டாகும். மேலும் இந்த ஆலை கழிவு நீரினால் நிலத்தடிநீர் மாசு ஏற்படும் என்ற காரணத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி நடை பெற்ற கிராமசபா கூட்டத்தில் இந்த ஆலை இயங்க அனுமதிக்கத் கூடாது என தீர்மானம் நீறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில் மீண்டும் இந்த காயர் ஆலையை இயக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இச்சிப் பாளையம் சமுதாய நலகூடத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் ஈரோடு மாவட்ட தொழில்நுட்ப பொது மேலாளர் திருமூர்த்தி, உதவி இயக்குனர் (ஊராட்சி) உமாசங்கர், கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் காயர் ஆலை பங்குதாரர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் சார்பாக இந்த காயர் ஆலை மாதிரி ஓட்டம் நடைபெற்றபோது ஏற்ப்பட்ட தண்ணீர் மாசு, சுற்றுச்சூழல் மாசு போன்ற வற்றின் புகைப்பட ஆதா-ரங்கள் ஆர்.டி.ஓ முன்னி-லையில் காட்டப்பட்டு இந்த ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. 

    ஆலை நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் ஒரு சொட்டு கூட பயன்படுத்த மாட்டோம் என அதிகாரி-களிடம் தெரிவித்தனர். இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட அதிகாரி-கள் இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

    ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் க.ஜெயராமன் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் க.ஜெயராமன் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் முறையான ஆவணங்கள் மற்றும் தற்போதைய நடப்பு கோடை பருவத்திற்கு ஏற்புடையதாக இல்லாத 9 விதை குவியல்களுக்கு விதை விற்பனை தடை பிறப்பித்தார் இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும். 

    மேலும் விதை விற்பனை உரிமையாளர்கள் அனைவரும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் இவைகளை பராமரிக்க தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
     
    விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் பொழுது விதை உரிமம் எண், குவியல்எண், காலாவதிநாள்,அடங்கிய விபரங்களை விவசாயிகளின் கையெழுத்துடன் விதை விற்பனை ரசீதுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர் செ.நவீன் உடனிருந்தார்.   
    சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு  உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.  

    சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் கொரோனா காலங்களுக்கு பின்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 18-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்பு கட்டுபாடுகளுடன் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். 

    இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு  உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.  

    மேலும் தங்கம் 196 கிராம், வெள்ளி இரண்டு கிலோ 665 கிராம்  இருந்தது. உண்டியல் திறப்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஆய்வாளர் ரவிக்குமார், தக்கார் சந்திரசேகரன், கோமதி, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் உட்பட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணினர்.

    இதேபோல் பவானி செல்லியாண்டியம்மன் கோவில் உண்டியல் திறப்பு நேற்று மாலை செயல்-அலுவலர் (கூடுதல்-பொறுப்பு)அன்புதேவி, ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி,ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிரந்தர உண்டியல்கள் 4, தற்காலிக உண்டியல்கள் 5 என மொத்தம் 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 

    இதில் ரூபாய்நோட்டு, மற்றும் சில்லரை நாணயங்கள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 27ஆயிரத்து 408 காணிக்கையாக வரப்பெற்றது. இதில் தங்கம் 26 கிராம், வெள்ளி 434 கிராம் காணிக்கையாக வரப்பெற்றது.
    அம்மாபேட்டை அருகே இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அடைத்து பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே  இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அடைத்து பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் காடப் பநல்லூர் ஊராட்சியில் முத்துகவுண்டன் புதூர், பரசுராமன் காட்டூர் என இரு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இக்கிராம மக்கள்  40 வருடங்களுக்கு மேலாக 17 அடி அகலமுள்ள மேட்டூர் மேற்குக்கரை கிளை வாய்க்கால் வழியாக உள்ள சாலையில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வழித்தடம் தனியாருக்கு சொந்தமான நிலம் என கூறி 40 அடி நீளத்துக்கு அப்பாதையை வெட்டி ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டதால் பொது மக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப் பட்டனர். 

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை நடத்தினர். கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆவணங் களின் அடிப்படையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

     இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த மார்ச் மாதம் 14&ந் தேதி துண்டிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரு கிராமங்களுக்கு செல்ல சாலை அமைக்கப் பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே மீண்டும் கற்கள், மரக்கட்டை களை அடுக்கி வைத்து தடை ஏற்படுத்தினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது  அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பவானி போலீஸ் நிலையத் தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை டவுன் பஞ்சாயத்துக்குட்பட்டது மாரியம்மன் கோவில் வீதி. இந்த வீதி சென்னிமலை& காங்கேயம் மெயின் ரோட்டி-னையும், சென்னிமலை கோவிலுக்கு செல்லும் மலை அடிவார ரோட்டினையும் இணைக்கும் முக்கியமான ரோடு.  

    இந்த ரோடு பழைய ஆட்டோ, பழைய இரும்பு பொருட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்-படுகிறார். 

    மேலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ரோட்டின் அருகில் தான் வாரச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்த  முடியாமல் நிலை தடுமாறி வருகின்றனர். வாரச்சந்தை நடக்கும் நாட்களில் இந்த ரோட்டில் ஆக்கிரமிப்-புகளால் நடந்து செல்ல கூட இடம் இல்லாந நிலை உள்ளது. 

    எனவே இந்த ஆக்கிரமிப்-புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இன்று முதல் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது.
    சத்தியமங்கலம்:

    இன்று முதல் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது.


    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு  சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேலும்  கர்நாடகா மாநில பக்தர்கள் என  தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழ கத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன், பழனி முருகன் கோவில் மற்றும் பண்ணாரி யம்மன் கோவில் உள்பட 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும்  திட்டம்  இன்று தொடங்கி வைக்கப் பட்டது. இந்த திட்டத்தை சென்னையில் அமைச்சசர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத் தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலிலும் இன்று காலை இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. 
    இன்று கோவிலுக்கு ஏராள மான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு பொங்கல், புளியோதரை சாதம், லட்டு மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வரிசையில் நின்று இலவச பிரசாதத்தை வாங்கி சென்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச பிரசாதம் வழங்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில்  முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது.

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா  உருமாற்றம் அடைந்து    மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது.  முதலில் கொரோனா தாக்கம் தொடங்கியதும் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் குறிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்த ப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 2 பேர் மூலம் முதன் முதலில் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வேகமாக பரவியதால் வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

    முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இதை பெரும் பாலானோர் காதில் வாங்கிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தனர். 

    இதனை அடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரும் பாலானோர் முக கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தாக்கமும் குறைய தொடங்கியது. 

    பின்னர் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3&ம் அலை ஏற்பட்டு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.  இந்த இடத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப் பட்டன.
    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங் கியது. இதனை அடுத்து வழக்கம்போல் பொது மக்களில் பெரும்பாலா னோர் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொது இடங்களுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்றும் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் முககவசம் அணியாதவர்களுக்கு  ரூ.500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

     பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் ஆங்காங்கே சோதனை செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. அரசு அறிவித்தபடி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் பணி நமது மாவட்டத்தில் தொட ங்கி விட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இன்னும் நாட்கள் செல்ல செல்ல அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றார்.
    ×